எங்கு விளையாட? என்ன விளையாட? விடை இவர்களிடம்!

0

நகுல் கபூர்க்கு ஓடுவது மற்றும் சைக்கிள் ஓட்டுவதில் ஈடுபாடு அதிகம். பல்வேறு விளையாட்டுகளை விளையாடிய அவருக்கு, டென்னிஸின் அடிப்படையை கற்றுக்கொள்ள ஆசை. ஆனால் ஆன்லைனில் தேடி தனக்கு வேண்டிய வசதிகளை, சரியான பயிற்சியாளரை, அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

நகுலின் நண்பர், ராகுல் வாத்வாவிற்கு, கூடைபந்து மைதானத்தில் வார இறுதியை கழிக்க பிடிக்கும். ஆனால் வேலை நிமித்தமாக பல்வேறு நகரங்களுக்கு செல்லுகையில், அங்கு உடற்பயிற்சி நிலையங்களையும், கூடைபந்து மைதானங்களையும் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. எனவே இருவரும் இணைந்து, அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய, "ப்ளேஅன்லிவ்" (PlaynLive) தொடங்கினர்.

ப்ளேஅன்லிவ் என்றால் ?

விளையாட்டு, அது தொடர்பான பயிற்சி மையங்கள், உடற்பயிற்சி மையங்கள், ஃபிட்நெஸ் நிலையங்கள், இவை தொடர்பான தகவல்கள் மற்றும் முன்பதிவு வசதிகளை அளிக்கின்றது ப்ளே அன் லிவ். தற்போது இந்தியாவில் 5 நகரங்களில், 9000 நிலையங்கள் தொடர்பான முகவரி, புகைப்படம், தொலைப்பேசி எண்கள் இவை அனைத்தும் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை இலவசமாக, சில நாட்கள் உபயோகிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

25 விளையாட்டுகள், 50 க்கும் அதிகமான பயிற்சிகளுக்கு, இவர்கள் நிறுவனம் கடவுச்சீட்டு வழங்குகிறது. நீங்கள் யோகா, உடற்பயிற்சி, தற்காப்பு, உணவு நிபுணர்கள், ஊட்டசத்து நிபுணர்கள், என தனிப்பட்ட பயிற்சிகளையும் , பிற விளையாட்டுகளுக்கு மைதானங்களையும், முன்பதிவு செய்யும் வசதியை இவர்கள் அளிக்கின்றனர்.

உடற்பயிற்சி நிலையங்கள், நிபுணர்கள் என 100 க்கும் அதிகமானவர்கள் இவர்கள் நெட்வொர்கில் இணைந்து, கடவுச்சீட்டு வழங்க வேண்டுகோள் வைத்துள்ளனர். இதை பற்றி நகுல் கூறுகையில், "எங்களிடம் மாதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டு, 5 நகரங்களில், எங்கள் பிணைப்பில் உள்ள எந்த உடற்பயிற்சி நிலையத்திற்கும் எங்கள் வாடிக்கையாளர் செல்லலாம். ஆனால் அவர் தனக்கான நேரத்தை முன்பதிவு செய்வது மட்டும் அவசியம்".

துவக்கம்

இந்த நிறுவனத்தை நகுல் மற்றும் ராகுல் இணைந்து துவக்கியுள்ளனர். டெல்லி பல்கலைகழகத்தில், பொருளாதாரம், பின்பு "இன்டெர்நேஷனல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டியுட்" (IMI) யில் பட்ட படிப்பு முடித்து, 2012 ல் ஆக்சிஜென் சர்விசஸ் நிறுவனத்தில் தயாரிப்புத்துறையில் நகுல் பணிபுரிய துவங்கினார்.

ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு, பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் "ஃபிக்சட் அசெட்" டோமெய்னில் ராகுல் பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில், உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மைதானங்களை கண்டறிவது கடினமாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.வ்எனவே விளையாட்டின் மீதான ஆர்வமும், உடற்பயிற்சியின் மீதான காதலும் இந்த தொழிலை அவர்களை துவங்க வைத்துள்ளது.

இது பற்றி நகுல் கூறுகையில்,

"நான் ப்ளேஅன்லிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. எங்கள் அலுவலகத்தில் குளிர் சாதனப்பெட்டியின் இயக்கம் முதல், எங்கள் தயாரிப்பின் இயக்கம், வலைதளம், கைபேசி சரியாக இருப்பது வரை நான் எல்லாவற்றையும் கவனித்து கொள்கின்றேன். ப்ளேஅன்லிவ்வை, உலக நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பது தான் என் கனவு" என்கிறார்.

அவர் இதற்கு முன்பு பேடிஎம் நிறுவனத்தில், தயாரிப்பு மேலாண்மை பிரிவில், "பேடிஎம் வேலேட்" தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.

வரவேற்பு மற்றும் வணிக மாதிரி

8 பேர் கொண்ட குழுவாக உள்ள ப்ளேஅன்லிவ் நிறுவனம், இதுவரை, 10,000 முகவரிகளை சரிபார்த்து, 5000 நுகர்வோரை அவர்களின் வாடிக்கையாளர்களிடம் கடந்த மூன்று மாதங்களில் கொண்டு சென்றுள்ளதாக, கூறுகின்றது.

இதுவரை வலைத்தளம் மூலமாக மட்டும் சேவை வழங்கிய இவர்கள் தற்போது, எளிதான பயன்பாட்டிற்காக, மொபைல் அப்ளிகேஷன் அதாவது செயலி மூலமாகவும் சேவையை அளிக்கின்றனர்.

