பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி-மேகன் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஒரே இந்திய சமூக ஆர்வலர்!

2

23 வயதான சுஹானி ஜலோடா என்கிற ஆர்வலர் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். மும்பையைச் சேர்ந்த மைனா மஹிலா ஃபவுண்டேஷன் நிறுவனரான இவர் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் திருமணத்தில் பங்கேற்க அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பட்டியலில் இடம்பெற்ற நான்கு பெண்களில் ஒருவராவார்.

”இந்தத் திருமணத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகுந்த உற்சாகமளிக்கிறது. இது ஒருவருக்கு வாழ்நாளில் ஒரே ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாகும்,” என்றார் சுஹானி.

மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் இந்நிறுவனம் மட்டுமே இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்க்லே திருமணத்தில் கலந்துகொண்ட யூகேவிற்கு வெளியே இயங்கும் ஒரே நிறுவனமாகும். கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 1,200 பேரில் சுஹானியுடன் பணியாற்றும் டெபோரா தாஸ், அர்ச்சனா ஆம்ப்ரே, இமோஜென் மேன்ஸ்ஃபீல்ட் ஆகியோரும் அடங்குவர் என ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.

2016-ம் ஆண்டிற்கான கிளாமர் பத்திரிக்கையின் சிறந்த கல்லூரிப் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் சுஹானி உரையாற்றியபோது பார்வையாளர்களில் ஒருவராக மேகன் மார்க்லே இருந்தார். சுஹானியின் ஆர்வத்தையும் நோக்கத்தையும் கண்டு வியந்த மேகன் அவருடன் பேசுவதற்காக மும்பை வந்திருந்தார்.

”அப்போதிருந்து அவர் எங்களுக்கும் எங்களது முயற்சிக்கும் வழிகாட்டி வருகிறார்,” என்றார் சுஹானி.

இந்தத் தம்பதி தங்களது திருமணத்திற்கு பரிசளிக்க விரும்புபவர்கள் அதற்கு பதிலாக தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க பரிந்துரைத்தனர். அவர்கள் தேர்ந்தெடுத்த ஏழு தொண்டு நிறுவனங்களில் சுஹானியின் நிறுவனமான மைனா நிறுவனமும் ஒன்றாகும் என Vogue தெரிவிக்கிறது. சுஹானி மற்றும் அவரது குழுவினருக்கான ஆடைகளை வடிவமைத்த ரா மேங்கோ-வைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சஞ்சய் கார்க் குறிப்பிடுகையில்,

புடவை என்பது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும். வெவ்வேறு நிறங்கள், துணிகள், வடிவமைப்பு (motifs) ஆகியவற்றுடன் புடவைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. 

ஆடம்பரமான இந்த திருமணம் விண்ட்சர் கோட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுஹானியும் அவரது குழுவினரும் இந்திய வடிவமைப்புடன்கூடிய மென்மையான வெளிர் நிறத்திலான பனாரஸ் மற்றும் சந்தேரி புடவைகளுடன் காட்சியளித்தனர். பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL