பொது போக்குவரத்து வாகனங்களில் வாகன கண்காணிப்பு அமைப்பு கட்டாயம்!

0

சாலை போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அரசுப் பேருந்துகள் மற்றும் டேக்ஸிக்களில் வாகன இருப்பிடத்தின் கண்காணிப்பு மற்றும் அவசரகால பட்டன் ஆகியவற்றைக் கட்டாயமாக்கியுள்ளது.

இது 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவுசெய்யப்படும் வாகனங்களுக்குப் பொருந்தும். எனினும் இதற்கு முன்பே 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு தற்போது புதிய போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேதியை நிர்ணயிக்கும் பொறுப்பை மாநில அரசாங்கத்திடம் மாற்றியுள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியாங்க் பாரதி அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடுகையில்,

பயணிகள் வாகனத்தில் வாகன கண்காணிப்பு அமைப்பு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது. வணிக ரீதியாக இயங்கும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் இந்த அறிவிப்பானது வெளியிடப்படும். பழைய வாகனங்களில் இந்த அம்சங்களை இணைப்பது தொடர்பான தீர்மானங்களை மாநில அரசாங்கம் வலியுறுத்தும்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

வாகன இருப்பிடத்தின் கண்காணிப்பு மற்றும் அவசரகால பட்டனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அரசாங்கம் அல்லது வாகன இருப்பிடத்தின் கண்காணிப்பு சாதன உற்பத்தியாளர்கள் அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற ஏஜென்சிகள் போன்றவற்றால் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். அவசர உதவி மையம், போக்குவரத்து துறை அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் அதனால் நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள், சாதன உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள், அனுமதி பெற்ற பரிசோதனை ஏஜென்சிகள் போன்ற பங்குதாரர்களுடன் இந்த மையங்கள் இணைக்கப்படும்.

2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரமான கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ’தி ப்ரிண்ட்’ தெரிவிக்கிறது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இந்த வாகனங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் குறுகிய கால அவகாசத்தில் கூடுதல் அம்சங்களுடன் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து அமைச்சகத்திற்கு எழுதியுள்ளதாக ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL