நன்றி! யுவர்ஸ்டோரி 6 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது! 

நீங்கள் யுவர்ஸ்டோரி மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பையும், நாங்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது!

0

பொதுவாக நான் நிதி குறித்த தகவல்களை அதிகம் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் இந்தத் தகவலை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய அடி மனதிலிருந்து ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

UC-RNT, Kallaari Capital, 3one4 Capital, Qualcomm Ventures ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த மாதத்தில், யுவர்ஸ்டோரி 6 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது. இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

என்னைப் பொருத்தவரை இந்த மைல்கல்லானது யுவர்ஸ்டோரியின் இடைவிடாத நோக்கத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. அதிக ஈர்ப்பு இல்லாத பகுதி என்றும் வளர்ச்சியடைய முடியாத பகுதி என்றும் முதலீட்டாளர்களாலும் பெரும்பாலான நிபுணர்களாலும் கருதப்பட்ட பகுதியில் பணிபுரியும் ஒவ்வொரு தொழில்முனைவோரையும் பிரதிபலிக்கிறது.

தொழில்முனைவோரின் கதைகளைச் சொல்லும் டிஜிட்டல் மீடியா வணிகத்தை உருவாக்குவது ஒரு கனவு. நாங்கள் மிகுந்த பெருமையுடனும் உந்துதலுடனும் 2008-ம் ஆண்டு முதல் அந்தக் கனவுடன் ஒவ்வொரு நாளும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

என்னைப் பொருத்தவரை யுவர்ஸ்டோரி தற்கால ஊடக தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இந்தியாவின் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்திலுள்ள ஒவ்வொரு தொழில்முனைவோரின் பிரதிநிதியாக விளங்குகிறது. எங்களது நிலைத்தன்மையும் வளர்ச்சியும் இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியாகும். ஆமாம்! ஒன்பது வருடங்கள் நிலைத்திருந்து பல ஏற்றங்களையும் எண்ணற்ற இறக்கங்களையும் சந்தித்துள்ளதால் நான் இவ்வாறு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

டிஜிட்டல் ஊடக வணிகத்தைப் பொருத்தவரை அனைவரும் எழுப்பும் ஒரே கேள்வி இந்தத் துறையினர் எவ்வாறு வளர்ச்சியடைவார்கள் என்பதே. உண்மையாகச் சொல்வதானால் இந்தக் கேள்விக்கான சரியான பதில் எனக்குத் தெரியாது. நாங்கள் சாத்தியமில்லாத ஒன்றை துரத்திக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நாங்கள் முயற்சியை கைவிட மாட்டோம். எதிர்த்துப் போராடுவோம். Jeff Bezos வரிகளுக்கேற்ப, “ஒரு இறுக்கமான பெட்டியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி வெளியேறுவதற்கான உங்களுக்கான வழியை நீங்களே கண்டறிவதுதான்,” நாங்கள் நிச்சயம் கண்டறிவோம்.

உலகளாவிய தற்கால டிஜிட்டல் ஊடக வணிகத்தை இந்தியாவில் உருவாக்கவேண்டும் என்கிற கனவு வாழ்நாளில் ஒரே ஒரு முறை கிடைத்த வாய்ப்பாகும். அதில் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளோம்.

இந்த வருடம் 4 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டவேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இந்த நிதியாண்டின் ஆறு மாத காலத்தில் பாதி இலக்கை எட்டிவிட்டோம். எங்களுடைய நோக்கம் நிச்சயம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை உள்ளது. இது ஒரு விதமான துரத்தல் நடவடிக்கை, முடிவடையாதவாறே தோன்றும் ஒரு விதமான போட்டி. ஆனால் இவைகளின்றி நம்மால் வாழமுடியாது.

நாம் வெளிநாடுகளைப் பார்க்கிறோம். இந்தியாவிற்குள் ஒரு அளவுகோலாக பார்க்கப்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதே என்னுடைய கனவு. உந்துதலளிக்கக்கூடிய நம்பிக்கையளிக்கக்கூடிய கதைகளுக்கான உலகை உருவாக்க விரும்புகிறேன்.

சமீபத்தில் யுவர்ஸ்டோரி ஜெர்மனியை துவங்கியுள்ளோம் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் அங்குள்ள இகோசிஸ்டம் குறித்து பகிர்ந்துகொள்ளப்படும். ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரை நெருக்கமாக ஒன்றிணைத்து நீண்ட கால உறவை அமைப்பதே இதன் நோக்கமாகும்.

