மூதியோர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் 'சில்வர் சர்ஃபர்ஸ் கிளப் '

0

“நீங்கள் பெரியவர்களாக வளர்கிறீர்கள் என்பதால் சிரிப்பதை நிறுத்த மாட்டீர்கள். சிரிப்பதை நிறுத்திவிட்டதால், நீங்கள் பெரியவராக வளர்ந்துவிட்டீர்கள் என அர்த்தம்"-மௌரிஸ் செவாலியர்.

உலகில் உள்ள மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பல்வேறு அரசுகளும், சமுதாய அமைப்புகளும் முதியோருக்கான ஆரோக்கியபராமரிப்புக்கான தீர்வுகள் பற்றிய ஆய்வுகள், அலசல்கள் மற்றும் தேடல்களை செய்து வருகிறது. ஆனால் உணர்வுப் பூர்வமாகவும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் இது வரை எதுவும் செய்யப்படவில்லை. இது பற்றி நம் அனைவருக்கும் அக்கறை இருந்தாலும், அதற்காக நம்மில் பெரும்பாலானோர் எதையும் செய்வதில்லை. அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு, பெங்களூரைச் சேர்ந்த தீப்தி வர்மா நரேன் கிடைத்தார். அவர் வித்தியாசமாக யோசித்து, அது தொடர்பாக ஏதாவது செய்வார்.

தி சில்வர் சர்ஃபர்ஸ் கிளப்

தீப்தி மகிழ்ச்சிகரமான ஒரு சிறிய நிறுவனத்தை ஆகஸ்ட் 2014ல் தொடங்கினார், அதன் பெயர் 'தி சில்வர் சர்ஃபர்ஸ் கிளப்' (TSSC). இது பெங்களூரில் உள்ள நாட்-சோ-ஓல்ட் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும்; இந்த வார்த்தை இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. TSSCன் நோக்கம் சில்வர் சமூகத்தை(55+) சிறப்பாக செயல்பட வைப்பது, இதனால் அவர்கள் உணர்வுப் பூர்வமாக திருப்தியாக இருப்பதோடு, உடல் அளவிலும் மென்மையாக உணர்வார்கள்.

TSSCஐ ஒரு இளம் பெண் தொடங்கி நடத்துகிறார் என்பதை கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. தீப்தி இதை இப்படித் தான் பார்க்கிறார்: "நமக்குத் தெரியும் நம் சமூகத்தில் உள்ள பல ‘சில்வர்கள்’ மிகவும் திறமையானவர்கள், நாம் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, பாராட்ட வேண்டும். அவர்களுடைய திறமைகள் மற்றும் பொருட்களை இணையவழி சந்தையில் வெளிக்கொணர அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். இது அவர்களை வேலையில் ஈடுபட வைப்பதற்காக மட்டுமல்ல, இளைஞர்களிடம் அந்த வயதினர் பற்றிய பார்வையை மாற்றவும் வழிவகுக்கும். இளமைக்கும் முதுமைக்கும் இடையில் இருக்கும் கலாச்சார இடைவெளியை குறைக்க வேண்டிய தேவை அதிக அளவில் உள்ளது- அப்போது தான் நம்மால் சவுகரியமான ஒரு ‘ஒத்துணர்வு சமூகத்தை’ அதன் நிலையிலேயே உருவாக்க முடியும்.”

அவர்கள் என்ன செய்கிறார்கள்?

TSSCயின் நோக்கமே முதியோர் நலனுக்காக அவர்களின் திறமைகளை திறந்து வைக்கும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்க வேண்டும் என்பதே. அவர்கள் முதியோருக்கு பொருளாதார, சமூக ரீதியிலான வாய்ப்புகள் மற்றும் பொழுதுபோக்கு, உணர்வுப் பூர்வமான விஷயங்களில் அவர்களோடு தொடர்பில் இருந்து கொண்டே சமூதாயத்தோடு பெரிய அளவில் பங்களிப்பை அளிக்க உதவுகிறது.

TSSC முதியோர் அவர்களின் கனவுகள் உள்பட தங்களின் விருப்பங்கள் அல்லது பொழுதுபோக்கை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறது;. இது சமூக ஊடகங்கள் மூலம் தங்களின் உறுப்பினர்களின் பொருட்கள் அல்லது சேவையை மற்ற உறுப்பினர்களுக்கு அல்லது பொதுமக்களுக்கும் அளிக்க ஊக்கப்படுத்தகிறது. TSSC தங்களின் செயல்பாட்டுக்காக லாபத்தில் ஒரு சிறிய சதவிகீதத்தை மட்டுமே தன்னகத்தே வைத்துள்ளது. நேரத்திற்கு ஏற்றாற் போல அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வர்: இசைக் கச்சேரிகளான ரெட்ரோ மியூசிக் நைட்கள், நடன நிகழ்ச்சிகளான வேலன்டின்’ஸ் பால், ஒன்று கூடல்களான ‘மீட் அண்ட் கிரீட்’, கரோக்கி பிரஞ்சஸ், வீட்டிலேயே தயார் செய்த பொருட்களுக்கான ப்ளீ-சந்தைகள் [சில்வர் சந்தைகள் போல] மேலும் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

அவர்கள் ஓய்வுநேரத்திற்கு ஏற்ப வெளியேசெல்லுதல் மற்றும் விடுமுறை சுற்றுலா போன்ற செயல்பாடுகளையும் ஏற்பாடு செய்கின்றனர். அவர்கள் மசினக்குடிக்கு ஒரு வெற்றிகர பயணம் சென்றுள்ளார்கள், தற்போது ஹம்பிக்கு ஒரு சுற்றுலா திட்டமிட்டுள்ளனர். 2016ல் மேலும் சில சர்வதேச சுற்றுலாவிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

TSSC தன்னுடைய கொள்கைகளை அடைவதற்காக பல்வேறு அமைப்புகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன: ஓபஸ், ஃபவா, ராயல் ஆர்கிட் ஹோட்டல்கள், ஜங்கிள் ரீட்ரீட்ட் மற்றும் டோட்டல் யோகா – அவற்றில் சில. அவர்கள் நிகழ்விடம், இசை, தேவையான முன்ஏற்பாடுகள், நிகழ்ச்சிகள் அல்லது உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடிகளைத் தருகின்றனர். நகரில் உள்ள மற்ற தொழிலதிபர்கள் இதில் அக்கறை செலுத்தி அதற்கான முயற்சியை மேற்கொள்வதை பார்க்கப் பெருமையாக இருக்கிறது.

இது எப்படி செயல்படுகிறது?

இதில் உறுப்பினராவது எளிது: 55 வயதைக் கடந்த ஒருவர், ஆண்டு உறுப்பினர் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்! ஒரே ஆண்டில் 100 உறுப்பினர்களையும், முகநூலில் 3500 பின்தொடர்பவர்களையும் இந்த அமைப்பு கொண்டுள்ளது. அதே போன்று நாடு முழுவதிலும் முன்னணி பதிப்பில் இது பற்றி இடம்பெற்றுள்ளது. TSSC தற்போது தங்களின் கிளையை டெல்லி, மும்பை மற்றும் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. மற்ற நகரங்களின் இணைப்பும் கிடைத்த பின்னர் 'தி சில்வர் சர்ஃபர்ஸ் சமூகம்' மிகப்பெரியதாக வளர்ந்துவிடும். இது தங்களின் உறுப்பினர்களின் பொருட்கள் மற்றும் சேவையை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்.

உத்வேகத்துக்கான காரணம் என்ன?

அனைவருமே இதற்கான விடையை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இது போன்ற சாதாரண விஷயங்கள் எப்படித் தொடங்கப்பட்டது என்பதற்கு எப்போதும் ஒரு பெரிய ‘பின் கதை’ இருக்கும். அதே போன்று தான் தீப்திக்கும், அவருக்கு முதியோர் மீது எப்போதும் அன்பு இருக்கும், அது அவருடைய மாமியாரிடம் இருந்து தொடங்கியது; நீங்கள் அனைவரும் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இது ‘மாமியார்-மருமகள்’ சண்டையல்ல. ஷோபாநரேன், தீப்தியின் மாமியார் தன்னுடைய 60களில், அவர் ஒரு சிறந்த சமையற்கலைஞர். தீப்தி அவருக்கு இணையதளத்தில் மற்றவர்கள் எப்படி வீட்டிலேயே தயாரித்த பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்ற புகைப்படத்தை காண்பித்தார், மெல்ல ஷோபாவும் தன்னுடைய பொருட்களை பாட்டிலில் அடைத்து அவற்றில் சிலவற்றை விற்பனைக்கு வைக்கத் தொடங்கினார். தன்னுடைய சாஸ்கள் மற்றும் டிப்கள் நகரில் நிச்சயம் ஒரு அந்தஸ்தை பெறும் என்று அவருக்கு சிறிது நம்பிக்கை இருந்தது. எதிர்பாரா விதமாக அந்த பிராண்டிற்கு நானி’ஸ் என்று பெயிரிட்டு, இணையவழியில் விற்பனைக்கு வைத்தனர்.

தீப்தி அந்தப் பொருட்களை விற்பனைக்கு வைத்த முதல் முறை அவர் எண்ணி முடிப்பதற்குள் 50 பாட்டில்களும் அதிவேகமாக விற்றுத் தீர்ந்துவிட்டன. அப்போது தான் அவருக்குத் தோன்றியது இதே போன்று திறமையுள்ளவர்கள் பலர் உள்ளனர் ஆனால் அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் அவர்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உதவி மட்டுமே என்று புரிந்து கொண்டார். இந்த சிந்தனையின் ஓட்டம் தன் மூளையில் குடைந்து கொண்டிருக்க, அதற்கான தீர்வாக தீப்தி அறிமுகப்படுத்யிது தான் TSSC. அதன் பிறகு நேரத்தை பொருத்து மற்ற மகிழ்ச்சியை அளிக்கும் விஷயங்கள் தேவைக்கேற்ப இணைக்கப்பட்டன.

நல்ல திறமை

இந்த சில்வர் மக்கள், தீப்திக்கு சோர்வை ஏற்படுத்தவில்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஆழமாக மாற்றத்தை விரும்பினர், தங்களுடைய பொழுதுபோக்கில் ஊன்றிப் போனார்கள், தங்களின் விருப்பத்தை தோண்டிஎடுத்தார்கள், அதன் விளைவாக அவர்களின் உண்மை நிலைக்கு அவர்களை கொண்டு வந்தார்கள்: சாக்லேட், நகை தயாரிப்பவர்கள், பெயின்ட்டர்கள், ஆடை உருவாக்குபவர்கள், சமையற்கலை வல்லுனர்கள், பியானோ ஆசிரியர்கள், புகைப்படக்காரர்கள், நடிகர்கள், பாடகர்கள் மேலும் பல திறமைகளின் தொகுப்பு. TSSCயின் அனைத்து வெற்றி பெற்ற கதைகளையும் எழுத ஒரே கட்டுரை போதாது, ஆனால் பல்வேறு மக்கள் ஆர்வத்தோடும், மிகவும் திறமையோடும் இருப்பதை பார்ப்பதற்கு மனதிற்கு இதமாக இருக்கிறது.

நான் அண்மையில் யுபி நகரின், ஃபாவாவில் நடைபெற்ற அவர்களுடைய ஓரு கரோக்கி பிரஞ்சில் பங்கேற்றேன். அந்த உறுப்பினர்களை நான் வெகு நேரம் கவனித்தேன்: அவர்களின் வாழ்க்கைக்கான மகிழ்ச்சி, நல்ல நட்பை பாராட்டுவது, அவர்களின் அனுபவம் என்னும் சொத்து மற்றும் அவர்களின் கவலையற்ற சிரிப்பு- இவை அனைத்தும் ஒரு அழகான கோடை நாள் போல இருந்தது, அதன் முடிவை பார்க்க நீங்கள் விரும்பமாட்டீர்கள்.

ஆக்கம்: Saumitra K. Chatterjee |தமிழில் : Gajalakshmi Mahalingam