கோடிங்கில் நீங்கள் கோடு போட்டு ரோடு போட உதவும் 'ப்ராக்டிகல் கோடிங்'

0

ஆண்டிராய்டு, ஐஓஎஸ், இணையம் ஆகியவற்றில் இயங்கும் செயலிகளை தயாரிக்கும் திறமைக்கு, தேவைகள் தற்போது அதிகரித்து வருகின்றது. தொலைபேசி மற்றும் இணையத்தை மையமாக வைத்து பலர் தொழில் முனைவதால், தற்போது, அவை சம்மந்தப்பட்ட வேலைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த ஒரு குறிப்பை மனதில் வைத்து, "ப்ராக்டிகல் கோடிங்" கை, அதன் நிறுவனர்கள் துவங்கியுள்ளனர்.

இது கோடிங் செய்ய விரும்புவோருக்கு சரியான வழிகாட்டிகளை அறிமுகப்படுத்தும் தளமாகும். இதில் 100க்கும் மேற்பட்டோர் வழிகாட்டிகளாக உள்ளனர். அனைவரும் தகுதி வாய்ந்த பொறியாளர்கள், சிலர் சொந்தமாக தொழில் முனைவோர், அல்லது, அயல் நாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆவர்.

பிராக்டிகல் கோடிங்கின் கதை :

பசவராஜ் ஹம்பலி ஒரு ஆண்டிராய்டு டெவலபர், மற்றும் கண்ஹேரிஎடு.காம் நிறுவனர். மேலும் டிராப்லைன் என்ற நிறுவனத்தில் சிறிது காலம், ஆண்டிராய்டு டெவலபராகவும் பணிபுரிந்துள்ளார். அந்நேரத்தில், கோடிங்கில், அனுபவமற்றோர், மற்றவர்களுக்கு கோடிங் கற்றுத்தருவதை கவனித்துள்ளார். அப்போது தானும், ஆண்டிராய்டு கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு சிறிது காலம் கற்றுக்கொடுத்துள்ளார். அந்நேரத்தில் தன்னால், முழுநேர வேலை மற்றும் கற்றுத்தரும் வேலை இரண்டையும் சரிவர கவனிக்க முடிந்ததை உணர்ந்துள்ளார். அப்போது தான் பிராக்டிகல் கோடிங் பற்றிய எண்ணம் அவரது மனதில் உதித்தது. சந்தையில் கற்றுக்கொடுப்போருக்கான தேவை இருந்ததை உபயோகித்துக் கொள்ள நினைத்தார்.

பிவிபி சிடிஐஈ என்று ஹுப்ளியில் உள்ள ஒரு சிறுதொழில் வளர்சிக்கான இடத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில், பசவராஜ் மற்றும் அவரது சகோதரி சரோஜா பணிபுரிகின்றனர். சரோஜா தனது ஆர்வத்தின் மூலம் கோடிங் கற்று, தற்போது பிராக்டிகல் கோடிங்கில், வாடிக்கையாளர் சேவை பிரிவை கவனித்து வருகின்றார்.

மேலும் இந்நிறுவனத்தை பற்றி :

ப்ராக்டிகல் கோடிங் அளிக்கும் அனைத்து படிக்கும் பொருட்களும் சிறந்த முறையில் வரையறுக்கப்பட்டு கட்டமைக்கபட்டுள்ளது. பயிற்சி அளிப்போர் வகுப்புகளை நிச்சயிக்கப்பட்ட நேரங்களில் கொடுக்கின்றனர். பெரும்பான்மையான வகுப்புகள் வார இறுதிகளிலும், கூகிள் ஹாங் அவுட் மூலமும், நடை பெறுகின்றது. மேலும், ஆசிரியர்களுக்கு அவர்களிடம் பயிலும் மாணவர்கள், அவர்கள் கற்பிப்பதை பொருத்து மதிப்பெண்கள் அளிக்கின்றனர். ஒரே நேரத்தில், ஒரு ஆசிரியர் 3 மாணவர்களுக்கு கற்பிக்கின்றார். மேலும் அனைத்து ஆசிரியர்களும் 10திற்கு 9 மதிப்பெண்கள் பெற்றிறுப்பதாக பசவராஜ் பெருமையாக கூறுகின்றார்.

இந்நிறுவனத்தில் ஆசிரியராக இனைவோருக்கென, தேர்வு செய்யும் முறை உள்ளது. மேலும் நேர்முகத்தேர்வும் உள்ளது. ப்ராக்டிகல் கோடிங்கில் பணிபுரிவோர் தொகுப்பினை பார்க்கையில், தரத்தினை உறுதிசெய்யும் பொறியாளர் முதல், தொழில் முனைவோர் , மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் உள்ளனர்.

மேலும் காமன்புளோர்.காம் இன் இணை நிறுவனர், திரு லலித் மங்கல் இந்நிறுவனத்தின் ஆலோசகராக இணைந்துள்ளார்.

பசவராஜ் தனது எண்ணம் வெற்றி பெறுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதாக நம்புகின்றார். அமெரிக்காவில் உள்ள "கோட்அகாடமி" 24 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஒரு ஆய்வின் படி, "66% தரத்தினை உறுதி செய்யும் பொறியாளர்கள், தற்போது வாங்கும் சம்பளத்தை காட்டிலும், 2 மடங்கு அதிகம் பெற வாய்புகள் அவர்களுக்கு கோடிங் தெரிந்திருந்தால் உண்டு" என தெரிய வந்துள்ளது.

படிப்பின் முடிவில், மாணவர்கள் கட்டமைக்கும் ஒரு செயலி, ஆப் ஸ்டோரிலோ அல்லது இணையத்திலோ, தொகுக்கப்பட்டு, அதன் "சோர்ஸ் கோட்" , கிட்ஹப்பில் இவர்கள் உழைப்பின் சான்றாக தொகுக்கப்படும் என்கிறார் பசவராஜ்.

நிறுவனத்தின் எதிர்காலம் :

ப்ராக்டிகல் கோடிங் தற்போது முயற்சித்து பார்க்க பல வாய்ப்புகள் உள்ளன. இதே போன்று ஆசிரியர் வைத்து பயிற்சி அளிக்கும் முறையில், இசை மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கலாம். மேலும் ஐடித்துறை தற்போது வளர்ச்சி அடைந்து வரும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் இவர்கள் தங்கள் கிளைகளை பரப்பலாம். தற்போது அவர்கள் முன் உள்ள சவால், சரியான ஆசிரியர்களை தேர்வு செய்வது. அதிகப்படியான மாணவர்களை ஈர்ப்பதன் மூலம் அதிகமான பயிற்சியாளர்களை ஈர்க்க முடியும்.

பசவராஜ் தற்போது, அவர் முன் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் முயற்சித்து பார்த்து பின் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக கூறுகின்றார். மேலும் இவரது போட்டியாளர்கலான, "ஆக்காடா கில்ட்" மற்றும் "எடுரேகா" பார்த்து கலக்கமடைய வில்லை என்றும் கூறுகிறார். தரமான ஆசிரியர்களை நியமிப்பது மேலும் எங்கள் கற்ப்பிக்கும் மற்றும் கற்கும் முறை மூலம், தனித்தன்மை பெற இயலும் என்கிறார் அவர்.

இணையதள முகவரி: Practical Coding