குழந்தையின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் இரு பெண் டாக்டர்கள்

0

டாக்டர். நிர்மலா, டாக்டர் வர்ஷா சாம்சன் ராய், ஆகிய இரண்டு பெண் மருத்துவர்கள் இணைந்து, மருத்துவத்தில் இன்றைய முக்கிய பிரச்சனையான குழந்தையின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பல பெண்களின் மன வலியை போக்கி அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றி வருக்கின்றனர். பத்து வருடங்களாக இவ்விருவரும் கை கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த சேவையை புரிய, இருவரும் சேர்ந்து 2004ம் ஆண்டு "உயர்தர கருத்தரிப்பு மையம்" (Advanced Fertility Centre) ஒன்றை தொடங்கினர். பெங்களுரு ஜே.பி நகரில் சிறப்பு மையமாக விளங்கும் இந்த கருத்தரிப்பு மையத்தில் மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் பிரத்யேக முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பிரிவை டாக்டர்.நிர்மலா ஒரு புறம் கவனித்துக்கொள்ள, டாக்டர் வர்ஷா இந்த மையத்தின் கருவியல் பிரிவை நிர்வகித்து வருகிறார்.

இந்த துறையில் ஒரு பெரும் பொறுப்பில் பல வருடங்களாக டாக்டர். நிர்மலா திகழ்ந்து வருகிறார். இவருடைய பங்கேற்பை பாராட்டும் விதத்தில் சமீபத்தில் இவருக்கு "ஆர்யபட்டா விருது" அளித்து கவுரவிக்கப்பட்டது. சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற டாக்டர்.வர்ஷா கருவியல் நிபுணராக பொறுப்பேற்று கொண்டார். "எனக்கு இதை கட்டாயமாக செய்ய முடியும் என்பதில் அதிக நம்பிக்கை இருந்தது." என்று உறுதியாக கூறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக மலட்டுதன்மை, குழந்தையின்மைக்கான சிகிச்சைகள், ஆய்வகங்களை மையமாக வைத்தே தரப்படுகின்றது என்று கூறுகிறார் வர்ஷா.

ஆரம்பித்த காலத்தில் இந்த கருத்தரிப்பு மையத்தில் பல பிரச்னைகள் மற்றும் சவால்களை சந்தித்து, இன்று வெற்றிகரமாக இந்த மையத்தை பத்து ஆண்டுகளாக நடத்திவருவதாக நிறுவனர்கள் வர்ஷாவும் நிர்மலாவும் தெரிவிக்கின்றனர்.

மையத்தின் வளர்ச்சி ஏற்பட்ட கதை

இந்த மையத்தை நிறுவிய நேரத்தில், இது பெரும் வளர்ச்சியை அடையும் என்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகளுக்கு முன், ஒரு நல்ல ஆய்வகத்தை மட்டும் அமைத்து வாடகைக்கு இடத்தை தேர்ந்தெடுத்து அதில் மையத்தை நிறுவினார்கள். தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 நபர்கள் மட்டுமே வந்தாலும், 2008, 2009ம் ஆண்டில் 5000 புதிய பதிவுகள் வரத்தொடங்கி, லேசான வளர்ச்சியை அடைந்தது.

பெண் தொழில்முனைவோராக இருப்பதில் நல்ல விஷயங்கள் பல இருந்தாலும், அதில் சில நடைமுறை சிக்கல்களும் இருப்பதாக நிர்மலா கூறுகிறார். வங்கிகள் இவர்களிடம் சற்று பொறுமையாக நடந்துக்கொள்வது இவர்களுக்கு ஆதரவை அளிக்கும் விதத்தில் இருந்தாலும், வர்த்தக ரீதியில் சில பேருடன் பேசும் போது, சில பிரச்னைகளை இவர்கள் சந்திக்க நேர்ந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனாலும், "எங்கள் சிறப்பு மையத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கும் போது நாங்கள் அளவற்ற சந்தோஷத்தை அடைகிறோம்" என்று பேரானந்தத்துடன் கூறுகின்றானர்.

யுவர் ஸ்டோரி குழு இவர்களை சமீபத்தில் சந்தித்த போது எடுத்த விடியோ பதிவு: