கார் பூலிங்கில் இருந்து விலகி தனியார் போக்குவரத்து சேவையில் கவனம் செலுத்தும் 'கியூபிட்டோ '

0

யுவர்ஸ்டோரி கடந்த முறை கியூபிட்டோவிடம் (Cubito ) பேசிய போது அது, பி2சி பிரிவில் கவனம் செலுத்திய கேப் பூலிங் சேவையாக இருந்தது. நிறுவன அதிகாரிகள் குறைந்த செலவில் போக்குவரத்து வசதியை அளிக்க முயல்வதாக தெரிவித்தனர். முந்தைய மாதிரி படி, கியூபிட்டோ ஒரே பாதையில் செல்லும் பயணிகள் தங்களுக்கு இடையே போக்குவர்த்தை பொதுவாக பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அலுவலக கேப் சேவைப்போலவே இதை மிகவும் துடிப்பான முறையில் வழங்கியது.

2015 ஜனவரியில் இந்த குழு பி2சி மாதிரியில் இருந்து பி2பி முறைக்கு மாறி போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. பெங்களூருவை மையமாக கொண்ட இந்நிறுவனம் இன்று வர்த்தகத்தில் ஒரு பகுதியாக விளங்கும் போக்குவரத்து லாஜிஸ்டிக்சை தானியங்கி மயமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முறை ஊழியர் போக்குவரத்து தானியங்கி சாதனம் (ஈடிஏடி) என்பதை சார்ந்துள்ளது.

இந்த மாற்றத்திற்கான காரணம் பற்றி இணை நிறுவனர் யாஷ் படோடியா (Yash Patodia) பி2சி முறையில் தேவை அதிகமாக இருந்தாலும் கேப் வசதியில் பல சிக்கல்கள் இருந்தாக கூறுகிறார். ஒரு நாள் மாலை இணைநிறுவனர்கள் ஹாஷ் மற்றும் பிரனாய் இந்த பிரச்சனை பற்றி விவாதித்து பி2பி முறைக்கு மாறுவது பற்றி ஆலோசித்தனர்.

இவர்கள் உருவாக்கிய சாதனம், அனைத்து ஊழியர்களின் விவரங்களை பூகோள அடிப்படையில் சேகரித்து அதன் அடிப்படையில் போக்குவரத்தை ஏற்பாடு செய்கிறது. இது காகித பணிகளை குறைப்பதுடன், ரியல் டைம் டிராக்கிங் மற்றும் அருகாமை எச்சரிக்கை ஆகியவற்றை சாத்தியமாக்குவதாக அவர்கள் சொல்கின்றனர். "பண்டக செலவில் பெரும் பகுதி லாஜிஸ்டிக்சில் இருக்கிறது. நிறுவனங்கள் மாதந்தோறும் ஊழியருக்கு ரூ7,000 செலவிடுகிறது. எங்கள் முறை செலவுகளை சீராக்கி, பாதுகாப்பு, வெளிப்படையான தன்மை மற்றும் அனைத்து தரப்பினரிடையே தகவல் தொடர்பை சாத்தியமாக்குவதாக யாஷ் விளக்குகிறார்.

பி2சி முறையில் 5.8 சதவீத வளர்ச்சி இருந்த நிலையில் கியூபிட்டோ பி2பி முறையில் 21 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. வாராந்தர அடிப்படையில் 12.8 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. இந்நிறுவனம் 12 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. பெங்களூரு, தில்லி, குர்கோன், புனே மற்றும் ஜாம்ஷெட்பூரில் 5,000 வாகனங்கள் இயங்கி வருகின்றன. "எங்கள் பைப்லைனில் 40 பைல்ட்கள் உள்ளனர். தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறோம்” என்கிறார் யாஷ்.

இந்த மாற்றத்திற்குப்பிறகு வாகனங்களும் லாபம் அடைந்துள்ளன. இந்த முறை அனைத்து தரப்பினருக்கும் நலம் பயக்கிறது. தங்கள் சேவைக்கான புதிய வாய்ப்பாக முன்னணி வாகன நிறுவனங்களுடன் இந்திய அளவில் ஒப்பந்தம் செய்து வருகிறது. வெளிப்படையான தன்மை கொண்ட பிராண்டாக உருவாகி, பல்வேறு துறைகளில் செயல்பட விரும்புகிறது. செயல்திறன் மற்றும் தானியங்கி தன்மை மூலம் எளிதாக மொபிலிட்டி தீர்வை வழங்கவும் விரும்புகிறது.

தங்களிடம் வெற்றிகரமான சேவை இருப்பதாக யாஷ் சொல்கிறார். வரும் மாதங்களில் தென் கிழக்கு ஆசியாவில் நுழையவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிக் டேட்டா மற்றும் கணிப்பு அலசலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும்.

பி2சி முறையில் இருந்து மாறிய முதல் நிறுவனம் கியூபிட்டோ மட்டும் அல்ல. ரைடுஇன்சின்க் ( RideInSync) இவ்வாறு மாறியுள்ளது. இவை தவிர யுவர்ஸ்டோரி இந்தியாவில் கார்பூலிங் ஏன் பிரபலமாக வாய்ப்பில்லை என்றும் அலசியுள்ளது. பல இந்தியர்கள் சொந்த வாகனம் வைத்திருப்பதில் உணர்வு பூர்வமாக பற்று கொண்டிருப்பது ஒரு காரணமாக அமைகிறது. கேப் டிரைவர் தொடர்பான நம்பக பிரச்சனையும் இருக்கிறது. அலுவலக கேபை பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் அறிமுகமில்லாதவர்களுடன் செல்வதில் தயக்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இணையதள முகவரி: Cubito