மனித கடத்தலில் இருந்து 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காப்பாற்றிய பெண்மணி!

0

மனித கடத்தல் என்பது இந்தியாவில் 32 பில்லியன் டாலர் மதிப்புடைய துறையாகும். பாலியல் தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் மைனர் பெண்கள்.

இந்தப் பெண்கள் சாதாரண வாழ்க்கையை வாழ பலர் ஆதரவளிக்கின்றனர். இவர்களில் ஒருவர்தான் அசோகா பல்கலைக்கழகத்தின் ஃபெலோவான 47 வயது ஹசினா கர்பீ.

குழந்தைக் கடத்தலைத் தவிர்க்க கடந்த பத்தாண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களில் பின்பற்றப்படும் மேகாலயா மாடலை ஹசினா அறிமுகப்படுத்தினார். இது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. United Nations Office on Drugs and Crime மற்றும் UN Women இதை ஆதரவளிக்கிறது என ’தி நியூயார்க் டைம்ஸ்’ தெரிவிக்கிறது.

2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய வர்த்தக சங்கம் இவருக்கு வட கிழக்கு எக்ஸலன்ஸ் விருது வழங்கியது. கடந்த இருபதாண்டுகளாக வடகிழக்குப் பகுதியில் மனித கடத்தலை எதிர்த்துப் போராடி வருகிறார். 

”இதுவரை 72,442 பேரை காப்பாற்றியுள்ளார். 30,000 பெண் கைவினைஞர்களை தனது இம்பல்ஸ் என்ஜிஓ நெட்வொர்க் (INGON) வாயிலாக உருவாக்கியுள்ளார்,” என தி பெட்டர் இண்டியா குறிப்பிடுகிறது.

எவ்வாறு துவங்கியது?

1996-ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் மரங்கள் வெட்டப்படுவது உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. அந்த தீர்ப்பில்

’ஏழு வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் ரயில், சாலை அல்லது நீர்வழி மார்க்கத்தில் நாட்டின் எந்த மாநிலங்களுக்கும் மரம் எடுத்துச்செல்லப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது,’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மூங்கில் மற்றும் பிரம்பை சார்ந்து இருந்த பெண் கைவினைஞர்கள் வருவாய் ஈட்டமுடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிறிது காலத்திலேயே இந்தப் பெண்கள் மனித கடத்தலுக்கு ஆளானார்கள். திடீரென்று மாநிலம் முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஹசினா கூறுகையில்,

நாங்கள் சில குறிப்பிட்ட வழக்குகளை விசாரணை செய்தபோது நல்ல சம்பளத்துடன்கூடிய வேலை வாங்கித்தருவதாக இந்தக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால் அவர்கள் வீட்டுவேலை, டீக்கடைகளில் உதவியாளர்கள், சுரங்கத் தொழிலாளிகள் அல்லது பாலியல் அடிமைகள் என கொத்தடிமைகள் ஆக்கப்பட்டனர்.

தி இம்பல்ஸ் மாடல் (இதற்கு முன்பு தி மேகாலயா மாடல்)

தி மேகாலயா மாடல் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறது.


இது வழக்குகள் மேலாண்மை முறையாகும். இந்த முறையில் மிகவும் பிரபலமான 6Rs (புகாரளித்தல், மீட்பு, மறுவாழ்வு, தாய்நாட்டிற்கு அனுப்புதல், மறு ஒருங்கிணைப்பு, மறு இழப்பீடு) மற்றும் 6Ps (பார்ட்னர்ஷிப், தடுப்பு, பாதுகாப்பு, காவல், ப்ரெஸ், வழக்கு தொடர்தல்) பின்பற்றப்படுகிறது. இம்பல்ஸ் மாதிரி ஒற்றை சாளர தளமாக இருக்கவேண்டும் என விரும்புகிறோம். எனவே நாங்கள் இம்பல்ஸ் வழக்கு தகவல் மையத்தை (ICIC) அமைத்துள்ளோம். இங்கு மனித கடத்தல் வழக்குகள் தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும், “என்கிறார் ஹசினா.

ஐசிஐசி நெட்வொர்க்கில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் 1,000 அரசு சாரா நிறுவனங்களும் அரசு துறைகளும் உள்ளன. இந்த மாதிரியானது தேவையின் அடிப்படையில் செயல்படும் விதத்தில் அமைந்துள்ளது. மனித கடத்தலை எதிர்த்துப் போராட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

மீட்கப்பட்ட பெண்கள் மீண்டும் கடத்தப்படுவதில்லை என்பது முக்கிய விஷயமாகும். இதைக் கருத்தில் கொண்டு ஹசினா, இம்பல்ஸ் சமூக நிறுவனம் (ISE) என்கிற INGON-ன் லாப நோக்கத்துடன்கூடிய கிளை ஒன்றைத் துவங்கினார்.

வெவ்வேறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த INGON வாயிலாக பயிற்சி பெற்ற 30,000 கைவினைஞர்களை இது ஆதரிக்கிறது. தற்போது இந்தக் கைவினைஞர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளும் திறன் பெற்றுள்ளனர். வீட்டு அலங்காரப் பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.

இதுவரையிலான தாக்கம்

மேகாலயாவில் உள்ள ஜைந்தியா மலைப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் குறுகிய வாயில் கொண்டிருப்பதால் உயரம் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்லமுடியும். ஒப்பந்ததாரர்கள் சுரங்கத்தில் வேலை செய்ய ஆறு வயதே ஆன குழந்தைகளைக் கூட வேலையில் அமர்த்தியுள்ளதை ஹசினாவின் நிறுவனம் கண்டறிந்தது. மேலும் 70,000-க்கும் அதிகமான குழந்தைகள் இதுவரை பணியிலமர்த்தப்பட்டுள்ளனர்.

நேஷனல் க்ரீன் ட்ரிப்யூனல் (NGT) எலி துளை போன்ற அமைப்புடைய சுரங்கத்தைத் தடைசெய்தது. இது INGON சுமார் 1,200 குழந்தைகளை காப்பாற்ற உதவியது. ஹசினா கூறுகையில்,

”அப்படிப்பட்ட குழந்தைகள் சுமார் 40 பேரை பள்ளியில் சேர்த்தோம். சிலர் போர்டிங் பள்ளியில் உள்ளனர். ஒரு சிலர் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்துள்ளனர்,” என்றார்.

அடுத்தகட்ட செயல்பாடுகள்

மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் தனது முயற்சியை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல விரும்புகிறார் ஹசினா. விரைவில் மனித கடத்தல் தொடர்பான மையப்படுத்தப்பட்ட தரவுகளின் களஞ்சியத்தை அமைக்க விரும்புகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL