பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சென்னையில் நடக்கவிருக்கும் 'ஸ்டார்ட் அப் சக்தி'

0

தொழில்முனையும் மகளிருக்கு ஸ்டார்ட் அப் பற்றின சந்தேகங்கள் குறித்தும், சென்னையில் அவர்களுக்கு இருக்கும் ஆதரவு அமைப்புகள் குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் அடுத்த வாரம் நடக்கவிருக்கிறது. ஸ்டார்ட் அப் லீடர்ஷிப் சென்னை நடத்தும் இந்த "பெண்கள் தொழில்முனைவு நிகழ்ச்சி" (Women Entrepreneurship Event) "ஸ்டார்ட் அப் சக்தி" (Startup Sakthi- Power of Women Entrepreneurship) பெண் தொழில்முனைவோர்களின் சக்தியை உலகிற்கு வெளிப்படுத்த நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.  

விழாவில் கலந்து கொள்ளும் பெண் சாதனையாளர்கள்

வெவ்வேறு துறையில் சாதித்த தலைசிறந்த இளம்பெண் சாதனையாளர்கள் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். 

'இந்திய மகளிர் தொழில்முனைவோர்கள் நிறுவனத்தின் நிறுவனர் 'மகாலட்சுமி சரவணன்', ஜீயஸ் கேரியர் மற்றும் பர்ஃபார்மன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனரான 'சாதனா சோமசேகர்', இ.ஜெட் வித்யா (EZ vidhya) நிறுவனத்தின் நிறுவனரான, 'சித்ரா ரவி' மற்றும் சென்னை லைவ் எப்.எம்யின் வானொலி தொகுப்பாளரான 'ரூபி ஆன்' ஆகியோர் சிறப்பு விருதினர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்ற உள்ளனர். பெண்கள் தொழில்முனைவு மேம்பாடு அமைப்பின் நிறுவனர் காதம்பரி சதீஷ் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளார். 

கலந்துரையாடல் தலைப்புகள்

கீழ்காணும் ஆறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடக்க இருக்கிறது:

* தொழில் முனையும் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள்.

* உடல் மற்றும் மன நலம் மீது இருக்க வேண்டிய அக்கறை.

* தொழிலில் ஈடுபடுவோர்களிடம் ஏற்படுத்தும் பிணைப்பின் முக்கியத்துவம்

* தடைகளை தகர்த்து துணிந்து பணிசெய்தல்.

* குடும்பத்தையும் தொழிலையும் சமமாக பார்த்துக்கொள்ளுதல்.

* மகளிருக்கான உரிமைகள் தடுக்கப்படுகிறதா? அந்த சமயங்களை எப்படி கையாளுவது?

விழாவின் மற்ற அம்சங்கள்

குழு விவாதம், கலந்துரையாடல், கேள்வி-பதில் அமர்வு  மற்றும் பதிவு செய்துள்ளவர்களில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட மூன்று ஸ்டார்ட் அப்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்படும்.

வருகின்ற ஜூலை 2ஆம் தேதி சென்னையில் உள்ள @தி வர்க்ஸ், அச்சென்டாஸ் டெக் பார்க்-யில் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை, இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது.

இந்நிகழ்வில் பங்குகொள்ள விரும்புவோர், தங்களை பதிவு செய்து கொள்ள:  இங்கே க்ளிக் செய்யவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்:  91-9840857167 (ப்ரீத்தி) / +91-9710931622 (சுரேஷ்).

தமிழ் யுவர்ஸ்டோரி இந்நிகழ்விற்கு ஆன்லைன் பார்ட்னர் ஆகும்.