கடலில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு தயாராகும் ஷு...

0

‘UltraBOOST Uncaged Parley’ என்று பெயரிடப்பட்டுள்ள ஷூக்கள் புதுமையும் சிறப்பும் வாய்ந்தது. அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தவகை ஷூக்கள், கடலை சுற்றி கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பதே இதன் சிறப்பு. இதுவரை 7000 ஜோடிகள் தயாரிக்கப்பட்டு, ஒரு ஷூ 220 டாலர் விலைக்கு விற்கப்படுகிறது. அடிடாஸ் அடுத்த ஆண்டிற்குள் 10 லட்சம் ஷூக்களை தயாரித்து, 11 மில்லியன் பிளாஸ்டிக் பாடில்களை மறுசுழற்சிக்கு உட்படுத்த உள்ளது என்று க்ளோபல் சிட்டிசன் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த ஷூவில் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ளாஸ்டிக், இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள மாலத்தீவின் 1,192 கோரல் தீவுகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை. ஷூவின் மேல்பகுதியின் 95 சதவீதம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாடில்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள பகுதிகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியெஸ்டர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. குதிகால் பகுதி, ஓரங்கள் மற்றும் லேஸ் மறுசுழற்சி செய்யப்பட்டு பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஷூவை தயாரிக்க 11 பிளாஸ்டிக் பாடில்கள் தேவைப்படுகிறது. 

ஆய்வு அறிக்கைகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 500 பில்லியனில் இருந்து ட்ரில்லியன் வரை பிளாஸ்டிக் பைகள் உலகம் முழுதும் தூக்கி எறியப்படுகிறது. இதில் பெரும்பாலானவை கடலில் தூக்கி எறியப்படுகின்றன. இதனால் 1 லட்சம் திமிங்கலங்கள், நீர்நாய்கள், மற்றும் ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றன. கடலில் மிதக்கும் பிளாஸ்டி பைகளை உண்பதாலும், அதில் மாட்டிக்கொள்வதாலும் இவை இறக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வந்தாலும், ஏற்கனவே கடலில் 100 மில்லியன் டன் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிகுகள் கலந்துவிட்டன. ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் புதிய குப்பைகள் இரண்டு மடங்காக கடலில் கலக்கிறது என்கிறது தகவல்கள். 

அடிடாஸ் தங்கள் பங்கிற்கு சமூக நலனில் அக்கறைக்கொண்டு, கடலில் கலக்கும் மாசுவை ஒழிக்க இந்த புதியவகை ஷூக்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு உட்பட்டு கடல் மாசை குறைக்க ஒரு வகையில் உதவிடும். 

கட்டுரை: Think Change India