வெளியில் தெரியாத அசாதாரண மனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் மகேஷ் பட்!

0

நீங்கள் 79 வயதான பனிப்பாறை மனிதன் சேவாங் நோர்பெல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா, லே பகுதியில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்குகிறார். அல்லது வெள்ளி நிற முடியுடன் மென்மையாகப் பேசும் ஹாஸ்நாத் மன்சூர், அவர் சாமானிய முஸ்லிம் பெண்கள் தங்கள் சட்ட உரிமைகள் மற்றும் குரான் உரிமைகளையும் உணரவைக்கிறார். 

பணம் இல்லை என்று டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதால் சுபாசினி மிஸ்ட்ரி, தன் கணவனை இழந்துவிட்டார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு மருத்துவமனையைக் கட்டி அதில் இலவசமாக மருத்துவம் அளித்தல் மற்றும் நான்கு குழந்தைகளை வளர்த்து ஆளாகும் காலத்திற்குள், சமையல் வேலை, தளங்களை சுத்தப்படுத்துதல், ஷூ பாலிஷ் மற்றும் பல வேலைகளைச் செய்துவிட்டார் சுபாசினி.

இந்த ஹீரோக்கள் மற்றும் அவர்களுடைய கதைகளை மகேஷ் பட் தன்னுடைய ‘அன்சங்' (Unsung) என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலில் குறிப்பிட்டுள்ளவர்கள், உண்மையில் அவர்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறார்கள். நம் மத்தியில் இருக்கிறார்கள். சமூகத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கவனத்தைக் குவித்து பணியாற்றியுள்ளார்கள். அவர்கள் நம்முடைய சமூகத்தின் இணக்கத்தையும் வைத்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் மற்றும் பதிப்பகங்களில் பாராட்டுக்குரிய போட்டோ ஜெர்னலிஸ்ட்டாக மகேஷ் பணியாற்றியிருக்கிறார். ஃபார்ச்சூன், நியூஸ்வீக் மேரி க்ளேர், நியூயார்க் டைம்ஸ் இதழ் மற்றும் தி கார்டியன் ஆகியவற்றுக்காக வேலை பார்த்திருக்கிறார்.

மீண்டும் திரும்பிய நேரம்

அதுவொரு புதிய தருணமோ அல்லது வெளி்ப்பாடோ, அவரை நூல் எழுதவைத்துவிட்டது. சில முக்கிய நிகழ்வுகள் அவரிடம் பாதிப்பை ஏற்படுத்தின.

1986 அக்டோபரில் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். மூத்த புகைப்படக் கலைஞர்களான டி.எஸ். சத்யன், ரகுராய், எஸ். பால் ஆகியோரிடம் தன்னுடைய போட்டோக்களை காட்டுவதற்காக டெல்லிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது ரயில் இரண்டாம் வகுப்பு ரிசர்வ்டு பெட்டியில் நாக்பூரில் இருந்து கைக்குழந்தையுடன் ஒரு பெண் பயணம் செய்தார். அவர் ரிசர்வ் செய்யாமல், வெறும் டிக்கெட் மட்டுமே வைத்திருந்தார்.

அங்கு பெரும் கூச்சல் ஏற்பட்டது. சில பயணிகள் அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து இறக்கிவிடச் சொன்னார்கள். ஆனால் வேறுசிலர் அவர் கையில் குழந்தை இருப்பதால் இங்கேயே இருக்கட்டும் என்றார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய, அந்தப் பெண்ணுடன் மகேஷ் பேசினார். அந்தப் பெண் தன் தாயை போபால் விஷவாயு சம்பவத்தில் இழந்தவர் என்பதும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற தந்தையைப் பார்க்கப்போகிறார் என்பதும் தெரியவந்தது.

“ஏதாவது இழப்பீட்டுத் தொகை கிடைத்ததா என்று அவரிடம் கேட்டேன். பத்தாயிரம் கிடைத்ததாகவும், அதில் சரிபாதியை பணம் பட்டுவாடா செய்தவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள் என்றார். இப்படியெல்லாம் விஷயங்கள் இருக்கின்றன… இது என் மனதில் தங்கிவிட்டது ”

மகேஷ் பணிச் சூழல் காரணமாக பல பகுதிகளுக்குச் சென்று அவர் எண்ணற்ற மக்களை சந்தித்த அனுபவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

“அவர்கள் உங்களையும் என்னையும் பாதிக்கலாம். அவர்கள் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்த நேரத்தில் நான் நிறைய விளம்பர வேலைகளிலும் ஈடுபட்டிருந்தேன். இரண்டு உலகங்களுக்குமான முரண்பாட்டையும் பார்த்தேன். ”

இதை நான் தொடங்கியபோது, உண்மையில் சமூக வலைதளங்கள் இல்லை. தங்களுடைய தடைகளைத் தாண்டி சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் மனிதர்களைப் பற்றிய கதைகளை பதிப்பிக்க எந்த வழியும் இல்லை. இன்றும்கூட, அதிகாரமிக்கவர்கள் வெளியில் தெரிகிறார்கள், அதிக சக்திமிக்க பெண்கள், ஆண்கள்… அவர்கள் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் அல்லது தங்களுக்காக அல்லது மகன், மகள்களுக்காக சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள்.

சத்யூ சாரங்கி, போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சம்பாவனா கிளினிக் நடத்திவருகிறார்.

புத்தகத்தை நோக்கி…

“ஒரு புத்தகம் தன்னுடைய உடைமையாளரை எளிதாக மாற்றிவிடுகிறது – புதிய, பழைய, அன்பளிப்பாக, போகக்கூடிய, செகண்ட் ஹேண்ட் மற்றும் பல. என்னிடம் 85 ஆண்டு பழமையான போட்டோகிராபி புத்தகம் இருக்கிறது.” தொழில்நுட்பத்தை மீறியும் புத்தகங்கள் எப்படி வெற்றிகொள்கின்றன என்பதற்கு மகேஷ், உதாரணங்கள் வைத்திருக்கிறார்.

நான் கர்நாடகாவைப் பற்றி 1997ல் ஒரு புத்தகமும் சிடியும் செய்தேன். டிஜிட்டல் உலகத்தில் அதை வரலாற்றுக்கு முந்தையதாக தொழில்நுட்பம் அடையாளப்படுத்தியது. இப்போதும்கூட புத்தகம் பலருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. காலத்தின் பாதையில் அதற்குத் தொடர்புடையதாக புத்தகங்கள் இருக்கின்றன.

விரைவில் வெளிவரவுள்ள மகேஷின் இரண்டாவது புத்தகமான ‘வெளியில் தெரியாத அசாதாரண மனிதர்கள்’ நூலில் இருந்து ஒரு பக்கம். கதைகளின் கடைசிக்கட்ட திருத்தங்களுக்கான காரணம் என்ன? “முதலாவதாக அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஒரு நோக்கத்திற்காக செயல்பட்டிருக்கவேண்டும். அடுத்து சொந்த தடைகளைத் தாண்டி சாதித்திருக்கவேண்டும். கடைசியாக அதன் தாக்கம் இந்தியா முழுமைக்காகவும் இயற்கையி்ல மதச்சார்பற்றதாகவும் இருக்கவேண்டும்.”

மிகப்பெரிய விளைவு

இந்த புத்தகத்தின் ஒரே நோக்கம் நம்மிடையே வாழும் ஹீரோக்களை அடையாளம் காட்டுவதும் அவர்களுடைய பெருமைப்படத்தக்க பணிகளை முன்னிலைக்குக் கொண்டுவருவதும்தான். “அது அவர்களுக்கு பணம் திரட்ட உதவியாக இருக்கும். இந்த நூலின் மூலம் நல்ல நோக்கங்களுக்காக 90 லட்சம் ரூபாய் நிதி கிடைத்தது.”

இப்புத்தகத்தில் மகேஷ், அவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் தொலைபேசி எண்களை கொடுத்திருப்பதால் அந்த அசாதாரண மனிதர்களை மற்றவர்கள் எளிதாக தொடர்புகொள்ளமுடியும். “அவர்கள் உங்களால்தான் வந்து பணம் கொடுத்துச் செல்கிறார்கள் என்று கூறுவார்கள்” என்கிறார் மகேஷ்.

மகேஷ் ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். ஹூயுமிலிட்டி மருத்துவமனையின் சுபாசினி மிஸ்ட்ரியின் மகன் அஜாயுடன் நடத்திய உரையாடலைக் காட்டுகிறார். “இந்தப் புத்தகம் வெளியான பிறகு பேசிய அஜாய், இது 30 லட்சம் ரூபாய் கிடைக்க உதவியாக இருந்தது என்றார்.” அவர்கள் சத்யமேவ ஜெயதேவை உருவாக்கினார்கள்.

இரண்டாவது புத்தகம்: வெளியில் தெரியாத அசாதாரண மனிதர்கள்(unsung extraordinary lives)

தற்போது மகேஷ் இரண்டாவது புத்தகத்தில் கவனமாக இருக்கிறார். இது முதல் புத்தகம் போலத்தான், சற்று மாற்றமான வடிவத்துடன் வருகிறது. இந்த முறை ஆறு புகைப்படக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் குழுவில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஹீரோ அல்லது ஹீரோக்களின் குரூப் பற்றி முதல் நபராக போட்டோகிராபரால் பதிவு செய்யப்படுகிறது. அடுத்து ஹீரோக்கள் தங்களைப் பற்றிப் பேசுவார்கள்.

மகேஷ் விளக்குகிறார், “காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் அஹம்மத் தக் என்ற ஒருவரைப் பற்றி பதிவு செய்தோம். தீவிரவாதிகள் அவருடைய சகோதரரைக் கடத்தும்போது ஏற்பட்ட மோதலில், புல்லட் விபத்தில் அவர் உடல் ஊனமுற்றார். மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும்போது, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர் மற்றும் வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடத்தை நிர்மாணிக்க விரும்பினார். அவர் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று முறையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பெஷல் ஸ்டேட்ஸ் வழங்கும் சட்டத்தைக் கொண்டுவர உதவியாக இருந்தார்.”

ஏன் ஜாவித் அசாதாரண மனிதராக இருக்கிறார் என்பது இந்தக் கதையில் இருந்து தெரியவரும் – நன்கு தெரிந்த தீவிரவாதிகளான குழந்தைகளைக்கூட பள்ளியில் சேர்த்துக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார்.

ஜாவித் மகேஷிடம் கூறினார், “அவர்கள் குழந்தைகள், தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பைத் தரவேண்டும்.” இந்த புத்தகத்தில் பாராட்டுக் கட்டுரைகளில் ஒன்றாக மன்னிப்பின் மகத்துவம் பேசும் புத்தத் துறவி பற்றிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இப்போது அது வெளிவர தயாராக இருக்கிறது. பிரிண்ட் செய்வதற்கான கூட்டு நிதிதிரட்டல் முயற்சியில் இருக்கிறார் மகேஷ்.

குரல்கள் ஓய்ந்துவிடலாம், ஆனால் கதைகள் எப்போதும் நம்முடனேயே இருக்கும். இந்தக் கதைகளை உலகுக்குக் கூறும் மகேஷ். அவருடைய பணியில் உயரம் தொட வாழ்த்துவோம்.

ஆக்கம்: SNIGDHA SINHA | தமிழில்: தருண் கார்த்தி