நிறுவனர்களிடம் இருந்து எல்லாம் துவங்குகிறது என்கிறார் செகோயா கேபிடல் நிர்வாக இயக்குனர் ஷைலேந்திர சிங்

0

செகோயா கேபிடலின் ஷைலேந்திர சிங்கைப் பொருத்தவரை முதலீடு செய்ய சரியான அல்லது தவறான பருவம் என்றும் எதுவும் இல்லை. இதற்கு தேவைப்படுவதெல்லாம் ஈடுபாடு மிக்க நிறுவனர், சிறந்த வர்த்தக ஐடியா மற்றும் அதே அளவு ஈடுபாடி மிக்க குழு.

டெக்ஸ்பார்க்ஸ் 2015 நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த உரையாடலில் போத, உணவுத்தொழில்நுட்பம் மற்றும் ஹைப்பர் லோகல் துறைகளில் முதலீடு மந்தமாகி இருப்பது பற்றி கேட்டதற்கு அவரது அறிவுறை தெளிவாக இருந்தது.

ஷரத்தா சர்மாவுடன் ஷைலேந்திர சிங்
ஷரத்தா சர்மாவுடன் ஷைலேந்திர சிங்

“நிச்சயம் சில கரு மேகங்கள் திரண்டிருக்கின்றன. ஆனால் வரப்போவது வெறும் தூறலா அல்லது சூறாவளியா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எதற்கும் குடையை தயாராக வைத்திருப்பது நல்லது”.

அதன் பிறகு உரையாடல் தொழில்முனைவோர் நிதி திரட்டலை எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி நகர்ந்தது. குறிப்பிட்ட காலத்தில் எதில் ஆர்வம் செலுத்துகின்றனர் என்பதை வைத்துக்கொண்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அளவிட முற்படக்கூடாது என்கிறார் ஷைலேந்திர சிங். நுகர்வோர் மாறிக்கொண்டே இருக்கின்றனர். எனவே அவர்களின் தேவையை நிறுவனங்கள் சோதனை முறையில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

சரி, ஷைலேந்திர சிங் குறிப்பிட்ட ஸ்டார்ட் அப்களில் எதனடிப்படையில் முதலீடு செய்கிறார். அவரைப்பொருத்தவரை இது நிறுவனரில் இருந்து துவங்குகிறது.

“இளம் வயதில் நான் துவங்கிய போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்தன. இந்த சிந்தனையுடன் தான் பெரும்பாலான இளைஞர்கள் துவங்குகின்றனர். ஆனால் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை அளவிட முடியாது என்றே நான் நம்புகிறேன். அதே போல ஸ்டார்ட் அப்களுக்கான காரணிகளையும் அளவிட முடியாது”.

நிறுவனர் குழுவின் ஊக்கம், நெருக்கம், தெளிவு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றையே அவர் கவனிக்கிறார். இந்த நிறுவனத்தில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறோமா போன்ற கேள்விகளை கொண்ட செயல்முறையாக இதை அவர் விவரிக்கிறார்.

அவரைப்பொருத்தவரை ஒரு நிறுவனம் உருவாகும் போது அதில் முதலீடு செய்வது பலருக்கு ஈர்ப்புடையதாக இருக்கிறது, ஆனால் அதன் பின்னே இருக்கும் கடின உழைப்பை அவர்கள் உணர்வதில்லை.

செகோயாவுடன் பத்தாண்டுகளாக இருக்கும் ஷைலேந்திர சிங்கால் எளிதாக சந்தேகமான ஐடியாக்களை கண்டறிய முடியும். எப்படி என்று கேட்டால், மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள் என்று பதில் அளிக்கிறார். ஒரு முதலீட்டாளராக நிறுவனரை நம்ப வேண்டும் என்கிறார் அவர்.

ஐஐடி மற்றும் ஐஐஎம் ஈர்ப்பு

ஐஐடி மற்றும் ஐஐஎம் களில் படித்தவர்களுக்கு அதிகம் நிதி கிடைப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. இதை அவர் மறுக்கிறார்.

