’தொழில்முனைவோர்கள் தங்களின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்பட வேண்டும்’: Techspark 2017-ல் ஷ்ரத்தா ஷர்மா 

0

Techspark 2017 இன்று செப்டம்பர் 22 பெங்களூரில் சிறப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை கர்நாடக அமைச்சரான பிரியங் கார்கே பேசினார். ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் கூற்றை மேற்கோள் காட்டி தன் பேச்சை தொடங்கினார்.

யுவர்ஸ்டோரி நிறுவனர்  ஷ்ரத்தா ஷர்மா
யுவர்ஸ்டோரி நிறுவனர்  ஷ்ரத்தா ஷர்மா

இந்த இரண்டு நாள் விழாவில் பல கலந்துரையாடல்கள், யோசனை-பகிர்வு போன்ற பல கோணங்களை காணலாம். நிதி தொழில்நுட்பம், இ-காமர்ஸ், பேஷன், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையதளங்கள் போன்ற பல தலைப்புகள் இங்கு பேசப்படும். விழாவை தொடக்கிவைத்து பேசிய ஷ்ரத்தா ஷர்மா,

“இந்திய தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்’கள் தங்களின் முக்கியத்துவம் பற்றியும், அவர்களின் தேவை பற்றியும் அறிவது முக்கியமாகும். அவர்களால் பலவற்றை சாத்தியமாக்கமுடியும்,” என்றார்.

யுவர் ஸ்டோரியின் 8-வது ஆண்டு விழாவில் பேசிய அமைச்சர் கார்கே, கர்நாடக மாநிலம் ஸ்டார்ட்-அப் தொழிலுக்கு என்றுமே முக்கியத்துவம் அளிக்கிறது என்றார். இதுவரை கர்நாடகா மட்டுமே ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்காக 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர்,

“சிறந்த முதலீடு கிடைத்தும் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பொறுப்பற்ற செலவினால் விரைவில் பணத்தை செலவு செய்து விடுகிறார்கள்,” என்றார்.
கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே
கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் மற்றும் வளர்த்தல்

சமிபத்தில் கர்நாடகா மாநில அரசு நடத்திய Elevate100 திட்டத்திற்கு 1700 விண்ணபங்கள் வந்தனர் அதில் 100 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரசு நிதி உதவி செய்ய முன் வந்தது.

“நாங்கள் பெங்களூரை தாண்டி கர்நாடகாவை சுற்றி இருக்கும் அனைத்து நகரங்களுக்கு இதை எடுத்து செல்ல முயல்கிறோம். ஒரு தளம்; ஸ்டார்ட்-அப்-ஐ அரசுடனும் பெருநிறுவனங்களுடனும் இணைக்க வேண்டும். அதற்கான ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும்,” என கூறினார்.

பெங்களூரில் மட்டுமே 7200 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருகின்றன அதில் 4000 நிறுவனம் கர்நாடகா அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது. மேலும் கர்நாடக அரசு இதுவரை 61 ஸ்டார்ட்-அப் தொழிலுக்கு முதலீடு செய்துள்ளது.

சிறந்த சூழல் உருவாக உதவுகிறது

கர்நாடகா அரசு AI, மெஷின் கற்றல் மற்றும் பிக் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. இது நிறுவனங்களின் ஆற்றல்மிக்க நிறுவனமான IBM, NVIDA, இன்டெல் மற்றும் மைக்ரோசாப்ட் போன்றவற்றின் உதவியோடு இந்த ஆண்டின் இறுதியில் வர உள்ளது. மேலும் 2017 இறுதியில் சைபர் பாதுகாப்பு மையம் அமைக்கவும் மற்றும் நிதி ஆண்டின் இறுதியில் ஒரு பெரிய EV உற்பத்தி வசதியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

“தொழில்முனைவோரே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் தொழில்முனைவோராய் இருப்பது மிகவும் கடினம், பல சிக்கல்களை மேற்கொள்ள நேரிடும். ஆனால் இது ஒரு சிறந்த பயணம்,”

என்று நிறுவுனர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். 

பெங்களூரு தவிர மற்ற இடங்களில் அரசாங்கம் செயலில் உள்ளது அதாவது பெல்காவி, ஹூப்ளி, மங்களூரு மற்றும் குல்பர்கா ஆகிய இடங்களில் ஹார்டுவேர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

“நிறைய மாநிலங்கள் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகின்றனர். ஆனால், ஐடி மற்றும் ஸ்டார்ட்-அப் பொறுத்தவரை கர்நாடகா வளர்ந்து முன்னோடியாகவே திகழும்,” என தன் உரையை முடித்தார்.