இருபது வயது இளைஞர்கள் இருவர் உலகை கவர்ந்தது எப்படி?

0

அப்போது சோபித் பங்காவுக்கு வயது 15. அவன் வழக்கமான பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு பெங்களூரு சென்று உலகப் புகழ்பெற்ற சைக்கிளிஸ்ட் ஆனான். “அரசு அதிகாரிகளுக்கான வீட்டில் இருந்த பணியாளர்கள் குடியிருப்பில் வசித்தேன். அங்கு என்ன நினைத்திருந்தேனோ அதற்கான பயிற்சியைத் தொடங்கினார்கள்.” வெற்றி அவருடைய பாதைக்கு வந்தது.

பதினாறு வயதில், அவர் இளைஞனாக உலகின மிக பெருமைக்குரிய சைக்கிளிங் போட்டியில் ஒருவராக இடம்பெற்றார். அடுத்து, ஸ்பெஷலைஸ்டு ஆதரவளித்த இந்தியாவின் புரொபஷனல் சைக்கிளிங் குழுவில் இளைய உறுப்பினராக சேர்ந்தார். சோபித்துக்கு எல்லாமும் நல்ல விஷயமாக நடந்துகொண்டிருந்தது.

சைக்கிளிங் கனவை அடைவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், நன்றாகவும் படித்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக 2013ல் டெல்லி செல்வதற்கு முன்பு பெங்களூருவில் பகுதிநேர வேலை பார்த்தார். டெல்லி சென்ற பிறகு, அவர் ஜிடி. கோயங்கா வேர்ல்டு இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார்.

“ஒரு நாளைக்கு நான் 10 முதல் 15 மணி நேரம் வேலை பார்ப்பேன். இன்று வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறேன். எதையோ உருவாக்கியிருக்கிறேன். பெருமையாக இருக்கிறது. கல்லூரியில் என்னுடன் இருந்த நண்பர்கள் உந்துதல் இல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற தெளிவுகூட இல்லை.” அப்போதுதான் சமகால மாணவர்களிடையே ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறது என்பதை சோபித் உணர்ந்தார்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் புதுமுகமாணவர்களுக்கான ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சால் கவரப்பட்ட சோபித், மீண்டும் மீண்டும் அதைக் கேட்டார். அவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ அதனை நேசிக்க மாணவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தார். 

“எதை நேசிக்கிறார்கள் என்பதையே அவர்கள் கண்டறியவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர்களை எதையாவது அழுத்தமாக உணரவேண்டும் அல்லது ஒரு பிரச்சினையை தீர்க்கவேண்டும்” என்று தெளிவாகப் பேசுகிறார் சோபித்.

துரதிஷ்டமான சந்திப்பு

ஒரு விருந்தில், வெங்கடேஷ்வரா கல்லூரி மாணவி சுப்ரியாபால், சோபித்தை சந்தித்தார். அறையில் ஓரத்தில் சோபித் நின்றுகொண்டிருந்ததை கவனித்தார். “அவருடன் நான் பேசினேன். நாங்கள் இருவரும் உரையாடினோம். மாணவர்கள் சமூகத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்ற எண்ணம் அவரிடமும் இருந்தது” என்று அனுபவத்தைப் பகிர்கிறார் சுப்ரியா. அதே எண்ணம் உடையவர்தான் அவரும்.

நான் சிஏ படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய பல நண்பர்களும் அதற்கு தகுந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் எனக்கு அது கவலையளித்தது. ஒரே பாதையிலேயே இருப்பதைப்போல உணர்ந்தேன். அவுட்லெட் எதுவும் இல்லை. எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது. ஏதாவது செய்யத் தயாராக இருந்தேன்.

அந்த சந்திப்புக்குப் பிறகு, பல மாதங்கள் பேசிக் கொண்டிருந்தோம். 2014ல் இருவரும் சேர்ந்து 'ஜோஷ் டாக்ஸ்' தொடங்கினோம். இந்தியாவின் மிகவும் எழுச்சியூட்டும் கதைகளுக்கான தளமாக அது இருந்தது. மாணவர்களும் இளம் புரொபஷனல்களும் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் உரையாடக்கூடிய தளமாக அதை அவர்கள் உருவாக்கினார்கள். நம் காலத்தின் சில துணிச்சலான மற்றும் புரட்சியான கதைகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பார்வையாளர்களிடம் ஒரு தீப்பொறியை உருவாக்கமுடியும் என்று நினைத்தார்கள்.

ஜோஷ் டாக்ஸ்

ஏப்ரல் 6, 2014 அன்று ஜோஷ் டாக்ஸ் தன் முதல் பதிப்பை டெல்லியில் உள்ள தவ்லா கான் ஆடிட்டோரியத்தில் உற்சாகமாகத் தொடங்கியது. இன்று சுப்ரியாவும் சோபித்தும் ஐந்து ஜோஷ் டாக்ஸ் கொண்டுவந்துள்ளார்கள். இதுவரையில் 50 கதைகளைக் கூறியிருக்கிறார்கள். சில கதைகள் அவர்களுடைய வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டுள்ளன. அதில் கூஞ்ச் நிறுவனர் அன்சு குப்தா, செலிபிரிட்டி புகைப்படக்கலைஞர் விக்கிராய், அமில வீச்சில் உயிர்பிழைத்த சோனியா, திருநங்கை சமூக ஆர்வலர் ஆக்காய் பத்மசாலி, நடிகர் போமன் இரானி, குரூப்பான் இந்தியாவின் சிஇஓ அன்கூர் வாரிக்கூ மற்றும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த அருணிமா சின்ஹா ஆகியோர் அடங்குவர்.

எங்களுடைய குறிக்கோள் இந்தியாவைச் சேர்ந்த மிகவும் ஊக்கம் அளிக்கும், அதாவது அவர்களுடைய போராட்டம், வலி மற்றும் அனுபவித்த துன்பங்களை பேசுவதாக இருக்கும் கதைகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்பதுதான். அத்துடன், தனிப்பட்ட நபர்களின் வெற்றிப்பயணத்தையும் அதற்குள் கொண்டுவரவேண்டும் என்கிறார்கள் இருவரும்.

சவால்கள் அன்றும் இன்றும்

“நானும் சோபித்தும் ஆரம்பத்தில் வேட்டைக்காரர்களாக இருந்தோம் ” என்று சிரிக்கிறார் சுப்ரியா. அவர்கள் எப்படி சில பேச்சாளர்களை தங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டார்கள் என்றும் அவர் நம்மிடம் கூறினார். இந்த இருவரும் கதைகளுக்காக மக்களைத் தேடினார்கள் கடைசியில் அவர்கள் தங்கள் காதை கொடுத்தார்கள். சிலருக்கு 19 வயது இருக்கும். ஆனால் தயாராக இருக்கமாட்டார்கள் என்கிறார் சுப்ரியா.

சந்தித்த சவால்களைப் பற்றி அவர் பேசுகிறார்,”மிகப்பெரிய சவால் என்பதே எங்களுடைய நம்பிக்கையை பார்வையாளர்களிடம் சேர்ப்பதுதான். வாழ்க்கையில் சவால்களை, தடைகளைத் தாண்டி முன்னேறிய மக்களுடைய கதைகளை அரங்கேற்றக்கூடிய தளமாக அறிய விரும்பினோம்” என்றார்.

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் பப்பா சிஜே, முதல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசியதை உதாரணமாகக் காட்டுகிறார் சுப்ரியா. இங்கு பிரபலங்களும் வந்து தங்களுடைய கதைகளை பகிர்ந்துகொள்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும் என்கிறார் அவர்.

“தங்களுடைய திறமையை அவர்கள் உணரவேண்டும் என்று நாங்கள் தினமும் நெருக்குதல் கொடுத்தோம். அதன் மூலம் அவர்களுடைய சொந்தக் கதையை கட்டமைத்து எதையாவது சாதிப்பார்கள்” என்கிறார் சுப்ரியா. 

“எல்லா நிகழ்வுக்கான விளம்பர நடவடிக்கைகளும், கருத்தாக்கம், எங்களுடைய பார்வை மற்றும் கம்யூனிகேசன் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே இருக்கும். அதன் அடிப்படையில் பார்வையாளர்களை தேர்ந்தெடுப்பது சவாலாக இருந்தது. ஒரு பேச்சாளரின் பெயரும் விடுபட்டுவிடாது” என்றார்.

இரண்டு ஆண்டுகளில் எல்லாம் மாறிவிட்டது. ஜோஷ் டாக்ஸ் இப்போது மிக அழுத்தமான கதைகள், பேரார்வம் பற்றிய கதைகள், அர்ப்பணிப்பு பற்றிய கதைகள் எல்லாவற்றின் மதிப்பையும் நினைவுகூர்கிறது. அவர்கள் எப்போதாவதுதான் பேச்சாளர்கள் பற்றி கேட்கிறார்கள் என்கிறார்.

போராட்டத்திற்குப் பின்னால்…

கடந்த 2014 ம் ஆண்டு ஜோஷ் டாக்ஸ் பற்றி சுப்ரியாவின் ஐடியாவைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். அவருடைய தந்தையார் ஒரு தொழிலதிபர், சிஏ ஆகும் கனவில் இருந்து விலகும் மகளின் மொழியை புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் மகளின் முடிவை ஏற்றுக்கொண்டார். மகளின் விருப்பத்தின் குறுக்கே நிற்கவில்லை. முதல் நிகழ்வையும் பார்த்தார்.

“முதல் வரிசையில் உட்கார்ந்து கடைசிவரை நிகழ்ச்சியை ரசித்தார். நானும் சோபித்தும் என்ன சாதித்திருக்கிறோம் என்பதில் அவருக்குப் பெருமை. இப்போது என்னுடைய பெற்றோர் என் விருப்பங்களை புரிந்துகொண்டுவிட்டனர். ஜோஷ் டாக்ஸ் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது.”

சிறு பணத்திற்காக சோபித் தன்னுடைய சைக்கிளை விற்றார். ஒரு புரொபஷனல் சைக்களிஸ்ட்டான அவருக்கு பைக் என்பது செலவுமிக்கது. ஆனால் விற்பதற்கு அவர் தயங்கவில்லை. “நான் அதை தியாகமாக நினைக்கவில்லை. ஒரு நல்ல விஷயத்தை செய்யப்போகிறோம் என்று நினைத்தேன்” என்று கூறுகிறார் சோபித்.

ஆரம்பத்தில் நிதி ஆதரவு கிடைப்பது ரொம்பவும் சிரமமாக இருந்ததாகவும், இருபது வயதுள்ள இருவரை நம்பி முதலீடு செய்யும் சிலரை சமாதானப்படுத்த வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடுகிறார் சுப்ரியா. சிலருக்கு இது வெளிநாட்டு யோசனையாக தெரிந்தது. “மணிக்கணக்கில் பல அலுவலகங்களின் முன்பு காத்திருந்திருக்கிறேன். மனிதர்கள் இரக்கம் காட்டவில்லை. ஆனால் காலத்தில் நிலைமை மாறியிருக்கிறது” என்கிறார். 

“முதல் பிராண்டு வருவதற்குத்தான் சற்று சிரமமாக இருந்தது. இன்று நிறைய பேச்சாளர்கள் எங்களுக்குப் பலமாக இருக்கிறார். முதலீடு செய்யும் ஸ்பான்சர்கள் எங்களை புரிந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் தொகைக்கு இணையான பார்க்கும் தன்மை, வருகை மற்றும் விற்பனை, மலிவான விலை என சேவைகள் செய்கிறோம்.”

பயணம்

ஒருவேளை அவர்கள் ஒருவகையான டிஇடியை செய்தால்… என இருவரிடமும் கேட்டோம்.

சுப்ரியா கூறுகிறார், “டிஇடி என்பது டெக்னாலஜி, எண்டர்டெயின்மெண்ட் மற்றும் டிசைன் ஆகும். அது உலகை மாற்றும் எண்ணங்களை பேசுகிறது. ஏற்கனவே வாழ்க்கையில் சாதித்த பழைய பார்வையாளர்களுக்கு அது தீனி போடுகிறது. தற்போது கேட்கும் சிந்தனை மர்றும் புதிய எண்ணங்களைப் பேசுவது பற்றி ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் சொந்தக் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் தளமாகத்தான் நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் சுப்ரியா சுட்டிக்காட்டுகிறார்.

குழப்பத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள், இளம் தலைமுறை திறனாளர்கள், 16 வயது முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள், புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க நினைப்பவர்கள்தான் அவர்களுடைய பார்வையாளர்கள்.

இளம் பார்வையாளர்களும் புரிந்துகொண்டு, அதனால் உத்வேகம் பெறும் அளவுக்கு உள்ளடக்கத்தை வடிவமைக்கிறோம். அதனால் அவர்கள் சாதிக்கும் எண்ணத்தைப் பெறவேண்டும். இந்த ஆண்டு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். எங்களுக்கும் டிஇடிக்கும் உள்ள வேறுபாடு தெளிவாகத் தெரியும் என்கிறார் சோபித்.

இரட்டையர்கள் தற்போது பானிபட், மாண்டி, தர்மசாலா, சண்டிகர் போன்ற 2 ஆம் 3 ஆம் கட்ட நகரங்களில் சமூக கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் உள்ளார்கள். மேலும், சிறுகுழுக்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

ஜோஷ் டாக்ஸின் இன்னொரு அங்கம் ஜோஷ் யூத். கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்வுகளை அவர்களுடைய வளாகத்திலேயே நடத்தி, பேச்சைக் கேட்பது மட்டுமல்லாமல் அதனை ஏற்பாடு செய்யவும் சொல்கிறார்கள். மாணவர்களுக்கு மார்க்கெட்டிங், மக்கள்தொடர்பு, நிதி ஆதரவு, குழு கட்டமைப்பு மற்றும் பல விஷயங்களை ஜோஷ் யூத் மூலம் கற்றுத்தருகிறார்கள். மக்களுக்கும் பேச்சாளர்களுக்கும் பயன்படுவது மாதிரி ஒரு ஆப்ஸையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

“மக்கள் தங்கள் பேரார்வத்தால் இந்த உலகை மாற்ற வல்லவர்கள். இந்த உணர்வு அவர்களுக்கு எதைச் செய்யலாம் ஏன் செய்யவேண்டும் என்பதை கற்றுத்தந்துவிடும். பெரும் விருப்பத்தால், உத்வேகத்தால் வெற்றி பெற்ற மக்களின் கதைகளை கூறுவதன் மூலம், தங்கள் மனம் சொல்வதைக் கேட்டு அவர்கள் உலகை மாற்றும் வல்லமை பெறுகிறார்கள்.”

ஆக்கம்: SNIGDHA SINHA தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற சுவாரசியமான கதைகள்:

நான் கதைகளை உருவாக்குகிறேன்; அதை வாழும் தைரியம் என்னிடம் இல்லை: கல்கி கொச்சிலின்

இந்திய மலையேற்றமும், தில்ஷத் மாஸ்டர் குமாரின் கனவுகளும்