மொபைல் செயலி சமூகத்தை ஊக்குவிக்கும் சென்னையை சேர்ந்த 'ஜி.எம்.ஏ.எஸ்.ஏ' 

0

டாட்காம் இன்ஃபோவே (DCI ) நிறுவனர், நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஒவான சி.ஆர்.வெங்கடேஷ் (நண்பர்களுக்கு சி.ஆர்.வி) கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், தினமும் ஒரு மணி நேரமாவது கேம் விளையாடுவதில் உற்சாகம் கொள்கிறார். டாட்காம் இன்ஃபோவே சில மாதங்களுக்கு முன் "ஆப் வேர்ல்ட் மேக்" எனும் இதழை துவக்கியது. "மொபைல் செயலிகளில் ஆர்வம் கொண்ட எவரும் இதன் சந்தாதாரர்” என்கிறார் சி.ஆர்.வி. அச்சு மற்றும் இணைய வடிவில், சந்தா அடிப்படையில் மட்டும் இது கிடைக்கிறது. மொபைல் ஆப் சமூகத்திற்கு பெரிய அளவிலான மேடையை ஏற்படுத்தி தருவதற்காக ஆப் வேர்ல்ட் மேக் சார்பில் சென்னையில் மே 28,29 தேதிகளில் "குளோபல் மொபைல் ஆப் சம்மிட் அண்ட் அவார்ட்ஸ்" (ஜி.எம்.ஏ.எஸ்.ஏ) நடத்தப்பட்டது.

டாட்காம் இன்ஃபோவே தமிழகத்தின் கோயில் நகரான மதுரையில், 1996 ல் சி.ஆர்.வியால் இணைய நுட்பம் மீதான ஆர்வத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் துவங்கப்பட்டது. செயலி உருவாக்கம், இணையதள உருவாக்கம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திரைப்பட இணையதளமான கலாட்டா.காம் இதன் அங்கமாகும்.

மொபைல் செயலிகளுக்கு ஊக்கம்

இந்தியாவில் நல்ல மொபைல் செயலி ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம் அளிப்பதில், சி.ஆர்.வி மிகுந்த ஆர்வம் கொண்டவர். உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளை அளிக்கும் டிஜிட்டல் செய்தி தளமான மேக்ஸ்டர் சேவையின் இணை நிறுவனர் மற்றும் முதலீட்டாளராகவும் அவர் விளங்குகிறார். புத்தகங்களுக்கான பகுதியையும் துவக்கியுள்ள மேக்ஸ்டரில் கலாரி கேப்பிடல் (Kalaari Capital ) 13 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. சி.ஆர்.வி ஏஞ்சல் முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார். ஏன்ஜெல் நெட்வொர்க்கின் ஏன்ஜெல் முதலீட்டளாரகவும் இவர் உள்ளார். மொபைல் செயலிகளில் முதலீடு செய்வதில் தான் தான் முக்கிய கவனம் செலுத்துவதாக கூறுகிறார் அவர். இதில் ஏற்கனவே ஒரு முதலீடும் செய்துள்ளார்.

ஜி.எம்.ஏ.எஸ்.ஏ ஏன்?

”மொபைல் செயலி உருவாக்குபவர்கள், மொபைல் செயலி ஸ்டார்டப்கள் மற்றும் செயலி உருவாக்கும் மாணவர்கள் எல்லோரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர விரும்பினேன்” என்கிறார் சி.ஆர்.வி. மொபைல் செயலிகள் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் பங்கேற்ற அனுபவம், மொபைல் செயலி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எண்ணமே, சென்னையில் இந்த மாநாட்டை நடத்த அவரை தூண்டியது. கார்ட்னர் தகவலின் படி இந்தியாவில் உள்ள 172 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன் உரிமையாளர்கள் 8 பில்லியன் முறை செயலிகளை டவுண்லோடு செய்துள்ளனர். 2016 ல் இது பத்து பில்லியனாக உயர உள்ளது. இந்தியாவில் 3 லட்சம் செயலி டெவலெப்பர்கள் இருப்பதாக கார்ட்னர் தெரிவிக்கிறது. அதிக அளவில் செயலிகள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் சூழல் உலகம் முழுவதும் உள்ள வல்லுனர்களை இங்கே அழைத்து வந்த உரையாற்றுவதற்கு பொருத்தமாக இருந்தது. இது சென்னையில் செயலி டெவலெப்பர் சமூகத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்தது. "பல மாநாடுகளில் பெரிய இடைவெளியை பார்த்திருக்கிறேன். விவாதங்கள் ஓரிடத்திலும் காட்சி விளக்கம் இன்னொரு இடத்திலும் நடைபெறும்” என்று கூறுபவர் தனது அனுபவத்தின் திரட்சியை சென்னைக்கு கொண்டு வர விரும்பியதாக தெரிவிக்கிறார்.

ஜி.எம்.ஏ.எஸ்.ஏ மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது;

1. செயலி உருவாக்கும் மாணவர்கள் -இவர்கள் தங்கள் தயாரிப்பை ஏஞ்சல் முதலீட்டாளர்கள் முன் காட்சிப்படுத்தலாம்.

2. மொபைல் செயலியில் ஸ்டார்ட் அப் -முதலீட்டாளர் இணைப்பு

3. வல்லுனர்கள் மூலம் தகவல்களை அறிதல்

ஜி.எம்.ஏ.எஸ்.ஏ சார்பில் சிறந்த மொபைல் செயலிக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஜி.எம்.ஏ.எஸ்.ஏ பற்றி அறிய: GMASA