சர்வதேச யோகா தினம்- உலகை திரும்பிப் பார்க்க வைத்த 5 இந்திய யோகா மேதைகள்!

0

கடந்த 2014-ம் ஆண்டு UNGA மாநாட்டில் சிறப்புரையாற்றிய நமது பிரதமர் நரேந்திர மோடி ’சர்வதேச யோகா தினம்’ என்று ஜூன் 21-ம் தேதியை அறிவித்தார். அதன் அடிப்படையில் அந்த தினம் உலகெங்கும் யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலகில் இதுவரை வாழ்ந்த 5 பிரபலமான யோகா மேதைகள் பட்டியலை பார்ப்போம்:

1. திருமலை கிருஷ்ணமாச்சார்யா

பட உதவி: Yoga Prana
பட உதவி: Yoga Prana

1888 முதல் 1989 காலங்களில் வாழ்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யாவின் யோகா முறையில் இல்லாத ஆசனங்களே இல்லை எனலாம். இந்திய எல்லைக்குள் பிரபலமாக இருந்த இவரின் பாரம்பரிய யோகா முறை உலக அளவில் பரவியது. இன்று பின்பற்றப்படும் வெவ்வேறு முறை யோகா வகைகளிலும் இவரின் அடித்தளம் இருக்கும். யோகா உலகம் இவர் எனில் இல்லை என்றே சொல்லலாம். 

2. சுவாமி சிவானந்தா

பட உதவி: Ram Dass
பட உதவி: Ram Dass

1887-1963 காலத்தில் வாழ்ந்த இவர், 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய யோகா குரு என்று அழைக்கப்படுகிறார். சிவனாந்தா யோகா வேந்தாந்தா மையம் அமைவதற்கான முக்கிய ஊக்கமும் காரணமும் இவரே. அன்பு, உதவி, தியானம், பரிசுத்தம், உணர்ந்திடு,சேவை ஆகிய ஆறு முக்கிய குறிக்கோள்களோடு இவரது யோகா முறை இருந்தது. யோகா மேதை கிருஷ்ணமாச்சார்யாவை போலவே இவரும் ரிஷிகேஷை தாண்டி இந்தியாவை விட்டு வெளியே சென்றதில்லை. பல புத்தங்களை தன் கைகளாலேயே எழுதியுள்ள இவரின் படைப்புகள் உலகப்புகழ் வாய்ந்தவை ஆனது. 

3. பிகேஎஸ் ஐயங்கார்

பட உதவி: The Yoga Room
பட உதவி: The Yoga Room

பெல்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்தரராஜ ஐயங்கார், 1918 முதல் 2014 வரை வாழ்ந்தார். உலகின் பிரபலமான யோகா குருவாக அறியப்பட்ட இவர், ஐயங்கார் யோகா பாணியின் நிறுவனர். யோக சூத்ரங்களின் உண்மையான அர்த்தங்களை கண்டறிந்து, அதை உலகம் அறியச் செய்து, பலரையும் அதில் பயிற்சி மேற்கொள்ள வைத்தவர். வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகாவை மாற்றிய பெருமை இவரையே சாரும். மரக்கட்டைகள், கயிறு, பெல்ட் என்று பலவித உபகரணங்களை பயன்படுத்தி உடலுக்கு யோகாவின் சிறப்பை ஆசனாக்கள் மூலம் அளித்தவர். ஒவ்வொரு யோகா அசைவுகளையும் கச்சிதமாக செய்து காட்டுவதில் வல்லவர். 

4. கே.பட்டாபி ஜோய்ஸ்

பட உதவி: Radiant Yoga Marbella
பட உதவி: Radiant Yoga Marbella

1915-2009 காலத்தில் வாழ்ந்த மற்றொரு பிரபல யோகா மாஸ்டர் இவர். அஷ்டாங்க யோகா பாரம்பரியத்தை வழிநடத்தி சென்றவர். தன் வாழ்நாள் முழுதும் யோகாவிற்காக அற்பணித்து, பல மாணவர்களை உருவாக்கியவர். கிருஷ்ணமாச்சார்யாவிடம் இருந்து கற்ற யோகாவை நல்ல முறையில் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றவர். 1948-ல் அஷ்டாங்க யோகா ஆராய்ச்சி மையத்தை நிறுவினார் பட்டாபி ஜோய்ஸ். இது மைசூரில் உள்ளது. 

5. மஹரிஷி மஹேஷ் யோகி

பட உதவி: Transcendental Meditation
பட உதவி: Transcendental Meditation

1918 முதல் 2008 வரை வாழ்ந்த மஹேஷ் யோகி, சிரித்துக் கொண்டே இருப்பார். உலக புகழ் பாடகர்கள் பீட்டில்ஸ், தி பீச் பாய்ஸ் மற்றும் பல பிரபலங்களின் யோகா குருவாக இருந்துள்ளார். இவர் ‘தியானம்’ அதுவும் குறிப்பிட்ட ஒருவகை மெளன தியானம் செய்வதில் வல்லவர். மெளனமாக மந்திரத்தை மனதில் சொல்லிக்கொண்டு செய்யும் இவ்வகை தியானம் பற்றிய ஆராய்ச்சிகள் பல வந்துள்ளது. 1965 தொடங்கிய இந்த முறை, பல பள்ளிகள், பல்கலைகழகங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அமெரிக்க மாநகராட்சிகள், ஐரோப்பா, இந்தியா என்று பல இடங்களில் பின்பற்றப்படுகிறது.