இளம் தொழில் முனைவோர்களுக்கு 5 அனுபவ அறிவுரைகள்... 

0

துவக்க நிலையில், இளம் தொழில்முனைவோர், வெற்றி பெறலாம் அல்லது தோல்வி அடையலாம். எனவே சரியான நேரத்தில் சரியான அறிவுரை அவசியம். ஸ்டார்ட் அப்பின் ஆரம்ப நாட்கள் சோதனை மிக்கதாக அமையலாம். அனுபவ குறிப்புகளை பெற்று உற்சாகம் கொள்ளுங்கள்.

புதிய தலைமுறையினர் வர்த்தகத்தில் நுழையும் நிலையில், அனுபவ அடையாளத்தை மீறி, தொழில்முனைவோராக வாய்ப்புள்ள இளம் சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் சிக்கலான பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமான அணுகுமுறையை கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் 6.02 சதவீதம் பெரியவர்கள் சொந்த வர்த்தகத்தை தங்கள் பிரதான வேலையாக கொண்டிருப்பதாக 2016ல் காப்மென் பவுண்டேஷன் தெரிவித்தது. புத்திசாலியானவர்கள் தங்கள் சொந்த பணியை கொஞ்சம் முன்னதாகவே துவங்கிவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றாலும், எதிர்வரும் சவால்களுக்கு நாம் தயாராக இருப்பது நல்லது.

அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர் பரிசோதனைகளை மேற்கொண்டு, கடினமாக உழைத்து அதன் பின் சாதித்திருக்கின்றனர். எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றனர் என்றாலும், உங்கள் ஸ்டார்ட் அப்பிற்கு ஏற்ற ஊக்கத்தை தரும் உதாரணத்தை நாட வேண்டும்.

இளம் தொழில்முனைவோர், தாங்கள் விரும்பிய இலக்கை அடைய தேவையான ஆலோசனைகள் மற்றும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் ஐந்து அடிப்படை அம்சங்கள் இதோ:

1. ஆர்வமும் புத்திசாலித்தனமும்

சொந்த வர்த்தகத்தை துவக்கும் பொறுப்பேற்பது என்பது எளிதான விஷயம் அல்ல. நீங்கள் சீரான முயற்சி மேற்கொள்ள வேண்டும். சிறிய விஷயங்களை கவனிக்கும் ஆர்வம் உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் அல்லது மக்கள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் சேவை அல்லது தயாரிப்பு என்பது அதற்கான தேவை இருக்கும் போது தான் வெற்றி பெறும். சந்தையில் உள்ள இடைவெளியை கவனித்து அதை பூர்த்தி செய்வதற்கான வழியை தேடவும்.

இதற்கு, நீங்கள் உள்ளார்ந்த தொழில்முனைவு தன்மையை பெற்றிருக்க வேண்டும். தினசரி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றக்கூடிய மனது மற்றும் புதிய வர்த்தக எண்ணத்தை அளிக்கக் கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் கண்டறியும் ஆற்றலை இந்த தன்மை பெற்றிருக்கும். இதே அணுகுமுறையை இன்னமும் மற்றவர்கள் கண்டறியாத வாய்ப்புக்காக பயன்படுத்தவும்.

2. தனிப்பட்ட இலக்கு

சூழல் மற்றும் நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடிய தன்மையை எப்போதும் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பம் அல்லது தேவை இரண்டுமே நிலையாக இல்லாத ஒரு சூழலில் இருக்கிறோம். எப்போது தேவையோ அப்போது சூழலுக்கு ஏற்ப மாறும் திறன் முக்கியம். உங்கள் வர்த்தகத்தை பாதிக்கக் கூடிய எதிர்பாராத சூழலை சமாளிக்க, எதிர்வினை ஆற்றுங்கள், திட்டமிடுங்கள், தயாராக இருங்கள்.

முதல் 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான திட்டத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏற்ற இறக்கங்களால் வர்த்தகம் பாதிக்கப்படும் போது அதை சமாளிப்பதற்கான உத்தேசமான வரைவு திட்டமாக இது இருக்க வேண்டும். இந்த சூழலில் உங்கள் தனிப்பட்ட இலக்குகளை விட, பெரிய சித்திரத்தில் கவனம் செலுத்தவும். அது உடனடியாக அல்லது பின்னர் எப்படி தாக்கம் செலுத்தும் என பார்க்கவும்.

3. மன உறுதி

குட் பிலிம்ஸ் நேர்காணலில் 14 வயது தொழில்முனைவோர் இப்படி சொல்கிறார்.

“தேவையை நோக்கி, வாடிக்கையாளர்களை எப்படி கொண்டு வருவது என யோசிப்பது மிகவும் முக்கியம். அனுபவம் இல்லாத தொழில்முனைவோரிடம் இருந்து அனுபவம் இல்லாத தொழில்முனைவோரை பிரிப்பது, தொடர்ந்து முயற்சிக்கும் உறுதி தான்,” – தீபர் டோமர், சி.டி.ஓ, கிலாவக்ஸ் டெக்னாலஜிஸ்

உங்கள் வரம்புகளை விட கடினமாக உழைக்க செய்வதை, கடினமான சூழலுக்கு சவால்விடுவதை தடுக்க வேண்டாம். உங்கள் நேரத்தை திறம்பட சமாளிக்கும் வகையில், தோல்விகள் மற்றும் இறக்கங்களுக்கு பிறகும் உற்சாகமாக வேலை செய்யும் வகையில் உங்கள் ஆற்றலை எப்போதும் துடிப்புடன் வைத்திருங்கள்.

4. பிராண்ட் மதிப்பு

அடிப்படை தேவை மற்றும் மேம்பட்ட தேவைகளை கவனிக்க வேண்டிய வகையில் ஸ்டார்ட் அப்பின் ஆரம்ப நாட்கள அமையலாம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நடைமுறை தேவையை எதிர்கொள்ளலாம். இது இயல்பானது தான். இது எப்போதும் கற்றல் தான், உங்களின் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வரக்கூடியது. ஆனால் உங்கள் பிராண்ட் மதிப்பை மறந்துவிடும் அளவுக்கு தேவைகளில் மூழ்கிவிட வேண்டாம்.

வேகத்தில் மென்மை தேவை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சீராக செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பிராண்டாக உருவாகியிருக்கும் தரத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். இது ஒரு சவால் தான், ஆனால் இதை நிறைவேற்றுவது சந்தையில் உங்களுக்கு நீண்ட கால பலன் அளிக்கும்.

5. குறிப்புகள்

தொழில்முனைவோராக இருப்பது என்பது, வகுப்பறை பாடம் அல்ல. பயிற்சி பெறுவது, வாசிப்பது மற்றும் எண்ணங்களை செயல்படுத்துவது என்பது பாட புத்தகம் சார்ந்தது அல்ல. தினசரி நடவடிக்கைகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். எங்கே சென்றாலும் கையில் ஒரு குறிப்பேட்டை வைத்திருக்கவும். உங்களுக்கு ஆர்வம் அளிக்கும் விஷயங்கள் அல்லது சிந்தனை பொறிகளை குறித்து வையுங்கள்.

”நிறுவனத்தை தலைமையேற்று நடத்த விரும்பும் எவரும் குறிப்பெடுக்கும் வழக்கம் கொண்டிருகக் வேண்டும் என உறுதியாக நம்புகிறேன். நான் எங்கும் குறிப்பேட்டை கொண்டு செல்கிறேன். ஆர்வத்துடன் குறிப்பெடுக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த இது உதவுகிறது. செயல்திறனுடன் இருக்க ஊக்கம் அளிக்கிறது, நேரத்தை வீணாக்காமல் இருக்க முடிகிறது."

ரிச்சர்டு பிரான்சன், நிறுவனர், வர்ஜின் குழுமம்

ஒருவர் என்ன தான் உறுதியாக இருந்தாலும், திறமையான குழு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. உங்கள் நிறுவன பணியாளர்களுக்கான குணாதிசயத்தில் கவனம் செலுத்தவும். ஒருவர் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம் ஆனால் அவர்கள் குணாதிசயத்தை நிறுவனத்திற்கு ஏற்ப மாற்ற முடியாது. நீங்கள் இழந்ததை அல்லது இல்லை என உணர்ததை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பலவீனத்தை வாய்ப்புகளுக்காப பாதையாக மாற்றுங்கள்.

எல்லா அறிவுரையையும் காது கொடுத்து கேளுங்கள், ஆனால் உங்கள் துடிப்புக்கு ஏற்றவற்றை கடைப்பிடியுங்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: மார்க் டெட்சன் | தமிழில்;சைபர்சிம்மன்

(பொறுப்புத்துறப்பு: இது எங்கள் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி சமூக பதிவு. இதன் உள்ளடக்கம் மற்றும் கருத்துக்கள் எழுதியவருக்கு சொந்தமானது. இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)