அனைத்து விதமான சேவைகளுக்குமான மக்கள் மேடையாக விளங்கும் 'டாஸ்க்மித்ரா'

1

புத்தாண்டுக்கு முன்னதாக கவுதம் கோக்லே (Gautam Gokhale) மற்றும் உஷ்மா கபாரியா (Ushma Khabaria ) வீட்டில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருந்தனர். ஆனால் இந்த திட்டமிடல் களைப்பை ஏற்படுத்தியதுடன், விருந்து முடிந்த பின் காணப்பட்ட களேபரமும் சிக்கலை ஏற்படுத்தியது. கொஞ்சம் உதவி கிடைத்திருந்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது. இதுவே அவர்களுக்கான யுரேக்கா கணமாக அமைந்து. ஒருவர் தனது தேவை மற்றும் அது எப்போது வேண்டும் என்பதையும் தெரிவித்து, அதற்கு தரத்தயாராக உள்ள கட்டணத்தையும் குறிப்பிட்டு உதவி கோருவதற்கான சேவையை உருவாக்க தீர்மானித்தனர். நிச்சயமாக அருகாமையில் இருக்கும் தொழில்முறை சேவையாளர்கள் யாரேனும் ( அமெச்சூர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்கள்) இதை ஏற்று உதவி செய்ய முன்வருவார்கள். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயையும் நல்லது தான்.இதன் விளைவாக 2015 மார்ச்சில் பிறந்தது டாஸ்க்மித்ரா( TaskMitra) சேவை.

நகரில் தங்கள் தேவையை நிறைவேற்றக்கூடிய சரியான நண்பர்களை தேடிக்கொள்வதற்கான மேடையாக 'டாஸ்க்மித்ரா' (TaskMitra) திகழ வேண்டும் என நினைத்தனர். கிரவுட்சோர்ஸ் முறையில் செயல்படும் சந்தையான டாஸ்க்மித்ரா அனைத்து வகையான சேவைகளுக்குமான இடமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சைக்கிள் கற்றுத்தருபவர் முதல் தோட்டக்கலை வல்லுனர், தனிப்பட்ட அழைப்பிதழ்களை எழுதிதரக்கூடிய அழகான கையெழுத்து கொண்டவர் என அனைத்து விதமான செயல்களுக்குமான நபர்களை இதன் மூலம் தேடலாம். இது குறிப்பிட்ட சேவைகளுக்கானது மட்டும் அல்ல; எந்த ஒரு திறன், அனுபவம் மற்றும் ஆற்றல் கொண்டவர்கள் தங்கள் சேவைகளை அளித்து மற்றவர்களுக்கு உதவுதற்கான மேடை இது. பி2பி, பி2சி மற்றும் சி2சி ஆகிய பிரிவுகளில் சேவை அளிக்கிறது.

"பணி அறிவிப்பு தளம், செயல்களை தேடிப்பார்த்து அறியும் வசதி மற்றும் கிரவுட்சோர்சிங் தன்மை ஆகிய மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி டாஸ்க்மித்ராவை உருவாக்கினோம்” என்கிறார் டாஸ்க்மித்ரா சி.டி.ஓ கவுதம்.

எல்லா வகையான செயல்களுக்கும், பணி வழங்குவர்கள் மற்றும் சேவை நாடுபவர்கள் எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய மேடையாக இருக்கும் வகையில் சமூகத்தன்மை ஒருங்கிணைப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதில் பங்கேற்று சேவை அளிப்பவர்கள் பெரும்பாலும் தொழில்முறை சேவை வழங்குபவர்கள் என்றாலும் பிரிலான்சர், பகுதிநேர பணியாளர்கள், மாணவர்கள். இல்லத்தலைவிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்றவர்கள் ஆகியவர்களையும் இதில் பார்க்கலாம்.

வருவாய் மற்றும் வளர்ச்சி

ரூ. 4 லட்சம் ஆரம்ப முதலீட்டுடன் துவக்கப்பட்ட இந்நிறுவனம் முழுவதும் சொந்த நிதியில் செயல்படுகிறது. இதுவரை நிறுவனர்கள் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் குழு உருவாக்கத்தில் இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் டாஸ்க்மித்ரா இலவச சேவையாக இருக்கிறது. செயல்களின் வகைகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் செயல்களுக்கான கட்டணத்தில் ஒரு தொகையை கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளது. "சந்தா அடிப்படையிலான பிரிமியம் சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறோம்” என்கிறார் கவுதம்.

அறிமுகத்திற்கு பிறகு 6,000 பணிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1.75 கோடிக்கு மேல் இருக்கும். 27,000 பயனாளிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர். 30 சதவீதம் பேர் தொடர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். "எந்த விளம்பர செலவும் இல்லாமல் 12 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறோம். போட்டியாளர்களை விட வாடிக்கையாளர்களை கவர்வதற்கான செலவு 95 சதவீதம் குறைவாக இருக்கிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் 2,50,000 பதிவு செய்த பயனாளிகளை பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்கிறார் கவுதம்.

மும்பையில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புனே மற்றும் பெங்களூருவுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. எனினும் உடனடியாக அடுத்த கட்ட செயலாக மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. பல மொழி வசதி மற்றும் பிற அம்சங்களையும் இது கொண்டிருக்கும்.

பிக் டேட்டா

அதிக அளவில் பரிவர்த்தனை மற்றும் பயனாளிகள் உண்டாகியுள்ள நிலையில் டாஸ்க்மித்ரா, பிக் டேட்டா மற்றும் இயந்திர கற்றலில் கவனம் செலுத்தி வருகிறது.

“சேகரிக்கப்படும் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டு அலசப்படுவது ஏற்படுத்தி தரக்கூடிய புரிதல் வருவாயை அதிகரிக்கவும், வாடிக்கையாளரை பெறவும், தக்க வைத்துக்கொள்ளவும், செயல்பாடுகளை சீராக்கவும் உதவும். முழு அளவிலான டேட்டா விஞ்ஞான ஆய்வுக்கூடமும் அமைக்கப்படுகிறது” என்கிறார் கவுதம்.

சந்தை மற்றும் போட்டி

இந்தியா போன்ற பெரிய நாட்டில் உள்ளூர் சேவைகளுக்கான சந்தை 50 பில்லியன் டாலர் மதிப்பிலானது மற்றும் வேகமாக வளர்கிறது.

இந்த துறையில் அர்பன்கிலாப் ( Urbanclap), டோர்மிண்ட்(Doormint), டைம்சேவர்( TimeSaverz) மிஸ்டர் ரைட் (Mr. Right), டாஸ்க் பாப் (Taskbob), ஜெப்பர் (Zepper) உள்ளிட்ட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜஸ்ட் டயல், யெல்லோ பேஜஸ், நியர்.இன், சுலேகா மற்றும் ஜேக் ஆன் பிளாக், ஹேமர் அண்ட் மாப் ஆகியவையும் மறைமுக போட்டியாளர்களாக திகழ்கின்றன.

இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டோர்மிண்ட், ஹீலியான் வென்சர்ஸ் மற்றும் கலாரி கேபிடல் உள்ளிட்டவற்றிடம் இருந்து 3 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. 2015 ஏப்ரலில் டாஸ்க்பாப் ஓரியோஸ் வென்ச்சர் பாட்னர்ஸ் மற்றும் மேபீல்ட் பண்ட் ஆகியவற்றிடம் இருந்து 1.2 மில்லியன் டாலர் நிதி பெற்றது. இந்த ஆண்டு ஜூனில் அர்ப்ன்கிளாப் சிரீஸ் ஏ நிதியில் 10 மில்லியன் டாலர் பெற்றது. ஜூலையில் ஜிம்பர் ஐடிஜி வென்ச்சர்ஸ் மற்றும் ஓம்டியார் நெட்வொர்க் உள்ளிடவற்றிடம் இருந்து நிதி திரட்டியது.

"சேவை அல்லது தயாரிப்பின் தரத்தால் தீர்மானிக்கப்படும் சேவை துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கிரவுட்சோர்சிங் முறையை பின்பற்றி வருவதால் நாங்கள் மாறுபட்ட வர்த்தக மாதிரியை கொண்டுள்ளோம். இன்று அறிமுகமில்லாதவர்கள் இடையே நட்பு மற்றும் நம்பகத்தன்மை உண்டாக தொழில்நுட்பம் வழி செய்வதால், மக்கள் எளிதாக தொடர்பு கொண்டு, உதவி பெறக்கூடிய நட்பான முறையை டாஸ்க்மித்ரா மீண்டும் கொண்டுவந்துள்ளது. இது வரவேற்பை பெற்றுத்தந்துள்ளதுடன் முற்றிலும் எதிர்பாராத வகையில் புதிய வகை சப்ளையையும் உருவாக்க உதவுயுள்ளது” என்று போட்டி பற்றி கவுதம் கூறுகிறார்.

பல போட்டி நிறுவனங்கள் இருப்பதால் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார். சந்தையை விட வேகமாக வளர்ச்சி அடைந்தால் தான் நிலைக்க முடியும். ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் புதிதாக வரக்கூடிய நிறுவனங்களும் போட்டியை அதிகமாக்கும். வரும் காலத்தில் கையகப்படுத்தலையும் இந்த துறை எதிர்கொள்ள உள்ளது.

இணையதள முகவரி: TaskMitra