தொடக்க நிலை 'ஃபின்டெக் ஸ்டார்ட்- அப்' நிறுவனங்களுக்கு பேபால் வழங்கும் வாய்ப்பு!

1

நான்காவது ஸ்டார்ட் டான்க் இன்குபெஷன் சவாலை (Start Tank Incubation Challenge) பேபால் நிறுவனம் அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு TiE சென்னையுடன் இணைந்து உருவானது இந்த இன்குபேடர். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனை நிறுவனம் தங்களின் வர்த்தகத்தை இங்கு விரிவுப் படுத்திக் கொள்ளவும், பேபாலின் தொழில்நுட்ப ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இந்தியாவில் உள்ள தொடக்க நிலை நிதி தொழிநுட்ப தொழில்முனை நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகியவற்றில் ஆலோசனையும், உள்கட்டமைப்பு ஆதரவு, முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருடன் தொடர்பு வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுக்கும்.

"உலகிலேயே தொழில்முனை அமைப்பு சூழலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. தொடக்க நிலை தொழில்முனை நிறுவனங்களுக்கு அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என்கிறார் பேபால் தொழில்நுட்ப பிரிவின் பொது மேலாளார் அனுபம் பஹுஜா.

நிதி தொழிநுட்பத்தில் கவனம்

பேபால், தொழில் துறையை சார்ந்த தொழில் முனை நிறுவனங்களின் மீதே கவனம் செலுத்துகிறது. "பண பரிவர்த்தனை செய்யும் விதமே இன்றைய காலகட்டத்தில் மாறி வருகிறது. எங்களின் பதினாறு வருட துறை அனுபவம், எங்களின் ஸ்டார்ட் டான்க் இன்குபேட்டரில் உள்ள புதிய நிறுவனங்களுக்கு நிச்சயமாக உதவும்" என்கிறார் பஹுஜா.

விருப்பமுள்ள தொழில் முனை நிறுவனங்கள் https://chennai.starttank.com/apply/ என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் அக்டோபர் 23 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனை நிறுவனங்கள் இரண்டு கட்ட சுற்றில் தங்களின் வர்த்தகத்தை பற்றி முன்னிறுத்தவேண்டும். பேபால் மூத்த அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் கொண்ட நீதிபதி குழு இறுதித் தீர்ப்பை அக்டோபர் 30 ஆம் நாள் நடக்கும் TiECON மாநாட்டில் அறிவிப்பர்.

சென்னையில் உள்ள ஸ்டார்ட் டான்க் இன்குபேடர் இது வரை ஆறு தொழில்முனை நிறுவனங்களுக்கு உதவி புரிந்துள்ளது. முதலீட்டாளர்களின் அணுகல் மட்டுமின்றி உலக அளவில் தலை சிறந்த தொழில் ஆலோசகர்களின் இணைப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இங்கு செயல்பட்ட கோப்ஸ்ட்டர் (Kobster), ஃபான்டைன் (Fantain) மற்றும் டூபார்ட்டைம் (DoPartTime) ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக வெளியேறியுள்ளது. தற்போது செயல்படும் PiQube என்ற நிறுவனம் ஐந்து லட்சம் ௮மெரிக்க டாலர்கள் நிதியாக HR Fund என்ற நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் பெற்றுள்ளது.

இணையதள முகவரி: Paypal StartTank

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Stories by Sandhya Raju