கோயம்புத்தூரைச் சேர்ந்த கற்பகம் இன்னோவேஷன் மையம் வழங்கும் 'ஸ்டார்ட் அப் கான்க்ளேவ்'

0

தொழில் முனைவர்கள் மற்றும் மாணவர்களுக்கான 'ஸ்டார்ட் அப் கான்க்ளேவ் 2016' (Startup Conclave), கோயம்புத்தூரில் பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கற்பகம் இன்னோவேஷன் மையத்தால் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் ஐம்பதுக்கும் மேலான பேச்சாளர்கள், நூறுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், பத்துக்கும் மேற்பட்ட இன்கூபேட்டர்ஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொழில்முனை நிறுவனங்கள் தங்களது வர்த்தக எண்ணத்தை வெளிப்படுத்தவும், சரியான முதலீட்டார்களை அணுகவும், தேர்ந்த வழிகாட்டிகள், ஒத்த கருத்துடைய இணை நிறுவனர்கள் மற்றும் தகுதியான பணியாட்கள் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பாகவும் இது அமையும். தேர்ந்த தொழில்முனைவர்களின் அனுபவப் பயணம் மற்றும் தொழில் முனைவு பற்றிய பயிற்சிக் கருத்தரங்கு ஆகியவையும் இடம்பெறும். தொழில்முறை சேவை நிறுவனங்கள் தங்களது சேவையை வெளிப்படுத்த இது ஒரு தளமாகவும் அமையும்.

தொழில்முனை நிறுவனங்களுக்கு இந்த கருத்தரங்கில் வழங்கப்படும் வாய்புகள்:

  • முதலீட்டாளர்கள், இணை நிறுவனர்கள் என பல்வேறு தரப்பினருடன் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம். இதைத் தவிர தங்களுக்குத் தேவைப்படும் தகுதியான பணியாளர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். 
  • தொழில் முனை நிறுவனங்கள் தங்களது சேவையை முன்னிறுத்தும் விதமாக அவர்களுக்கு ஸ்டால் ஒதுக்கப்படும். 
  • தங்களின் தொழில்முனை நிறுவனத்தில் உள்ள வாய்ப்புகள், நிறுவனத்தை பற்றி பார்வையாளர்களிடம் பகிரும் வாய்ப்பும் அளிக்கப்படும்.
  • நெட்வொர்கிங் மதிய உணவிற்கான அழைப்பு மற்றும் பங்கேற்கப் பதிவு செய்துள்ள தொழில்முனை நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுடன் உரையாட ஒரு நபருக்கான வாய்ப்பு.
  • கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என தொழில்முனைச் சேவை அளிப்போர்களுடனான வர்த்தக சந்திப்பு.
  • சமூக் வளைதளம் மற்றும் நிகழ்வுக்குப் பின் வெளியிடப்படவுள்ள ஈ புத்தக வெளியீட்டில் இடம் பெறும் வாய்ப்பு.
  • நிபுணர்களுடனான சந்திப்பு. 
  • பத்திரிக்கையாளருடன் தங்களின் தொழில்முனை நிறுவனத்தை பற்றி பகிரும் வாய்ப்பு.

Startup Conclave' 2016 பற்றி மேலும் விவரங்களுக்கு

தொடர்புக்கு :- Dr.பீ நாகராஜ் ( 8122148500) / எபின் எப்ரேம் (mail2ebine@gmail.com,8608871834)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்