யுவர்ஸ்டோரி சென்னை சந்திப்பு: உங்கள் ஸ்டார்ட்-அப் கதையை எங்களிடம் பகிர்ந்து கொள்ள வாருங்கள்!

1

யுவர்ஸ்டோரி உங்கள் நகரத்தை தேடி வருகின்றது... வாருங்கள் உங்கள் ஸ்டார்ட்-அப் கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நீங்கள் உங்கள் கதையை ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இதுதான் சரியான சமயம். யுவர்ஸ்டோரி உங்கள் கதையை வரும் மார்ச் 23 ஆம் தேதி மதியம் நாடெங்கிலும் டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களுரு, மும்பை, கொல்கத்தா, அகமதாபாதா உள்ளிட்ட பல நகரங்களில் கேட்க வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் உள்ள தொடக்க நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு உங்கள் அனுபவங்களை, சந்தேகங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். இரண்டு மணி நேர இந்த சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்ள உங்கள் பெயர் மற்றும் விவரங்களை கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.

சந்திப்பின் முக்கிய அம்சங்கள்

ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் ஸ்டார்ட்-அப்’ கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்களை பற்றியும் தங்கள் நிறுவன சேவை/தயாரிப்பு பற்றியும் கூட்டத்தில் வெளிப்படுத்த வாய்ப்பு வழக்கப்படும். உங்களை பேட்டி கண்டு உங்கள் ஸ்டார்ட்-அப்’ கதை YourStory.com இல் வெளியிடப்படும்.

சந்திப்பு விவரம்:

தேதி: 23/03/2017

யுவர்ஸ்டோரியின் குழு உறுப்பினரின் அறிமுகத்தோடு சந்திப்பு தொடங்கும்

வல்லுனர் ஒருவரின் உரை

Profiles.yourstory.com பற்றிய ஒரு அறிமுகம்

டீ ப்ரேக்

3-5 நிமிடங்கள் தயாரிப்பு/சேவை பற்றிய அறிமுகம்

தொடர்புகள் ஏற்படுத்துதல்

சந்திப்பில் பங்குபெற விண்ணப்ப படிவம்: Yourstory Meetup