அமெரிக்கா செய்யாததை இந்தியா செய்துள்ளது: மூன்றாம் பாலினத்தினர், தாங்கள் விரும்பிய பொது கழிவறையை, உபயோகிக்க அனுமதி!

1

திருநங்கைகளுக்கான பொது கழிவறை பற்றிய விவாதம், அமெரிக்காவில் பலகாலமாகத் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், இந்தியாவிலும் இதுபற்றிய விழிப்புணர்வு பரவியது. இதையடுத்து, மத்திய அரசு, திருநங்கையர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் (ஆண்கள் அல்லது பெண்களுக்கான) கழிப்பறையை உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

“பல இடங்களில், மூன்றாவது பாலினத்தவர்கள் சமூகத்தில் இருந்து தள்ளிவைக்கப் படுகின்றனர். ஸ்வச் பாரத் மிஷன் (க்ராமீன்) திருநங்களை அங்கீகரித்து, அவர்களின் நிலையை உயர்த்தி சமமான குடிமக்களாக்க பாவித்து, கழிவறைகள் பயன்படுத்த வகை செய்யவேண்டும். அவர்கள் விரும்பும் பொது கழிப்பறைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவேண்டும்.”

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், அனைத்து மாநிலங்களும் இதை உறுதியாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. அனைத்து இடங்களிலும் கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது, சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. "Youth Ki Awaaz" என்ற இணையதளத்தில் வெளியான செய்தியில், "WaterAid"ன் அறிக்கைபடி 2015ல் மொத்தம் 60.4 சதவீத இந்தியர்கள் சுத்தமும், பாதுகாப்புமாற்ற கழிவறையின்றி இருப்பதாக குறிப்பிடுகிறது.

இந்த புள்ளிவிவரம், மற்ற நாடுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியாவில் தான் அதிகமாகத் திறந்தநிலையில் மலம் கழிக்கும் நிலை உள்ளது என்பதைக் காட்டுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், இந்திய அரசு 2014ல் இருந்து, கழிவறைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இதுமற்றும் இல்லாமல், அரசாங்கத்தின் நலத்திட்டங்களிலிருந்து மூன்றாம் பாலினத்தினர் விடுபடாமலும், அவர்களுக்கும் அனைத்துத் திட்டங்கள் கிடைக்கவும் முழு முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் இந்தத் திட்டம் வெளியான அதே நேரத்தில், அமெரிக்காவின், நார்த் கரோலினா என்ற இடத்தில், திருநங்கைருக்கான கழிவறை திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குறிய அந்தத் திட்டத்தில், திருநங்கையர், தங்களது பிறப்பு சான்றிதழில் பதிவு செய்த பாலினத்தின் அடிப்படையிலேயே கழிவறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றனர். இந்தத் திட்டம் பல குறைகளைக் கொண்டு, மூன்றாம் பாலினத்தினரின் உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் எதிராக இருந்தது. பலமுறை இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தும், அது முழுமை அடையாமல், திருநங்கையரை வேறுபடுத்துவதாகவே இருந்தன.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்ததில், மூன்றாம் பாலினரின் பங்கு அதிகமாக இருந்ததையும், இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து ’தி வையர்’ என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, 

“இந்தப் புது திட்டத்தில், மூன்றாம் பாலினத்தினரை ஆதரிக்கும் விதமாக, அவர்களது முயற்சிகளையும், சாதனைகளையும் ஊக்குவித்து, அவர்களை வேறுபடுத்தாமல், நம் சமுதாயத்தில் ஒருவராக எண்ணி, அவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளையும் அங்கிகாரத்தையும் மற்ற பாலினத்தைரைப் போல் எந்தச் சங்கடமும் தயக்கமுமின்றி பயன்படுத்த வழி செய்ய வேண்டும்,”

என்று குறிப்பிட்டிருப்பதாக வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம், இந்தியாவின் மூன்றாம் பாலினத்தினறைக் காக்கும் விதத்தில் மிகப்பெரிய செயல் ஆகும். ஆயினும் திருநங்கைகளின் உரிமைகள் குறித்து இந்தியா இன்னும் பல முயற்சிகள் செய்ய வேண்டும்.

கட்டுரை: Think Change India