மத்திய பட்ஜெட் 2017-18: ஒரு பார்வை! 

0

பட்ஜெட் மதிப்பீடுகளை எளிதாக புரிந்துகொள்ள வசதியாக இந்த பிரிவில் பட்ஜெட் பார்வை வெளியிடப்படுகிறது. இதில் வரவினங்களும், செலவினங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கூடவே, நிதி பற்றாக்குறை வருவாய் பற்றாக்குறை, திறம்பட்ட வருவாய் பற்றாக்குறை, தொடக்க நிலை பற்றாக்குறை ஆகியனவும் தரப்பட்டுள்ளன. வரவுகளின் ஆதாரங்கள் உரிய அட்டவணைகள், வரைபடங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலங்களுக்கு மாற்றித் தரப்பட்ட ஆதாரங்கள் பெரிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் ஆகியனவும் கீழே விளக்கப்பட்டுள்ளது. 

* நிதி பற்றாக்குறை என்பது வருவாய் வரவுகள், கடன் அல்லாத மூலதன வரவுகள் ஆகியவற்றுக்கும் மொத்த செலவினத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடாகும். அனைத்து ஆதாரங்களிலிருந்தும் அரசுக்கு தேவைப்படும் மொத்த கடன்களையும் இது குறிக்கிறது.

* வருவாய் பற்றாக்குறை என்பது வருவாய் செலவினங்களுக்கும், வருவாய் வரவுகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு. திறம்பட்ட வருவாய் குறைபாடு என்பது வருவாய் குறைபாட்டுக்கும் மூலதன சொத்துக்கள் உருவாக்குவதற்கான மானியத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். தொடக்கநிலை பற்றாக்குறை என்பது நிதி நிதிநிலை அறிக்கை - 2017 பற்றாக்குறையிலிருந்து வட்டி செலவினத்தை கழித்துக் கணக்கிடப்படுகிறது.

* செலவினத்தை பட்ஜெட்டில் கொண்டுவரும்போது, திட்டச் செலவினம், திட்டம் சாரா செலவினம் என்ற வேறுபாடுகளை களைந்திருப்பது, நிதியமைச்சர் 2016­-17 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. இது அவர் பட்ஜெட் நடைமுறையில் கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க சீர்திருத்த முயற்சியாகும். இது 2017-­18 பட்ஜெட் முதல் அமலாக்கப்படும். இந்த வேறுபாடு களையப்பட்டிருப்பதால், செலவழிக்கப்பட்ட தொகைகளுக்கும், அதனால் கிடைக்கப்பெற்ற பலன்களுக்கும் இடையேயான இணைப்பு மேம்பட்டு முழுமையாகவும், முக்கிய கவனத்துடனும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* விவசாயம், சமூகத் துறைகள், அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு முதலீட்டை அதிகரிப்பதில் அரசின் வலுவான உறுதிப்பாட்டை 2017­-18ம் ஆண்டு பட்ஜெட் பிரதிபலிக்கிறது. அதேசமயம், நிதியை ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்தும் பாதை பின்பற்றப்படுவதற்கும் அது உறுதி கூறுகிறது. இது 2016­-17 மறு மதிப்பீட்டுக்கும் கூடுதலாக ரூ. 1,32,328 கோடி அதிகரித்திருப்பதும், அதேசமயம் நிதி பற்றாககுறை இலக்கான 3.2 சதவீத அளவை மனதில் கொண்டதாகவும் அமைந்திருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

* 2016­-17 மறு மதிப்பீட்டில் மொத்த செலவினம் ரூ. 20,14,407 கோடி என்று அளவிடப் பட்டிருந்தது. இது 2016-­17 பட்ஜெட் மதிப்பீடுகளைவிட, ரூ. 36,347 கோடி கூடுதலாகும். அதன்படி, நிதி பற்றாக்குறை 2016­-17க்கான இலக்கான 3.5 சதவீதம் அடையப்பட்டுள்ளது. அதேசமயம் மறு மதிப்பீட்டு நிலை செலவினத்தில் குறைவு ஏதுமின்றி அடையப்பட்டுள்ளது.

* 2015-­16 முதல் வரி வசூலில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட பங்கு பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த போக்கை தொடரும் வகையில், வரிகள், மானியங்கள், கடன்கள், மத்திய அரசு திட்ட வழங்குதல்கள் ஆகியவற்றில் மாநிலத்திற்கு பகிர்ந்து அளிக்கப்படும் பங்கு உள்ளிட்ட மாநிலங்களுக்கான ஆதாரங்கள் 2017­-18 பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.10,85,075 கோடி ஆகும். இது 2016­-17 மறு மதிப்பீட்டைக்காட்டிலும் ரூ. 94,764 கோடி கூடுதலாகும். 2015­-16ம் ஆண்டு உண்மை நிலவரத்தைவிட, இது ரூ.2,50,592 கோடி கூடுதலாகும். இந்த உண்மைகள் அரசின் கூட்டுறவு சமஸ்டித்தன்மை மீதான உறுதிப்பாட்டையும், மாநிலங்கள் வளரும்போது நாடு வளர்கிறது என்ற கொள்கையில் மத்திய அரசின் வலுவான நம்பிக்கையையும் வெளிபடுத்துகின்றன.

2017­-18 பட்ஜெட் மதிப்பீட்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.16847455 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.