அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்வு பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல்!

0

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 49 வயது அமுல் தாப்பர் அமெரிக்க உச்ச நீதிமன்ற நியமனத்திற்காக போட்டியிடுபவர்களில் ஒருவர் ஆவார்.

81 வயது அந்தோனி கென்னடி அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஜூலை 31-ம் தேதியே நீதிமன்றத்தில் தனது இறுதி நாள் என்பதை உச்ச நீதிமன்ற சக ஊழியர்களிடம் கென்னடி தெரிவித்த பிறகு வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை சந்தித்தார். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கென்னடி வகித்த நீதிபதி பதிவிக்கு புதிய நீதிபதியை பரிந்துரை செய்யவேண்டும். அவர் பரிந்துரைக்க தேர்ந்தெடுத்துள்ள ஏழு நீதிபதிகளில் அமுல் உள்ளார் என தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

கென்னடி ஃபெடரல் நீதிமன்றத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றி நாட்டிற்கு சேவையளித்தது தனக்கு பெருமிதமளிக்கிறது என்றும் இதில் 30 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கென்னடி ஓய்வுபெறுவதற்கு பதிலளிக்கும் விதமான ட்ரம்ப் குறிப்பிடுகையில்,

“அவரைப் போன்றே திறன் வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுப்போம் என்கிற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காக ட்ரம்ப் தேர்வு செய்த 25 நீதிபதிகள் அடங்கிய பட்டியலில் தாப்பரின் பெயரும் உள்ளது. இந்த பட்டியலை ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் மற்றும் ஃபெடரலிஸ்ட் சொசைட்டி தொகுத்துள்ளது. நீதிபதி கென்னடிக்கு பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்படுவதற்கான பரிந்துரை இந்த பட்டியலில் இருந்தே இடம்பெறும் என அமெரிக்க அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கெண்டகியைச் சேர்ந்த தாப்பரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு ஊடக நிறுவனங்கள் பின்னர் கண்டறிந்தனர்.

செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கோனல் அவர்களின் அபிமான நபரான தாப்பர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற பணி நியமனத்திற்காக ட்ரம்ப் அவர்களால் நேர்காணல் செய்யப்பட்டார். கென்னடியின் ராஜினாமா தாப்பருக்கு மற்றுமொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என கூரியர் ஜர்னல் தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL