ஹிந்தி பேசியதால் அவமானப்படுத்தப்பட்ட சத்யபால், 6 ஆங்கில நாவல்களை எழுதி பிரபல எழுத்தாளர் ஆன கதை!

1

பீஹார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள மல்ஹரி என்ற கிராமத்தில் இருந்த வந்த சத்யபால் சந்திரா; வறுமை, இயலாமை மற்றும் வன்முறையில் நடுவே வளர்ந்தவர். அவரின் பெற்றோர் வருமானம் ஈட்டவே கஷ்டப்பட்ட நிலையில், சத்யபாலை படிக்கவைக்க தடுமாறினர். நக்சலைட் ஆதிக்கம் கொண்ட அந்த சமயத்தில் பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஜார்கண்டில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படித்தார் சத்யபால். அரசுப்பள்ளியில் படிப்பை முடித்த அவருக்கு குடும்பத்தின் நிதிநிலை பற்றி நன்கு புரிந்ததால் அவர்களுக்கு கூடுதல் சுமை அளிக்க விரும்பமால் இருக்கின்ற வசதியில் வாழ்ந்தார். 

படிப்பில் ஆர்வம் இருந்ததால், பாட்னாவில் உள்ள அனுக்ரஹ் நாரயண கல்லூரியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்தார். ஹிந்தி வழியில் பாடங்களை படித்த சத்யபாலுக்கு ஆங்கில மொழி எட்டாக்கனியாக இருந்தது. டெல்லியில் அவர் ஒருமுறை பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற போது, அவர் ஹிந்தியில் பேசியதை கண்டு அங்கு ஒருவர் அவரை கேலி செய்துள்ளார். இந்த நிகழ்வால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட சத்யபால், ஆங்கிலத்தை எப்படியாவது ஆறு மாதங்களில் கற்க முடிவெடுத்தார்.

சத்யபால் டெல்லியில் பணிபுரிந்து கொண்டே ஆங்கில மொழியை கற்றார். எப்படியோ மொழியில் நல்ல புலைமை பெற்றதும் ஆங்கிலத்தில் புத்தகம் எழுத தீர்மானித்தார். ’தி மோஸ்ட் எலிஜிபிள் பாச்சலர்’ என்ற நாவலை 2011-ல் எழுதத்தொடங்கினார். புத்தகம் நன்கு விற்க தொடங்கி, சத்யபால் பிரபல எழுத்தாளர் ஆனார். அதன் பின்னர் 6 நாவல்கள் எழுதி அடுத்த ஆண்டே வெளியிட்டார். தன் நண்பர்களுடன் இணைந்து ‘OnlyLoudest’ என்ற ஆன்லைன் தளம் மற்றும் கேளிக்கை போர்டலை தொடங்கினார்.

சத்யபால், எழுத்தாளர் மட்டுமின்றி பாடலாசிரியர், கதையாசிரியர் மற்றும் இயக்குனர் ஆகும். தன் வன்முறை நிறைந்த பின்னணியை தன் வாழ்க்கையில் தடையாக கருதாமல் தனக்கான பாதையை அவரே வகுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய சத்யபால் பலருக்கு ஊக்கமாக இருக்கிறார்.

கட்டுரை: Think Change India