அரசுப்பள்ளி மாணவிகளுக்கு 'கண்ணியத்தை' பரிசாக அளித்த கலா சார்லு!

0

எதிர்பாராத நேரத்தில் நடந்த சாலை விபத்து தன்னுடைய மகளின் உயிரை பலி வாங்கியதில் நிலைகுலைந்து போயிருந்தார் கலா சார்லு. அந்த வலியில் இருந்து மீள, அவர் தொடங்கிய தொண்டுநிறுவனம், பல பெண்கள் நல்ல வாழ்க்கை வாழ உதவி செய்து வருகிறது.

"மல்ட்டிப்பிள் இனிஷியேட்டிவ்ஸ் டூவேர்ட்ஸ் அப்லிஃப்ட்மென்ட்" (Multiple Initiatives Towards Upliftment) என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த 5 ஆண்டுகளாக பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார் கலா. இந்த நிறுவனம் பெண்களின் சுகாதார மேம்பாடு, மற்றும் வேலைவாய்ப்பின் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டுசெயல்படுகிறது.

கலா ஒரு சிறந்த மனிதர். அவர் பல்நிலைக் கல்வியைப் பயின்றுள்ளார். “நான் இளநிலை ஹோம் சயின்சும், டயட்டெட்டக்சில்(உணவூட்டல் இயல்) பட்டயப் படிப்பும் படித்துள்ளேன். கர்நாடக கூடைப்பந்து அணியிலும், துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் நான் பங்கேற்றுள்ளேன். என் கூடப் பிறந்த ஐந்து சகோதரிகளில் நான் இளையவள், என்னுடைய தந்தை நான் வித்தியாசமாகவும் சுதந்திரமாகவும் வளர வேண்டும்” என்று எண்ணியதாக கூறுகிறார் கலா.

தன்னுடைய கணவர் பணி ஓய்வு பெற்றதும், தன் 90 வயதான தந்தையுடன் இருப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு இடம்பெயர்ந்து விட்டார் கலா. என்னுடைய மகளும்அவளுடைய இளம் குழந்தையுடன் பெங்ளூருக்கு வந்திருந்தாள், அப்போது தான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கலா வேதனைபட்டார். “ஒரு சாலை விபத்தில் திடீரென உயிரிழந்த என்னுடைய 26 வயது மகள் மைத்திரேயியின் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் நான் ஒரு அமைப்பு சாரா தொண்டு பணியை செய்ய முன்வந்தேன். ஆனால் அந்தப் பணி எனக்கோ, பயன்பாட்டாளர்களுக்கோ நான் எதிர்பார்த்த அளவு திருப்தியை அளிக்கவில்லை” என்கிறார் அவர். ஒரு சம்பவம் உண்மையில் என்னை புரட்டிப் போட்டது, ஒரு குடிசைப்பகுதியில் நான் சேலைகளை வழங்கிக் கொண்டிருந்த போது (இதற்கு முன்பும் வேறு பல பொருட்களை அளித்துள்ளேன்) பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. சேலைகளை எடுக்க மக்கள் போட்டி போட்டு வந்ததால் முதலில் நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் பயன்பாட்டாளர்களுக்கு சேலையின் நிறம் பிடிக்கவில்லை, உண்மையில் சொல்ல வேண்டுமெனில்அவர்களிடம் சேலைக்கேற்ற உள்ளாடையோ அல்லது பிளவுஸோ இல்லை. இதனால் எனக்கு ஒரு அதிருப்தி உணர்வு ஏற்பட்டது.

அந்த அனுபவத்திற்கு பிறகு தான் ஒரு வித்தியாசமான கோணத்தில் தான் பயணிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார் கலா.“ஒரு மனிதனுக்கு ஒரு வேளை சாப்பிட மீன்கொடுப்பதை விட அவனுடைய வாழ்நாள் முழுவதும் பயன்படுகிற விதமாக மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கலாம் என்ற பழம்பெரும் சீனப் பொன்மொழி அப்போது தான் எனக்கு நினைவு வந்தது. இதன் விளைவாக சொந்தமாக ஒரு நிறவனத்தைத் தொடங்கலாம் என்ற யோசனையின் போது பிறந்தது தான் எம்ஐடியூ” என்று பெருமைபடக் கூறுகிறார் கலா.

எம்ஐடியூவிற்கு கிடைத்த வரவேற்பு

 “எனக்கு தெரிந்த மற்றும் தெரியாத நபர்களிடம் இருந்து எம்ஐடியூவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்களால் பல வழிகளில் நிதி உதவியும்,தொடர்ந்து தன்னார்வலர்களாக பணிபுரிபர்வளும் கிடைத்தார்கள். அதே போன்று எங்களுடைய பொருட்களை வாங்குபவர்களாகவோ அல்லது எம்எச்எம் அதாவது மாதவிடாய் சுகாதார மேம்பாடு மற்றும் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துபர்வகாளகவும் அவர்கள் விளங்கினர். எங்களுடைய பணிக்கு ஊடகங்களும் தனி அந்தஸ்த்தை அளித்தது”.

என் வாழ்நாளில் நான் எடுத்த முடிவுகள் பற்றி ஒரு போதும் என்னையே நான் கேட்டுக் கொண்டது இல்லை என்று சொல்கிறார் கலா. அவருடைய குடும்பத்தாரும் அவரை சுற்றி இருக்கும்உலகமும் கலா தேர்வு செய்த இந்த பணியை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

எம்ஐடியூ மூலம் கலா ஏற்படுத்திய மைல்கல் 

“முதன்முதலில் 2009 ஏப்ரல் மாதத்தில் என்னுடைய பணிகளை தொடங்கிய போது ஒரு தெளிவு இல்லாமல்இருந்தது. அதன் பின்னர் நான் ‘கூஞ்ச்’ (Goonj) மற்றும் அதன் மையப்பொருளான மாதவிடாய் சுகாதார மேம்பாடு (MHM) பற்றி படித்தேன். அதே போன்று நாங்களும் தொடக்கத்தில் பழையதுணி மற்றும் தையல்கார்களிடம் இருந்த எஞ்சிய துணைகளைக் கொண்டு சானிடிரி நாப்கின்கள் தயாரித்தோம். ஆனால் இந்த வகை நாப்கின்களை இலவசமாக கொடுத்தாலும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உடனேயே எங்களுக்கு புரிந்து விட்டது. இதனால் எங்களுடைய பார்வையை வேறு திசையில் செலுத்தினோம். பைகள் தயாரிப்பு மற்றும் தையல்காரர்களிடம் இருந்த தேவையற்ற துணிகளைக்கொண்டு புதிய பயன்படும் பொருட்களை உருவாக்கினோம். மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற குறைந்த ரசாயனங்களைக் கொண்ட விலை குறைவான சானிடரி நாப்கின்களையும் விநியோகித்தோம். எங்களுடைய ‘கண்ணியத்துக்கான நன்கொடை" 'Donate for Dignity' பிரசாரத்தின் பயனாக நாங்கள் பெங்களூரு நகரத்தில் உள்ள பல கல்விநிலையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளின் பெண்களுக்கும் நாப்கின்களை வழங்க முடிந்ததாக மகிழ்கிறார் கலா.

தொடர்ந்து கலா பேசுகையில், 2012ல் தும்குர் மாவட்டம் துருவக்கெரெ தாலுகாவில் உள்ள பள்ளிக்கு எம்எச்எம் பற்றி தெரிவிக்கும் வாய்ப்பு எம்ஐடியூவிற்கு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, 2014ல் நாங்கள் சித்ரதுர்கா மாவட்டம் மொல்கல்முரு தாலுகாவில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவிகளுடனும் கலந்துரையாடினோம். அண்மையில் நாங்கள் துருவக்கெரெ தாலுகாவில் உள்ள 17 பள்ளிப் பெண்களுக்கு, பயன்படுத்திய பேட்களை கழிப்பறையில் அப்புறப்படுத்துவற்கான ஒரு சுகாதாரமான கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளோம். இதே போன்று பேட் தயாரிக்கும் ஒரு பிரிவை அமைப்பதற்காக ஹட்டிஹள்ளி என்ற கிராமத்தில் ஒரு இடத்தையும் ஆய்வு செய்துள்ளோம்.

நிதியை பொறுத்த வரையில் ஆண்டு வெளியீடு அளவில் வருட இறுதியில் சுமார் ரூ.10 லட்சத்தை எம்ஐடியூ எட்டியுள்ளது. அனைத்து செயல்களும் நன்கொடையை கொண்டும், 8 முதல்10 பெண்கள் வரை தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை மூலதனமாகவும் கொண்டுள்ளது.

பாசத்குரியவரின் இழப்பும் கலா எதிர்கொண்ட சவாலும்

“என் மகளின் மரணம் ஏற்படுத்திய தழும்பு ஆற வெகு காலம் ஆனது. அதன் பின்னர் என்னுடைய 98வயது முதிர்ந்த தந்தையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்து கொண்டது. வயது மூப்பு காரணமாக புலன்களின் செயலிழக்கம் குறைந்ததால், அவர் தன்னை சுற்றி நடப்பவற்றைகொஞ்சம் கொஞ்சமாக உணர மறந்தார். மேலும் அன்றாட செயல்களுக்கு மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், அவரைப் பேணி பாதுகாப்பது எனக்கு கடினமாகிவிட்டது. நான் நேசித்தவர்களில் வாழ வேண்டிய வயதில இருந்த என் மகளை மரணம் உடனே அழைத்துக் கொண்டது. வயது மூத்த என் தந்தையை அதே மரணம் துன்புறுத்துகிறது”என்று வேதனை அடைந்தார் கலா.

கலாவின் தந்தை அளித்த அறிவுக்கூர்ந்த ஆலோசனைகள், அவருடைய பலத்திற்கான மிகப்பெரிய ஆதாரமாகவும், அனைத்து செயல்கள் மற்றும் துணிகர முயற்சிக்கு காரணமாகவும் இருந்தது. “உறுதியில்லாத அல்லது குழப்பமான சூழ்நிலைகளில் ஒரு விஷயத்தை தெளிவாக அலசி ஆராய அவர் எனக்கு மிகவும் உதவுவார். அதே போன்று எதற்கு முக்கியத்துவம் அளித்து அதனை எவ்வாறு உற்று நோக்கி அணுக வேண்டும் என்பதை புரிந்து கொள்ளவும் தந்தை உதவியுள்ளதாக” கூறுகிறார் கலா.

கலாவின் முயற்சிக்கு நம் நாட்டில் அங்கிகாரம் கிடைத்ததா?

 “அரசு செயல்படுத்தும் திட்டங்களிலேயே சுறுசுறுப்பான திட்டப்பட்டியலில் எம்எச்எம் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார் கலா. மேலும் நாடு முழுவதும் பல்வேறு மக்கள் இந்தப் பணியில் உள்ளதாக தெரிவிக்கிறார் . எனினும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். ஏனெனில் மாதவிடாய் பற்றிய அடிப்படை மனப்பாங்கும், கட்டுக்கதைகளும், விலக்கப்படாத விஷயங்களும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்கிறார் அவர்.

கலா தொடர்ந்து பேசுகையில் இந்த மனப்பாங்கை கல்வியின் மூலம் அகற்றும் நடவடிக்கை உடனடியாக தேவை; சுகாதாரத்தை மேம்படுத்த மலிவு விலை பேடுகளை அளிப்பதோடு, மாதவிலக்கின் போது சுதந்திரமாக செயல்படவும், பேடுகளை அப்புறப்படுத்தும் முறையை கற்பிப்பததன் மூலம் சுற்றுச்சூழலின் சுமையை இலகுவாக்கலாம்.

“நிதானம், நம்பிக்கை மற்றும் நேர்மையாக இருந்தால் மக்கள் சீறும் சிறப்பும் பெறலாம் என்பதை எம்ஐடியூவை நடத்துவதன் மூலம் தெரிந்து கொண்டேன். நான் நிர்வாகவியலோ, கணக்கியலோ அல்லது நிதி மேலாண்மை குறித்தோ படிக்கவில்லை; அதனால் எனக்கு தெரிந்த வகையில் என்னுடைய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தேன். விலைமதிக்கமுடியாத விஷயமாக இருந்தால் நாம் எதிர்பார்க்காத பல வகையில் உதவிகள் வந்து சேரும் என்பதையும் நான் இதன் மூலம் கற்றுக் கொண்டேன். எனவே எம்எச்எம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் கருவியாக நானும் இருந்ததில் பெருமிதம் அடைவதாக” மகிழ்கிறார் கலா.

ஒரு பெண்ணாக கலா தன்னுடைய குடும்பம் மற்றும் உறவுகளில் மிகவும் ஆர்வமுடையவர். அவருக்கு பெரிய ஜிக்சா பசில்களை ஒன்றிணைக்க பிடிக்கும். “கடைசியாக நான் ஒரு ஆல்ஃபைன் மலைக்காட்சியை 3000 துண்டகளை’ கொண்டு ஒருங்கிணைத்தேன். குடும்பத்தாருடன் நேரத்ததை கழிப்பதே மிகச்சிறந்த ஓய்வு. என்னுடைய பேரக் குழந்தைகளோடு மணிக்கணக்கில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறார் கலா.

ஒரு தனிப்பட்ட பெண்ணாக இல்லாமல் எம்ஐடியூவை முறையான கட்டமைப்பு, மதிப்பு மற்றும் கலாச்சாரத்தோடு பயணிக்கும் ஒரு அமைப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தன்னுடைய எதிர்கால திட்டத்தில் ஒன்று என்கிறார் அவர்.

“இறகுகளுடன் கூடிய துணி சானிடரி நாப்கின்களை தயாரிக்கும் பணியை நாங்கள் மீண்டும் தொடங்கியுள்ளோம். மென்மையான காட்டன் துணிகளின் சவுகரியத்தையும் அவற்றை எவ்வாறு கரையின்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களுக்கும் இவ்வகை பேடுகளை வழங்க உள்ளோம். நகர்ப்புற சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில்வ்இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்களுக்காகவே இவற்றை திட்டமிட்டுள்ளோம்” என்று சொல்கிறார் கலா சார்லு.

Stories by Gajalakshmi Mahalingam