சுயேட்சை வேட்பாளராக ஆக்ராவில் போட்டியிடும் 95 வயது அசத்தல் பாட்டி!

0

ஜல் தேவி, 95 வயதான ஆக்ராவை சேர்ந்த ஒரு பாட்டி நடைப்பெறவிருக்கும் உத்தர பிரதேச தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆக்ரா வில் உள்ள கேராகர் என்னும் தொகுதியில் இருந்து போட்டியிட அவர் விண்ணப்பித்துள்ளார். ஜல் தேவி, தேர்தலில் போட்டியிடும் மிகவும் வயதான முதல் பெண்மணி ஆவார். ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற இடங்களில் போட்டியிடும் 166 வேட்பாளர்களுள் இந்த முதியவரும் ஒருவர். பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் தொடங்குகிறது. 

ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த ஜல் தேவி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வீல் சேரில் வந்தார். அவருடைய மகன் ராம்நாத் சிகர்வார் மற்றும் வழக்கறிஞர் அவருடன் துணைக்கு வந்தனர். ஜல் தேவியின் மகன் ராம்நாத்தும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது சுவாரசிய தகவல். ஜல் தேவி மனு தாக்கல் செய்த காணொளி: 

ஜல் தேவி, ஊழலை எதிர்த்தும், தொகுதியில் வளர்ச்சிக்காகவும் இந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவதாக கூறியுள்ளார். இதற்கு முன் பஞ்சாயத்து தேர்தலில், ஜாக்னெர் ப்ளாக் எனும் இடத்தில் போட்டியிட்டு 13000 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India