அதிக சம்பள பணி வாய்ப்பைத் துறந்து குடிசைவாழ் குழந்தைகளுக்கு கல்வி வழங்க பள்ளி பெண்!

0

சரிதா ராய் வனத் துறை அதிகாரியின் மகள். இவருக்கு சமூக நலனில் பங்களிக்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் உண்டு. ஒரு சிறப்பான நோக்கத்தை முன்னிறுத்தி தனது வசதியான சூழலில் இருந்து விடுபட்ட இவர், இன்று ஒரு குடிசைப்பகுதியைச் சேர்ந்த 200 குழந்தைகள் படிக்கும் வகுப்பறைகளைக் கொண்ட பள்ளியை உருவாக்கியுள்ளார். 

இவரது அப்பா பணி நிமித்தமாக தொடர்ந்து வெவ்வேறு இடத்திற்கு மாற்றலாகி வருவதால் ஒவ்வொரு மாதமும் இடம்பெயர வேண்டிய சூழலில் வளர்ந்தார். இதனால் வாழ்க்கையின் வெவ்வேறு நிலையைச் சேர்ந்த மக்களுடன் அறிமுகமானார். பழங்குடி சமூகம் மற்றும் குடிசைப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதி கிடைக்கப்படாத நிலை இவரை கவலையடையச் செய்தது. பீஹாரைச் சேர்ந்த இவர் பாட்னா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார். 

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்துடன்கூடிய பணி வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய வாய்ப்பு கிடைத்தால் பலர் பயன்படுத்திக்கொள்ளவே விரும்புவர். ஆனால் சரிதா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு குடிசைப்புற குழந்தைகளுக்காக ஒர் பள்ளியைத் துவங்கத் தீர்மானித்தார் என ’டெய்லிஹண்ட்’ குறிப்பிடுகிறது.

2003-ம் ஆண்டு திருமணம் முடிந்த பிறகு 2004-ம் ஆண்டு குடிசைப்பகுதியை சேர்ந்த 11 குழந்தைகளுடன் பள்ளியைத் துவங்கினார். 2008-ம் ஆண்டு ஒரு சிறிய இடத்தை வாங்கி பள்ளியை விரிவுபடுத்தி முழுவீச்சுடன் வகுப்பறைகளை கட்டினார். தன்னார்வல நிறுவனங்களில் இருந்து கிடைத்த ஆதரவுடன் இன்று இவரது பள்ளி பீஹாரில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த 200 குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறது என்று ’நெக் இன் இண்டியா’ குறிப்பிடுகிறது.

சமீபத்தில் 23 வயதான சத்யேந்திர பால் மேம்பாலக் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்லேப் ஒன்றின் அடியில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பது குறித்து தகவல்கள் வெளியாயின. அதே குடிசைப் பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி மாணவரான சத்யேந்திரா 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வகுப்பெடுத்து வருகிறார். அனைத்து குழந்தைகளும் இந்த வகுப்பில் கலந்துகொண்டு அவர்களால் இயன்ற தொகையை கட்டணமாக செலுத்துகின்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL