உங்களுக்கும், எனக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான வெளியின் அருமை... 

எழுத்தாளர், சாதனையாளர் மற்றும் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனர் நாரயணமூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, வாழ்வில் ஒரு தனி மனிதரின் ஸ்பேஸ் எவ்வளவு முக்கியம் என பகிர்கிறார்.

0

எனது பணியில் நான் பலவகையான மனிதர்களை பார்க்கிறேன். ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஒரு சிலர், தங்கள் செயல்களின் அர்த்தமுள்ள தன்மை மற்றும் வார்த்தைகளின் ஆழம் காரணமாக மற்றவர்களைவிட அதிக தாக்கம் செலுத்துகின்றனர்.

எழுத்தாளர், சாதனையாளர் சுதா மூர்த்தியுடன் யுவர் ஸ்டோர் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷ்ரத்தா சர்மா 
எழுத்தாளர், சாதனையாளர் சுதா மூர்த்தியுடன் யுவர் ஸ்டோர் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷ்ரத்தா சர்மா 

கடந்த வாரம் திருமதி சுதா மூர்த்தியை சந்தித்தது இது போன்ற ஒரு அனுபவமாக அமைந்தது. இந்த சந்திப்பில் அவரது செயல்களில் இருந்து, அடக்கம், எளிமை மற்றும் ஆற்றலை எடுத்துக்கொண்டதோடு அவரது அனுபவம் மற்றும் அறிவை வார்த்தைகளிலும் பெற்றுக்கொண்டேன்.

ஐ.டி. முன்னோடி தொழில்முனைவோரான நாராயணமூர்த்தியை திருமணம் செய்து கொண்டும் எப்படி தனக்கான வலுவான நிலையை உருவாக்கிக் கொள்ள முடிந்தது என நான் கேட்ட போது, அவரது வார்த்தைகளின் ஆற்றல் மற்றும் அவரது அறிவின் எளிமை அந்த சந்திப்பு முடிந்தும் நீண்ட நேரம் என்னிடம் இருந்தது. உங்களுக்கு மற்றும் உங்கள் வாழ்க்கை துணைக்கு வெளியை அளிப்பது என்று அவர் கூறினார்.

“ஏனெனில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெளி தேவை...” என்கிறார்.

ஒவ்வொரு தனிநபரும் வேறுபட்ட தகுதியை கொண்டவர் என்பதை அங்கீகரிக்கும் வெளி தேவை. வாழ்க்கை ஒரு போட்டியாக அமைந்தாலும், நாம் நம்முடைய தொலைவை நமக்கான வேகத்தில் ஓடுகிறோம் என்பதை புரிந்து கொள்ளும் வெளி தேவை. மற்றவர்களின் வெளியில் குறுக்கிடாமல் அல்லது அழுத்தம் தராமல், ஆதரவாக இருந்து பரஸ்பரம் பிரகாசிப்பதற்கான வெளி தேவை.

இவற்றை எல்லாம், உங்கள் துணை அல்லது அவரது வெற்றிக்கு நீங்கள் காரணம் என்ற எண்ணம் இல்லாமல் செய்ய வேண்டும்.

இந்த வாரம் முழுவதும் பல உள் செயல்பாடு ஆய்வு சந்திப்புகள் மற்றும் வெளி சந்திப்புகளில் ஈடுபட்டிருந்த போது, நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவிலும், தனிநபரின் தனிப்பட்ட தகுதிக்கான அங்கீகாரம் மற்றும் வெளியை ஏற்றுக்கொள்வது எனும் கருத்தாக்கம் எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்தேன். உங்கள் வாடிக்கையாளரோ, பங்குதாரரோ, ஊழியர்களோ மற்றும் குடும்பத்தினர், நண்பர்களோ, ஏன் உங்களுக்குள்ளேயே இது அவசியம்.

வெளி; சமநிலை செயல்பாடு

சுதா மூர்த்தி, வெளி பற்றி வலியுறுத்தியது, எந்த அளவு ஸ்பேஸ் சரியாக இருக்கும் என என்னை யோசிக்க வைத்தது. குறிப்பாக நம்முடைய நெருங்கிய உறவுகளில் சரியான அளவு என்ன? நம்முடைய உறவில் நாம் கொடுக்கும் வெளி என்று வரும் போது, நாம் பெற வேண்டிய சரியான சமன் என்பது என்ன?

