'வானமே எல்லை': நடிகை தாப்ஸி, சினிமா முதல் தொழில்முனைவு வரை!

0

மனதிற்கு நெருக்கமான துறைகளை தேர்வு செய்து, தளராத முயற்சியினால் அதில் வெற்றியும் பெற்றவர் தாப்ஸி பன்னு. பொறியியல் வல்லுனர்,மாடல் மற்றும் பிரபல நடிகையான தாப்ஸி பன்னுவின் புதிய முகம், தொழில்முனைவர்!

தன் தங்கை, ஷாகுன் பன்னு மற்றும் தோழி, ஃபராஹ் பர்வரேஷுடன் இணைந்து ‘வெட்டிங் ஃபேக்டரி’ (wedding factory) என்னும் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். சர்வதேச தரத்தில், திருமண அனுபவத்தை தரவிருக்கும் இவர்களின் நிறுவனம், பட்ஜெட்டையும் கருத்தில் கொண்டு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாப்ஸியை பொறுத்தவரையில் ஒரு சிறந்த திருமணம் என்பது, அங்கு பரிமாறப்படும் உணவின் சுவையை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுவதல்ல, அந்த வைபவத்தில் எவ்வளவு ஒன்றிப் போகிறீர்கள், எவ்வளவு நினைவுகளை கொண்டு செல்லப் போகிறீர்கள் என்பதும் முக்கியம். “ஒவ்வொரு திருமணமும், ஒவ்வொரு தனித்துவமான கதையைக் கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்”. அவருடைய இந்த பயணைத்தையும், தொழில்முனைவு அவதாரத்தையும் பற்றி பேசிய போது:

இளமைப் பருவம்

டெல்லியில் பிறந்து வளர்ந்த தாப்ஸி, தனது முதல் படத்தில் நடித்தது 2010 ல். இளம் வயதில் தாப்ஸி மிகவும் சுறுசுறுப்பான, விளையாட்டுகளில் ஆர்வமுள்ள அதே சமயம் படிப்பிலும் கவனமுள்ள குழந்தையாக இருந்தார். அநேக நேரங்களில் வகுப்பிற்கு வெளியே ஏதேனும் போட்டிக்காக தன்னை தயார் செய்துக்கொண்டே தான் இருந்திருக்கிறார். வகுப்பில் அதிக நாட்கள் பங்கெடுக்காத போதும் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் தாப்ஸிக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்த உறவு சுமூகமாகவே இருந்தது.

“நான் நடனத்திலும் மேடைப்பேச்சிலும் ஆர்வமாக இருந்தேன் ஆனால் பொறியியல் படிக்க தொடங்கிய பிறகு பல மாற்றங்கள். படங்கள் பார்ப்பதற்கும் ஷாப்பிங் போவதற்கும் உதவியாக இருக்குமென மாடலிங் செய்ய தொடங்கினேன்” என்கிறார் தாப்ஸி.

மாடலிங் செய்த அந்த ஆறு மாதங்கள் தான் தன் வாழ்க்கையை தன் விருப்பத்திற்கேற்பவும் பிறரை சார்ந்து இருக்காமலும் அமைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அளித்து,தான் ஒரு சராசரி ஒன்பதிலிருந்து ஐந்து மணி வரை வேலையை செய்ய வேண்டியவரில்லை என்பதையும் உணர்த்தியது.அதனால் இன்ஃபோஸிஸ் வேலையை உதறித்தள்ளிவிட்டு எம்.பி.யே படிப்பதென முடிவு செய்தார்.ஆனால் பிரபஞ்சம் அவருக்கு வேறுமாதிரியான திட்டங்களை வைத்திருந்தது.

தென்னிந்தியாவிலிருந்து சினிமா வாய்ப்புகள் வர தொடங்கிய பின்னர்,கண் முன் முன்னேற்ற பாதை மட்டும் தான்! ஹிந்தி தமிழ் மற்றும்தெலுங்கில் பதினேழு படங்களில் நடித்திருக்கிறார்.

“என் வாழ்க்கையை திட்டமிடுவதை நான் நிறுத்திவிட்டேன்,ஏனெனில் என் திட்டங்கள் எதுவும் நிறைவேறியதில்லை.அதைப் பற்றி கவலையில்லை.விதி எனக்கு அதைவிட சிறப்பான திட்டங்களை வைத்திருந்தது.நான் அதன் போக்கிலே பயணிப்பேன்.”

தி வெட்டிங் ஃபேக்டரி (The wedding factory)

'வெட்டிங் ஃபேக்டரியை’ நிறுவியதும் மிக இயல்பாக நடந்த ஒன்றுதான். தாப்ஸிக்கு மல்ட்டி டாஸ்கிங் மிகவும் பழக்கமானதுதான். அதுமட்டுமின்றி தனது நடிப்பு பணியில் அது குறுக்கிடாததும் தனக்கு தெரிந்தவர்களோடு வேலை செய்வதும் அதை மேலும் எளிமை ஆக்கியது.

திருமணங்கள் என்று வரும்போது அதில் மந்த நிலை ஏற்ப்பட வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை தான் தாப்ஸியை இந்த துறையின் பக்கம் ஈர்த்தது. இந்த துறை படைப்பாற்றலுக்கு மட்டும் அல்லாமல் திட்டமிட்டு அதனை செயல்படுத்தும் திறனிற்கும் இடமளிக்கிறது.

அவர்கள் பின்பற்ற இருக்கும் வியாபார மந்திரம் , “வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டை விட குறைந்த செலவில் திட்டமிடுவோம், எங்கள் தேவைகளுக்காக வாடிக்கையாளர்களுக்கு பாரமாய் இருப்பதில் நம்பிக்கை இல்லை ” என்னும் தாப்ஸி, இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியுமென்றும், நிறுவனத்தை பிரபலப்படுத்த முடியும் என்றும் உணர்கிறார்.

மூவர் கூட்டணி

தன்னுடைய குழுவைப் பற்றி பேசும் போது “ஃபராஹ் இந்த துறையில் பல வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறார். எனக்கு அவரை எட்டு வருடங்களாக தெரியும், எனக்கு தெரிந்த படைப்பாற்றல் மிக்க அற்புதமான நபர்களில் அவரும் ஒருவர். ஷாகுனிற்கும் ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்டில்’ அனுபவம் உள்ளது. எனவே அவர்கள் அதற்கு சிறப்பான தேர்வுதான்” என்கிறார்.

ஃபராஹ் பர்வரேஷ், கதாசிரியர், பல கலாச்சாரங்கள் நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்டவர். ஷாகுன் டில்லியில் ஆங்கில இளங்கலையும், மும்பையில் முதுகலையும் படித்தவர். அவரது விற்பனை, திட்டமிடுதல் மற்றும் அரங்கு ஒப்பனை திறன், குழுவிற்கு பலம் சேர்க்கிறது.

மார்கெட்டிங் மற்றும் முக்கியமான முடிவுகள் எடுப்பது தாப்ஸியின் பொறுப்பு. திட்டங்களை செயல்படுத்துவதில் அவர் பங்கு அதிகம் தேவை இல்லாத்தால், நடிப்பு பணியிலும் கவனம் செலுத்த முடிகிறது.

தங்கள் அனுபவங்கள், திறமைகள் மற்றும் தொடர்புகள் கொண்டு, மூன்று பெண்கள் நிறுவியிருக்கும் ‘வெட்டிங் ஃபேக்டரி’, ஒற்றுமையின் மூலம் ‘ஒரு சிறந்த சேவையை கொடுக்கும் என தாப்ஸி நம்புகிறார்.

வானமே எல்லை

தன் முழு திறனையும் பயன்படுத்த நினைக்கும் பெண்ணிற்கு 'வானமே எல்லை' என்கிறார் தாப்ஸி. எப்போதுமே சவால்களுக்கு துணிந்தவராகவும், தன்னை நிரூபித்துக் கொண்டும், எதிர்ப்பையும் தன்னம்பிக்கையால் மாற்றிக் காட்டும் தாப்ஸி, தனக்கு எது சரி எது தவறு என்பதை அறிந்திருக்கிறார்.

திரைப்படத்துறையில் நான் நுழைந்த போது, அவரின் தந்தை தாப்சியின் இந்த தேர்வு சரியானது அல்ல என்று நினைத்ததை தாப்சி உணர்ந்திருக்கிறார். “என் வாழ்வின் நீண்ட கால பயணம் பற்றி யோசித்ததன் விளைவுதான் தொழில்முனைவு முயற்சி. அது ஒரு சரியான முடிவு என்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார்.

ஒரு மகாராணி போல வாழ வேண்டும். எந்த வேலை செய்தாலுமே, அந்த நாளின் இறுதியில் மகிழ்ச்சியையும், நிம்மதியான உறக்கத்தையும் பெற வேண்டும். ஏனெனில்,ஒரு கட்டத்தில், அதற்காகத் தான் நாம் வேலைக்கு செல்கிறோம்”.

குட்டி தூக்கங்களும், ‘ரீடெயில்’ தெரபியும் தாப்ஸியை உற்சாகப் படுத்துகின்றன. தன்னை புத்துணர்ச்சியாக்குவதோடு, தன் மனதையும் இளமைப் படுத்துவதால் அவர் அடிக்கடி பயணிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு முறை தடுமாறும் போதும், தனது இந்த நீண்ட பயணத்தின் தொடக்கத்தையும், தான் எட்டியிருக்கும் உயரத்தையும் திரும்பி பார்த்துக் கொள்கிறார். "அது, பயணத்தை தொடர்வது கஷ்டம் இல்லை என்னும் நம்பிக்கையை அளிக்கிறது. உங்களிடம் இல்லாததை பற்றி கவலைப் படாதீர்கள், இருப்பதை கொண்டு உங்களையே ஊக்கப் படுத்திக் கொள்ளுங்கள்” என்கிறார்.

அது ஓர் அழகிய அனுபவத்தின் வெளியீடு!