பாலின இடைவெளி சமநிலையில், WEF தரவரிசையில் இந்தியா 21 புள்ளிகள் சரிந்துள்ளது!

0

உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட உலகளாவிய பாலியல் இடைவெளி அறிக்கையின் படி இந்தியா 87 ஆம் இடத்தில் இருந்து 108 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியா, தனது பாலின இடைவெளியை 67 சதவீதமாக கொண்டுள்ளது, இது 47 மற்றும் 100-வது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளை விட குறைவு தான்.

அந்த அறிக்கையில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மிக குறைவாக உள்ளது என்றும் ஆண்களை விட பெண்களுக்கு மிக குறைந்த கூலியே கொடுக்கப்படுகிறது என்றும் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், பெரும்பாலான பெண்களுக்கு கூலி கொடுக்காமல் இருப்பது இந்த வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணம்.

“WEF அறிக்கையின் தொடக்க ஆண்டு 2006-ல் அளவெடுத்த பொழுது இந்திய 10 புள்ளிகள் சரிந்து இருந்தது. இன்று ஒட்டுமொத்த உலகளாவிய பாலின இடைவெளி நான்கு அடிப்படையில்  விரிவடைந்துள்ளது அதாவது சுகாதாரம், கல்வி, பணியிடங்கள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம்.”

வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்த ஆண்டு அறிக்கை, உலகளாவிய பாலின இடைவெளியில் மொத்தம் 68 சதவீதம் என காட்டியது. கடந்த ஆண்டு 68.3 சதவீதமாக இருந்தது. இதே சதவீதத்தில் போனால் உலகளாவிய பாலின இடைவெளியை அடைய இன்னும் 100 ஆண்டு காலம் ஆகும்

“பாலின சமநிலையை மேம்படுத்துவதற்கான மெதுவான மற்றும் நிலையான முன்னேற்றம் 2017 உடன் நின்றுவிட்டது. 2006 ஆம் ஆண்டில் WEF இன் உலகளாவிய பாலியல் இடைவெளி அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதன்முறையாக உலகளாவிய பாலின இடைவெளி விரிவடைந்துள்ளது,” என்கிறது அறிக்கை.

பொருளாதார பங்களிப்பு - வாய்ப்பு மற்றும் ஆரோக்கியம்-உயிர்வாழ்வில்; இந்தியா 139 மற்றும் 141 இடத்தில் கவலைக்கிடமாக இருக்கிறது. அரசியல் அதிகாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை எதிர்பார்ப்பு, இவை இரண்டும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாய் இருக்கிறது. இந்தியா சுகாதார மற்றும் உயிர்வாழ்வில் உலகில் நான்காவது தரவரிசையில் வகிக்கிறது, மிக மெதுவாக முன்னேறும் நாடாக உள்ளது.

மேலும் இந்த ஆய்வின் படி வேலை செய்யும் 66 சதவீத பெண்களுக்கு ஊதியம் செலுத்தப்படுவதில்லை; ஆண்களின் எண்ணிக்கை 12 சதவீதம் ஆகும். சீனாவில் இந்த தொகுப்பின் புள்ளிவிவரம், பெண்கள 44 சதவீதம் ஆண்கள் 19 சதவீதம் ஆக உள்ளது. 

உலகளாவிய பாலின இடைவெளி வரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் UKவில் 56.7 சதவீத பெண்கள் மற்றும் 32 சதவீத ஆண்கள் ஊதியம் இல்லாமல் பணி புரிகின்றனர். இதனை தொடர்ந்து பெரிய நாடான அமெரிக்காவிலும் 50 சதவீத பெண்கள் மற்றும் 31.5 சதவீத ஆண்கள் ஊதியம் இல்லாமல் இருக்கின்றனர்.

“1966 முதல் பெண் பிரதமர் பதவியேற்று 50 ஆண்டு காலம் ஆனது, அரசியல் அதிகாரமளித்தல் துணை குறியீட்டில் உலகளாவிய சிறந்த 20 தரவரிசைகளை தக்கவைத்துக்கொள்ள, இந்தியாவின் புதிய தலைமுறை பெண்கள் அரசியலில் முன்னேற வேண்டும்.”

இருப்பினும், இந்தியாவிற்கு ஒரு நற்செய்தி உள்ளது: தொடர்ந்து இரு வருடமாக இந்தியா முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வி சேர்க்கை பாலின இடைவெளிகளை முழுமையாக அடைவதில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூன்றாம் நிலை கல்வி சேர்க்கை பாலின இடைவெளியையும் விரைவில் அடைந்துவிடும். ஆனால்,

“தேசிய மற்றும் வர்த்தக அடிப்படையிலான போட்டி ஒரு நாட்டின் அல்லது ஒரு நிறுவனத்தின் புதுமையான திறனைக் கொண்டு முடிவு செய்யப்படும். பெண்களின் திறமையை முக்கியமான சக்தியாக ஒருகிணைப்பவரே வெற்றிப் பெறுவர்,”

என்று கிளாஸ் ஸ்வாப், நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர், WEF கூறினார் உலகளாவிய சராசரி அளவு குறைந்துள்ளது என்றாலும், இது 144 நாடுகளின் மொத்த எண்ணிக்கையில் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்காது. இந்த வெளிப்புற பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடுகளில் ஐஸ்லாந்தானது, பாலின இடைவெளிகளில் கிட்டத்தட்ட 88 சதவீதத்தை அடைந்து முதலிடம் வகிக்கிறது. இதனை அடுத்து நார்வே, பின்லாந்து, ருவாண்டா, சுவீடன், நிகரகுவா, ஸ்லோவேனியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தொடர்ந்து வரிசையில் நிற்கின்றன. ஐஸ்லாந்தின் சுவாரசியமான கருத்து, ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து உலகின் பாலினம்-சமமான நாடாக இருக்கிறது.