கடும் விமர்சனத்துக்கு ஆளான கேரள மாணவி அளித்த ரூ.1.5 லட்ச நிவாரண நிதி! 

0

கேரளா 1924-ம் ஆண்டிற்கு பிறகு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டவாறே மீன் விற்பனை செய்தது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்ட 21 வயதான ஹனன் ஹமீத் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக (CMDRF) 1.5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். 

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஹனன் தனது படிப்புச் செலவுக்காகவும் குடும்பத்தை பரமாரிக்கவும் போராடி வருவதைக் கண்டு பலர் நன்கொடை வழங்கிய தொகைதான் இது என குறிப்பிட்டுள்ளார். ஹனன் இதை சுய விளம்பரத்திற்காக செய்வதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஹனன் இந்தத் தொகையை வழங்க சற்றும் சிந்திக்கவில்லை. அவர் நியூஸ்18-க்கு தெரிவிக்கையில்,

”கேரளாவில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு நான் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு 1.5 லட்ச ரூபாய் வழங்க தீர்மானித்தேன். இந்தத் தொகைக்கான காசோலையை முதலமைச்சரிடம் ஒப்படைத்தேன்,” என்றார்.

இடுக்கி மாவட்டத்தின் தொடுப்புழா பகுதியில் உள்ள அல் அசார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியான இவர் பிஎஸ்சி வேதியியல் படித்து வருகிறார் என ’தி நியூஸ் மினிட்’ தெரிவிக்கிறது. அவர் கூறுகையில்,

”மக்களிடம் நான் பெற்றுக்கொண்டதையே திரும்ப அளிக்கிறேன். தற்போது அவர்கள் கஷ்டப்படுகின்றனர். குறைந்தபட்சமாக என்னால் இயன்றது இது மட்டுமே,” என்றார்.

இந்த மாநிலம் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு பலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்னர். நிபா வைரஸ் தாக்கிய நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது அந்த வைரஸ் தாக்குதலால் உயிரழந்த செவிலியர் லினியின் கணவர் தனது சம்பளத்தொகையில் இருந்து 25,000 ரூபாயை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

கேரளாவின் இக்கட்டான நிலையில் பண உதவி, நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL