தொழில் முனைவோர் தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய 5 முக்கியக் காரணங்கள்

0

தற்போதுள்ள சூழலில் தொழில்முனைப்பும், புதுமையும் அதிகம் வரவேற்கப்படுகிறது. இளைஞர்கள் வெளியில் வந்து பல சவால்களை சந்தித்து தொழில்முனைவராக முன்னேற விரும்புகிறார்கள். ஒரு சிறந்த தொழில்முனைவராக திறமையும் நல்ல சிந்தனைகளையும் தாண்டி ஒரு சில பண்புகள் தேவை. 

நீங்கள் தொழில்முனைவராய் மெருகேற ஐந்து வழிகள்:

1. அனைத்தும் நீங்கள் திட்டமிட்டப் படி நடக்காது

தொழில்முனைவரின் பயணம் மிக நீண்ட பயணமாகும், பல தடைகளும் சவால்களையும் தாண்டியே முன்னேற முடியும். இந்த பயணத்தில் பலர் உங்கள் திட்டத்திற்கு எல்லா நேரத்திலும் சம்மதம் சொல்ல மாட்டார்கள். இந்நேரத்தில் உங்கள் ஆளுமை பண்புகளே உங்களை வழி நடத்திச்செல்லும். மெருகேற்றப் பட்ட ஆளுமை பண்புகளே நிராகரிப்பு மற்றும் விமர்சனங்களை எளிமையாக கையாள முடியும். உங்கள் கருத்தில் இருந்துக் கொண்டு மற்றவர் யோசனைகளையும் உங்களால் கேட்க முடியும்.

2. நீங்கள் அணுகும் எவரும் உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

ஒரு வளர்ந்து வரும் தொழில்முனைவராக நீங்கள் முதலீட்டாளர்கள், விற்பனையாளர்கள், வணிகர்கள் என பல மக்களை சந்திக்கக் கூடும். ஒரு சிறந்த நெட்வொர்கை ஏற்படுத்த வேண்டும். அவர்களை நீங்கள் தொழில் ரீதியாக அணுகும்போது அவர்களின் ஆர்வம், நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை தூண்ட வேண்டும். இதற்கு உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல ஆளுமை தன்மை மற்றும் அசராத நம்பிக்கை, இந்த திறன்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் உங்களை தீவிரமாக எடுத்து கொள்வார்கள். உங்கள் பேச்சின் மீதும் தொழில் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

3. நிறுவன சந்திப்பில் உங்களுடைய தோற்றம் மற்றர்வர்கள் இடத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வணிகம் மற்றும் கார்பரெட் உலகில் தொழிலும் அதற்கான அர்பணிப்பும் மிக அவசியம். அதே போல் ஒருவரின் தோற்றமும் முக்கியம். நம் தொழில் மற்றும் அர்பணிப்பு இவை இரண்டும் நம் தோற்றத்தில் தான் பிரதிபலிக்கும். சுத்தம் இல்லாத, முறை இல்லாத ஆடைகள் உங்கள் மீது உள்ள நம்பகத்தன்மையை குறைத்து விடும். அது நீங்கள் உங்கள் தொழில் மீது அக்கறை இல்லாதவர் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தும். எனவே நிறுவன சந்திப்புகளுக்கு தொழிலுக்கு ஏற்றவாறு முறையாக உடை அணிந்து சிறப்பாக தோற்றம் அளித்தால் அது உங்கள் தொழிலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

4. மன அழுத்தம் மற்றும் சில சச்சரவுகள் ஏற்படக் கூடும்

வளர்ந்து வரும் எந்த ஒரு தொழில்முனைவோரும் தங்களது தினசரி வாழ்க்கையில் பல மோதல்களையும் மன அழுத்தங்களையும் சந்தித்தாக வேண்டும். இது போன்ற சூழல்களில் மெருகேற்றப் பட்ட நல்ல ஆளுமை திறன் கொண்டோர் அதில் இருக்கும் நன்மையை மட்டுமே ஆராய்வர். இதை விட பல சங்கடங்களை புன்சிரிப்புடன் எளிமையாக கையாள வேண்டும். எந்த ஒரு தடைகளையும் நிதானத்தை இழக்காமல் மிக பொறுமையுடன் கையாள வேண்டும். அழகான புன்னகை சரி செய்யாத பிரச்சனைகள் எதுவும் இங்கில்லை.

5. நீங்கள் தனித்து நின்று ஒரு சிறப்பு அடையாளத்தை உருவாக்க வேண்டும்.

அறிவு சார்ந்த மற்றும் புதமையான சிந்தனைகள் இருப்பது மிகவும் அவசியம் அதே போல் அதை செயலில் காட்டுவது அதை விட அவசியமாகும். நீங்கள் செய்யும் செயல் மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சிறந்த ஆளுமை பண்பு கொண்ட ஒருவரால் தான் சந்திக்கும் அனைவரிடத்திலும் தனக்கேற்ற ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முடியும். உங்கள் யோசனை மிகவும் சிறந்ததாக இருக்கலாம் ஆனால் உங்களின் இல்லக்கிடம் சரியான தாக்கத்தை உங்களால் ஏற்படுத்த முடியாமல் போகும். அதனால், உங்களுக்கென்று ஒரு தனி பண்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், சிறப்பாக உடை அணியுங்கள் மற்றும் உங்கள் ஆளுமை பண்பை மெருகேற்றி கூட்டத்தில் இருந்து தனித்து பிரகாசியுங்கள்.  

ஆங்கில கட்டுரையாளர்: மேஹா பார்கவா