நடிகை, முதலீட்டு வங்கியாளர், தொழில்முனைவர் என பல்முகம் கொண்ட சுமா பட்டாச்சார்யா!

0

சுமா பட்டாச்சார்யாவை யாராவது அழைத்தால், “ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு உங்களை நான் திரும்ப அழைக்கட்டுமா” என்று பிரிட்டன் ஆக்சென்ட் ஆங்கிலத்தில் பதிலளிப்பார். அதேப்போல், அடுத்த ஐந்து நிமிடங்களில் திரும்பவும் அழைத்துப்பேசுவார். அதுபோலவே என்னையும் அழைத்து அவரது தனிப்பட்டவாழ்க்கை, தொழில் வளர்ச்சி, தொழில் கூட்டாளிகள் ஆகியவை குறித்து விரிவாக பேசினார். இந்தியாவில் முதல் முறையாக, பணபரிவர்த்தனைக்காக சுமா தொடங்கிய "குவிக்வாலட்"(Quickwallet) மொபைல் செயலியைப் பற்றி விரிவாகபேசினார். குறிப்பாக அண்மை கள தொடர்பு மற்றும் உடனடி பதில் அளிக்கும் கோடு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பற்றியும் பேசினார்.

குவிக்வாலட் நிர்வகித்துவரும் லிவ்குயிக் டெக்னாலஜி நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், பிராண்டு ஆலோசகராகவும் சுமா இருந்து வருகிறார்.

குழந்தைப் பருவ நினைவுகள் மகிழ்வானது அல்ல

சுமாவின் தந்தை கொல்கத்தாவை சேர்ந்தவர், சுமாவுக்கு ஏழு வயது இருக்கும் போது அவருடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். “என்னுடைய வளர் பருவத்தில் அப்பா அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை, நான் என் அம்மாவுடன் வளர்ந்தேன். நான் என்னுடைய பொறுப்பை உணர வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். அதோடு என் தந்தையுடன் தொடர்பிலேயே இருக்கும்படியும் அவர் தெரிவித்ததாகவும்” சுமா நினைவு கூர்கிறார்.

சுமாவின் தந்தை பிரிட்டிஷ் ரயில்வேயில் மின்னியல் பொறியாளராக இருந்தார், சுமாவின் தாயார் அவருக்கு இரண்டாவது மனைவி. சுமாவின் தாயார் கொல்கத்தாவை சேர்ந்தவராக இருந்தாலும், தன் கணவருடன் இருப்பதற்காக லண்டன் சென்று விட்டார், சுமா லண்டனில் பிறந்தார். 1990ல் சுமாவின் தந்தை பணி ஓய்வு பெற்றார், அதன் பின்னரே சுமாவின் பெற்றோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக கசப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. “அது ஒரு அழகான சிக்கல் நிறைந்த வழக்கு, என் தாயார் என்னை லண்டனுக்கே திரும்ப அழைத்து சென்றார். லண்டன் கோர்ட் அவருக்கு விவாகரத்து வழங்கியது,” என்கிறார் 30 வயது சுமா. கோர்ட் யாருடன் இருக்க விரும்புவதாகக் கேட்டபோது தன் தாயாருடனே இருக்க விருப்பம் தெரிவித்ததையும் அவர் நினைவுகூர்கிறார்.

லண்டனில், சுமாவின் தாயார் குழந்தைகளின் மனோநிலைத்துறையில் இணைந்தார்(இந்தியாவில் குழந்தைகளுக்காக செயல்படும் டே கேர் போன்றவை), அது லண்டனில் உள்ள உயர்நிலை அமைப்பு.

இம்பீரியல் கல்லூரி பட்டதாரி

லண்டனை சேர்ந்த சுமா பள்ளி மற்றும் கல்லூரி காலத்தை மிகவும் நேசித்தார். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு பயின்றார், ஒரு காலகட்டத்தில் அவர் நாடகங்களிலும் நடிக்க விரும்பினார். அவர் ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞரும் கூட.

சுமா 2006ல் பட்டம்பெற்றார், அந்த சமயத்தில் பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் மேலாண்மை ஆலோசனை மற்றும் முதலீட்டு வங்கியை தங்களது பணி வாய்ப்பாக கருதினர். “அப்போது அது ஒரு செயல்படும் துறையாக இருந்தது. உண்மையில் லண்டனில் உள்ள கிரெடிட் சுயூஸ் முதலீட்டு வங்கியில் ஒரு வியத்தகு குழுவுடன் இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டேன். அது ஒரு விசித்திரமான அனுபவமும் கூட,” என்கிறார் சுமா. இந்த பயிற்சிகாலத்தில் உலகம் எதிர்கொண்ட பல பிரச்னைகள் குறித்து பார்த்தோம்.

பயிற்சிதான் மாற்றத்திற்கான தொடக்கமாக அமைந்தது. பெரிய சூழலில் வங்கித்துறையில் பெரியளவு நடக்கப்போகும் மாற்றங்களை நாங்கள் அறிந்துகொண்டிருக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களான வங்கிகளும், மற்ற நிதி அமைப்புகளும் அவர்களது பேலன்ஸ் ஷீட்டுக்குள்ளாகவே பணஓட்டம்(liquidity) உருவாக்க சொல்லிக்கொடுத்தோம்

என்கிறார் சுமா. அந்தக்குழுவுடன் கிட்டத்தட்ட 4 வருடங்களாக பணியாற்றிய சுமா அசோசியேட்டாக இருந்தபோது தனது வேலையை விட்டார்.

இதற்கிடையில், சுமாவின் தந்தைக்கு உடல்நலம் சுகமில்லை. அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால், இரண்டுமாதம் கொல்கத்தாவில் தங்கியிருந்து தனது தந்தையின் உடல்நிலையைக் கவனித்துக்கொண்டார் சுமா. அந்த சமயத்தில், கிரெடிட் சுவிஸ் இன்வெஸ்ட்மெண்ட் வங்கியின் வேலையையும் விட்டுவிடலாமா என யோசித்தார். மிகப்பெரிய நிறுவனம் அதேபோல், சுமாவிற்கு மேல் அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளையும் அந்த நிறுவனம் கொண்டிருந்தது. “அதிக சம்பளத்துடன் கூடிய அந்த வேலையை அவசரகதியில் கைவிட நான் விரும்பவில்லை” என்கிறார் சுமா. ஆனால் முடிவெடுத்தபிறகு படிப்படியாக அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற சுமாவிற்கு ஆறுமாத காலமானது.

2009ம் ஆண்டின் இறுதிவாக்கில், நோய்வாய்ப்பட்ட தனது தந்தையுடன் கொல்கத்தாவில் இருந்தார். கடுமையான நோய்பாதிப்பு இருந்ததால், கோமா நிலைக்கு அவர் சென்றுவிட்டார். நல்ல பணியாளராக தனது பணிகளை செய்ய முடியாமல் இருப்பதாக சுமா கருதியதால், வேலைக்கலாச்சாரம் வளராத கொல்கத்தாவில் இருந்தபடியே எதாவது செய்யமுடியுமா என்று யோசித்தார்.

கவர்ச்சி உலகம் வரவேற்றது

பணம் சம்பாதிக்கும் நோக்கில், மும்பைக்குச் சென்றார் சுமா. அங்கு அதிர்ஷ்டவசமாக சினிமா மற்றும் விளம்பரம் என சில புராஜெக்ட்களில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து சில விளம்பரங்களில் பணியாற்றினார். அதற்குப்பிறகு கொல்கத்தாவில் தங்கியிருப்பதை அவர் விரும்பவில்லை. மும்பையில் நண்பர்களின் அறையில் தஞ்சமடைந்தார் சுமா. சில நாட்களில் அவரது தந்தை மரணமடைந்துவிட்டார். ஆனால் அந்த செய்தி அவரை சென்றடையவில்லை. நான் இந்தியாவில் இருந்தபோதிலும் எனக்கு தகவல் சொல்லாமல், எனது உறவினர்கள் அப்பாவின் இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்தது எனக்கு கோவத்தை வரவழைத்தது” என பழைய நினைவுகளை சொன்னார் சுமா.