தற்போது, தங்கள் நிறுவனத்தை வாய் வார்த்தை மூலமாகவும், மற்றவர் பரிந்துரை மூலமாகவும் சந்தைபடுத்தி வருகிறார்கள். தங்கள் சேவைகளை உபயோகிக்க, வாடிகையார்களிடம், பிடுபி B2B மாடல் மூலமாக மாதந்திர சந்தா வசூலிக்கின்றனர்.

மேலும் நகுல் கூறுகையில், "உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஒன்றோடு ஒன்று இணைந்தது. நாங்கள் உடற்பயிற்சியின் மீது மட்டும் கவனம் செலுத்தாது, விளையாட்டு மற்றும் ப்ராண்ட்கள் மீதும் கவனம் கொள்கிறோம். யுவராஜ் சிங்கின் அகாடமி ஆஃப் எக்ஸ்சலன்ஸ் நிறுவனத்தோடு எங்கள் பிணைப்பு, ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது ஆனால் சேவாக் அகாடமியோடு, நல்ல ஒரு புரிதல் உள்ளது. ஜஸ்ட் டையல் போன்ற சேவைகளை காட்டிலும், அவர்களுக்கு அதிக பயன்பாடு எங்கள் மூலமே கிடைக்கின்றது”.

துறை கண்ணோட்டம்

தற்போது இந்தியாவில் உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளது. அரசு தற்போது யோகாவை, அறிவுறுத்தி வருவதால், ஆரோக்கியத்தோடு இருக்கவும், உடல்நலன் காக்கவும், பலர் முனைகின்றனர்.

2013 இல் துவங்கப்பட்ட " கிளாஸ்பாஸ்"(ClassPass) நிறுவனம், நான்கு சுற்று நிதி திரட்டல் மூலம், 54 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. அது மாதந்திர சந்தா செலுத்தி வாடிக்கையாளர்கள், உடற்பயிற்சி நிலையங்களில் தங்கள் உடற்பயிற்சிகளை தாங்களே வடிவமைக்கும் வசதி அளிக்கின்றது. அது போன்று இந்தியாவில் "ஃபிட்நஸ் பாப்பா", "ஜிம்பிக்", மற்றும் "ஃபிட்டர்நெட்டி" ஆகிய நிறுவனங்கள், எக்ஸ்பினிட்டி விபி யிடமிருந்து 1 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளன. இதே துரையின் சமிபத்திய புதுவரவான ஜிம்மர், வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சி நிலையங்களை, தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்யும் வசதி அளிக்கின்றது. அதே போல், வேண்டிய பட்டியல்களை தரும் ஜஸ்ட்டையல் நிறுவனத்தையும், தனது போட்டி நிறுவனமாக, நகுல் கருதுகிறார்.  

இதே துறையில் கவனிக்க தக்க மற்ற நிறுவனங்கள்:

ஹெல்திபைமீ (HealthifyMe): இது உட்கொள்ளும் கலோரி மற்றும் உடல் ஆரோகியத்தை கண்காணிக்கும் செயலி. மைக்ரோமாக்ஸ் நிறுவனத்திடமிருந்து முதலீடு பெற்றுள்ளது.

டுரூவெயிட்(Truweight): சூப்பர்qபூட்ஸ் மூலம் எடையை குறைக்க உதவும் இந்த செயலி "சீரீஸ் A ஃபண்டிங்கை, கலாரி கேபிடல் நிறுவனத்திடம் மே 2015தஇல் பெற்றது. 

ஃபர்ஸ்ட்ரன்(FirstRun): கவ்ரவ் ஜஸ்வால், மற்றும் குல் பனாக் "மொபிஃபிட்" ஆரம்பித்து, மக்கள் ஓட்ட பயிற்சி எடுத்து கொள்வதற்கு வழிகாட்ட, "firstrun" நிறுவினர்.

கோகீ(Goqii): விஷால் கொண்டல் நிறுவிய இந்நிறுவனம், உடற்பயிற்சி ஆடைகளோடு இணைந்த, தனிப்பட்ட பயிற்சிகளை அளிக்கின்றது. சமிபத்தில் அவர்கள் "வாட்ஸாப்" whatsapp நிறுவனத்தின் நீரஜ் அரோரா விடமும், அமேசான் Amazon நிறுவனத்தின் மார்கோ அர்ஜெண்டியிடமிருந்து நிதி திரட்டியுள்ளனர்.

எதிர்கொண்ட சவால்களும், எதிர்கால திட்டமும்

தங்கள் பட்டியலில் உள்ள முகவரிகளை சரிபார்ப்பது கடினமான காரியமாக முதலில் இந்த குழுவிற்கு இருந்துள்ளது. ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு 3 அல்லது 4 முறை தேவையான தகவல் சேகரிக்க சென்றுள்ளனர்.

"நாங்கள் வாயிற் காவலர்கள், வரவேற்பறை தாண்டி உரிமையாளர்களை சந்திக்கவேண்டும். சில சமையம் புகைப்படம் கிடைக்காது. அல்லது, புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்காது. ஆனால் ப்ளேஅன்லிவ் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றவுடன், அவர்களாக முன்வந்து எங்களுக்கு உதவினர். அதே போல் எங்கள் தளத்தில் உள்ள தகவல்களை சில நாட்களுக்கு ஒரு முறை மேம்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தோம்” என நகுல் கூறினார்.

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பிப்ரவரியில் சிறுது நிதி திரட்டிய இவர்கள், விரைவில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலம் அதிக நிதி பெற முடிவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், விரைவில் ஐஓஎஸ் iOS க்கு என ஒரு தனி செயலியையும், மக்கள் விளையாடுவதற்கு கூட்டாளிகளை தேடும் வசதியையும் இவர்கள் அளிக்க உள்ளனர்.

இணையதள முகவரி: http://www.playnlive.com/