அளவுக்கு அதிகமான வெளி எனில், நாம் விலகிச்சென்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது. குறைவான வெளி எனில் மற்றவரை நெருக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தெளிவாக சொல்வது எனில், பரஸ்பரம் ஒவ்வொருவருடைய தகுதிகள், ஆற்றல்கள் மற்றும் பலவீனங்கள் மற்றும் நுட்பங்கள், எளிமைகளை கண்டுணறக்கூடிய வகையில் நமக்கு வெளி தேவை. சொல்லப்போனால், நெருக்கமான உறவுகளில் வெளியை அனுமதிப்பதற்கான தன்மை, மற்றவரை மாற்றவோ தாக்கம் செலுத்தவோ முயற்சிக்கும் நிர்பந்தத்தை உணராமல், மற்றவரை ஏற்றுக்கொள்வதில் இருந்து வருகிறது.

நம் எல்லோரும் நமக்கான ஆற்றல்கள், சாதகங்கள் மற்றும் சவால்களுடன் இருக்கிறோம். நமக்கான விநோதங்களை பெற்றிருக்கிறோம். நாம் இன்று இருக்கும் நபராக நம்மை உருவாக்கியுள்ள வேறுபட்ட கடந்த காலத்தை கொண்டிருக்கிறோம். எதிர்காலத்திற்கான மாறுபட்ட அணுகுமுறையை கொண்டிருக்கிறோம். அதை அடைவதற்கான மாறுபட்ட அணுகுமுறையை கொண்டிருக்கிறோம்.

பயணத்தின் பாதை

ஆனால், இந்த வேறுபாட்டை மீறி, நம்மை பிணைத்திருக்கும் பொதுவான குணங்களே நம் வெற்றிக்கு வழி செய்கின்றன. சுதா முர்த்தியை பொருத்தவரை, விடாமுயற்சி, துணிச்சல் மற்றும் பொறுமை தான் இந்த குணங்கள். வேறு வார்த்தைகளில் சொல்வது எனில், நம்முடைய இலக்கிற்கான பார்வையை தவறவிடாமல் பயணிப்பதாகும். அதாவது, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவராக தனக்கான சக்திவாய்ந்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ள, சுதா மூர்த்தி நிருபித்து காட்டியிருப்பது போன்றது.

நாராயணமூர்த்தியின் மனைவியாக, இத்தகைய தொலைநோக்குமிக்க வாழ்க்கையைவிட பெரிய தலைவரின் நிழலில் இருந்து உருவாவது என்பது பொதுவாக மிகவும் கடினமானது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். ஆனால் சுதா மூர்த்தி, இதை அமைதியாக, உறுதியான ஆற்றல் மற்றும் அறிவுடன் சாதித்திருப்பது, அவர் முன்னிறுத்தும் விடாமுயற்சி மற்றும் துணிச்சலை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில் எல்லா உறவுகளுக்கான சரியான அளவு வெளியையும் உருவாக்க இருக்கிறார்.

“சில நேரங்களில் எனக்கான வெளி தேவைப்படுகிறது. சில நேரங்களில் நீங்கள் கணவர் அல்லது மனைவிக்கான வெளியை உருவாக்கித்தரலாம். சில நேரங்களில் பிள்ளைகளுக்கு, சில நேரங்களில் மற்றவர்களுக்கு, உங்கள் சிறந்த நண்பர்களுக்கு வெளியை உருவாக்கித்தரலாம். என் மனதில், சில பகுதியை எல்லோருக்கும் கொடுத்திருக்கிறேன். ஆனல் பெரும்பகுதியை அல்ல, மூர்த்தி அதை மதிக்கிறார்,” என்கிறா சுதா மூர்த்தி.

இத்தோடு, உங்கள் யோசனைக்கு விட்டுவிடுகிறேன். நமக்குக் கிடைக்கும் வெளியை, நாம் அளிக்கும் வெளியை அனுபவிப்போம்.

இந்த வார மேற்கோள்

நீங்கள் எந்த அளவு புத்திசாலி, எந்த அளவு வளம் பெற்றுருக்கிறீர்கள் அல்லது எந்த அளவு தொடர்புகளை பெற்றுருக்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. உங்கள் விடாமுயற்சி, உங்கள் துணிச்சல், அவற்றை உங்களால் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனில், இத்தகைய மனிதர்களே எப்போதும் வெற்றி பெறுகின்றனர்.” – சுதா மூர்த்தி

ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ரத்தா ஷர்மா | தமிழில்: சைபர்சிம்மன்