தொடக்கத்தில் கடுமையான நாட்களாக அமைந்ததால் மும்பை சுமாவுக்கு கனவு உலகமாகத்தெரியவில்லை. மாநிலத்தேர்தல் நடந்துவந்த சமயத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்தின் அருகே ஆட்டோரிக்‌ஷாவிலிருந்து கடத்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11 மணிக்கு அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் அவரை கடுமையாக பாதித்திருந்தது. இது நாள் வரை அந்த இரவு தன் வாழ்நாளில் நடந்த பயங்கர சம்பவத்தை நினைத்து பயப்படுகிறார் சுமா. அதன் பின்னர் சிறிது காலம் அவரின் தாயார் அவருடன் இருப்பதறகாக லண்டனில் இருந்து இந்தியா வந்தார்.

2011ல் அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிக்கும் ஆர்வம் இருந்த போதும், இவை நடிகர்கள் ஆதிக்கம் நிறைந்தது என்பதால் கதாநாயகி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதிலும் சிறிது அச்சம் இருந்தது அவருக்கு, மேலும் பெண்கள் தங்களது நடிப்பை துணை கதாபாத்திரங்களில் மட்டுமே சிறப்பாக வெளிபடுத்துகின்றனர். சுமா அவ்வளவாக கமர்ஷியல் படங்களில் நடிக்கவில்லை.

சுமாவை அபகரித்த குவிக்வாலட்

இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சூழ்நிலை சுமாவை கவர்ந்தது, அவர் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தார்- ஒரு இன்ட்டெலை பின்பலமாக கொண்ட தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பை இணைய வர்த்தக தயாரிப்பாக மேம்படுத்தினார். அதன் பின்னர் அவர் சமீனா கேபிடல் சென்று தன்னுடைய வியாபாரத்தை விஸ்திகரிப்பதற்கான பணத்தை நிதியாக பெற்றார். அவருடைய முதலீட்டு பங்களிப்பின் ஒரு நிகழ்வின் போது அவர் மோஹித் லால்வானியை சந்தித்தார். அவருடைய நோக்கம் சுமாவை மனமாற்றியது, அவர் அந்தக் குழுவோடு இணைந்து, அந்த நிர்வாகத்தின் ஒரு அங்கமாக பின்னர் பணியாற்றத் தொடங்கினார்.

“எனக்கு எப்போதுமே ஒரு நிதி சார்ந்த பின்னணி இருக்கும், நான் அதை திரும்பப் பெறவே விரும்புகிறேன். குவிக்வாலட் 2012ல் தோன்றிய ஒரு எண்ணம், அது இப்போது தான் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. அதற்கு நிதி எங்கிருந்தும் வரவில்லை, அதனிடம் பணமும் இல்லை. காலம் கரைந்தது, இந்த நிறுவனத்திற்கு ஒரு நிலையான அணுகுமுறை தேவை என்று நான் நினைத்தேன். அது ஒரு திட்டமிட்ட பின்னணியில் இருந்து அமையவேண்டும் என்றும் விரும்பியதாக,” கூறுகிறார் சுமா. அவர் அதன் செயல்பாடுகளில் இணைந்து செயலாற்றத் தொடங்கினார்.

அவர் அந்த பொறுப்பில் சேர்ந்த பின்னர், இந்நிறுவனம் ஒரு நிலையான குழுவை கட்டமைப்பதிலும், தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

கலை மீது சுமாவிற்கு இருக்கும் ஆர்வம்

சுமா தற்போது ஒரு நடன தயாரிப்பு நிறுவனத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். “எனக்கு எதையும் நிறைவேற்றி காட்டும் நண்பர்கள் உள்ளனர், நான் நடனத்தில் திடமாக உள்ளேன். அண்மையில் ஒரு பயிற்சி பட்டறைகூட நடத்தி இருக்கிறேன்” என்கிறார் சுமா. ஒருமுகப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை நோக்கிய சர்வதேச கண்ணோட்டமே மக்களின் இன்றைய தேவையாக இருக்கிறது என்கிறார் அவர்.

கட்டுரை: சாஷ்வதி முகர்ஜி / தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்