மற்ற சந்தைகளிலும் விரைவில் விரிவடைய விரும்புகிறோம். இது யுவர்ஸ்டோரியின் பயணம் மட்டுமல்ல. தொழில்முனைவு சூழலில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் பயணமாகும். எனவே இதுவரை எங்களது பயணத்திற்கு ஆதரவளித்தவாறே தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிற்கும் உலகிற்கும் அர்த்தமளிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும் என்று நம்பிக்கையும் வேட்கையும் கொண்டுள்ளோம்.

எனக்கு உறுதுணையாக இருந்து வலுவூட்டிய வாணி கோலாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஊக்கமளித்து ஆதரவாக இருந்தார். அவர் ஒரு முதலீட்டாளராக இல்லாமல் பார்ட்னராகவே உணரவைத்தார். முக்கியமாக என்னை ஒரு சிறந்த சிஇஓவாக உருவாக்கினார்.

இந்த நிதிசுற்றிற்காக UC-RNT-க்கும் குறிப்பாக திரு ரத்தன் டாடா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்கு மிகப்பெரிய முன்மாதிரியாக விளங்கினார். உண்மையான தோழமைக்கும் ஊக்கமளிப்பதற்கும் ஒரு புதிய வரைமுறையை கடந்த ஓராண்டில் எடுத்துரைத்தார் மாத்தியாஸ்.

ஒவ்வொரு நாளும் என் மீது நம்பிக்கை வைத்து ஊக்கமளித்த மோகன் தாஸ் அவர்களுக்கு நன்றி. ஆரம்பகட்டம் முதல் நம்பிக்கை வைத்திருந்த ப்ரனவ் பாய் அவர்களுக்கும் நன்றி. மிகப்பெரிய இலக்கை நோக்கி பயணிக்க இவர்கள் உந்துதலளித்தனர். தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்துவரும் Qualcomm Ventures-க்கு நன்றி. இந்தக் கனவில் நம்பிக்கை வைத்த முதலீட்டாளர்களுக்கு நன்றி. பல முதலீட்டாளர்களுக்கு எங்களது கனவில் நம்பிக்கை இல்லாதபோதும் அரிதாக நீங்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.

பரிகாசம் செய்தவர்கள், கேள்வியெழுப்பியவர்கள், கேலிசெய்தவர்கள், நான் எடுத்து வைக்கும் என்னுடைய அடுத்த அடியே இறுதியானது என்று நம்பியவர்கள் போன்றோருக்கும் நன்றி. ஏனெனில் அவர்கள் நான் மேலும் சிறப்பாக எனது முயற்சிகளை மேற்கொள்ள உதவினர். ஒவ்வொரு முறை நான் விழும்போதும் உங்களையே நினைத்துக்கொள்வேன். உடனே எழுந்து தொடர்ந்து ஓடுவேன்.

யுவர்ஸ்டோரியின் ஒவ்வொரு சிறப்பான உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். யுவர்ஸ்டோரியில் கிட்டத்தட்ட நூறு பேர் இருக்கிறோம். நாங்கள் முரண்படுவோம். வாதாடுவோம். ஆனால் அற்புதத்தை உருவாக்க உன்னதமான நோக்கத்துடன் நாங்கள் ஒன்றிணைவோம்.

கடந்த வாரம் நடைபெற்ற டெக்ஸ்பார்க்ஸ் 2017 நிகழ்வில் பங்கேற்றிருந்தால் அந்த அற்புதங்களில் சிறிதளவை நீங்களும் உணர்ந்திருக்கலாம். எங்களுக்கும் தொழில்முனைவோராகிய உங்களுக்கும் யுவர்ஸ்டோரி வாயிலாக தனித்துவமான விஷயங்களை உருவாக்குவதில் தீரா ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் இருக்கிறோம். எங்களுடன் நீங்கள் இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம். நாம் ஒன்றிணைந்து அர்த்தத்தை அளிக்கக்கூடிய கதைகளை உருவாக்குவோம்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷ்ரத்தா ஷர்மா. இவர் யுவர்ஸ்டோரி-ன் நிறுவனர் மற்றும் சிஇஒ

Related Stories

Stories by YS TEAM TAMIL