"நான் இதை ஏற்க மறுக்கிறேன். ஃப்ரி சார்ஜின் குணால் ஷா தத்துவ பாட பட்டதாரி. பிராக்டோவின் ஷசாங்க் என்.ஐ.டி -கே பட்டதாரி. ஹெல்ப்சாட்டின் அங்கூர் சிங்க்லா ஒரு வழக்கறிஞர். ஒயோ ரூம்சின் ரித்தேஷ் கல்லூரிக்கே சென்றதில்லை. உங்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பது தான் என் நம்பிக்கை” என்கிறார் அவர்.

எனது கற்பனையில், ஸ்டார்ட் அப் அமைப்பு என்பது ரேஸ் டிராக்கை போன்றது நிறுவனர்கள் தடகள வீரர்களைப்போன்றவர்கள். சிறந்த நிறுவனர்கள் அடுத்த பெரிய விஷயத்தை தேடிச்செல்லும் ஈடுபாடு மீது அக்கறை கொண்டுள்ளனர்.

செல்வாக்கு மிக்க துறைகள்

பருவங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இப்போது முதலீட்டை ஈர்க்கும் துறைகள் எவை என்று அவரிடம் கேட்டோம். குறிப்பிட்ட துறை அதன் நிறுவனர் தலையில் ஈர்ப்புடையதாக இல்லாவிட்டால் அது உண்மையில் ஈர்ப்புடையதே அல்ல. 2007 இல் ஃபேஷன் பற்றி பேச்சாக இருந்தது. இன்று வேறு ஒன்றாக இருக்கிறது. எனினும் தனது தேர்வை கூற வேண்டும் என்றால் மொபைலில் முதலீடு செய்வேன் என்கிறார். இந்த துறை எளிமையாக இருந்தாலும் நல்ல வளர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

இரண்டாவது துறை ஃபின்டெக். இதில் பேமெண்ட் வங்கிகள் அறிமுகத்தால் கட்டுப்பாடுகள் தளர்ந்துள்ளது. ஒரு சில ஸ்டார்ட் அப்களை மாற்றங்களுக்கு உட்பட்டவை என்கிறார். அதாவது மற்ற நிறுவனங்களை போன்றவை ஆனால் திருத்தப்பட்ட வர்த்தக முறையை கொண்டிருப்பவை. இது போன்ற நிறுவனங்களை உருவாக்கக்கூடிய சந்தையாக இந்தியா இருக்கிறது. முடிந்து விட்டதாக கருதப்படும் துறைகள் உண்மையில் முடிந்துவிடவில்லை என்று அறையில் கூடியிருந்த தொழில்முனைவோரிடம் அவர் சொல்கிறார்.

பார்வையாளர்களில் ஒருவர் கேட்கிறார்; வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப்கள் அதிக நிதியை செலவிட ஊக்குவிக்கின்றனவா? பலரது விஷயங்களில் இது உண்மை தான் என்றாலும், ஒரு நிறுவனம் இன்னும் எந்த அளவு உருவக்கப்பட வேண்டும் என்பதை பொருத்தும் இது அமையும் என்று ஷைலேந்திர சிங் பதில் தருகிறார்.

"உங்களால் நிதி திரட்ட முடியாவிட்டால் நீங்கள் பின் தங்கி விடுவீர்கள். அதிலும் குறிப்பாக நீங்கள் செயல்படுத்த வேண்டிய பிரிவில் இருந்தால். டார்வின் தத்துவம் இங்கு செயல்படுகிறது” என்கிறார் அவர்.

தடகள வீரர்கள் உதாரணம் பற்றி அவர் மேலும் விவரிக்கிறார்;

"உங்கள் முதலீட்டாளர் வேகமாக ஓடலாம் என்று சொல்லலாம்.(முதலீட்டை விரிவாக்கத்திற்கு பயன்படுத்துவது). அப்போது நாம் மாற்றிக்கொண்டு மேலும் தசைகளை வலுவாக்கி கொள்வோம்”.

ஃப்ரிசார்ஜ், ஹஸ்ட் டயல், பிராக்டோ, பெப்பர் டேப், ஜூம்கார் போன்ற நிறுவனங்களுக்கு செகோயா நிதி அளித்துள்ள நிலையில், பொருட்படுத்தக்கூடிய வல்லுனரிடம் இருந்து தான் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ஆலோசனைகளை கேட்கும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது.