மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் ஷில்பி கபூர் 

0

சமூகவியல் பட்டதாரியான ஷில்பி கபூர் தன்னுடைய வாழ்க்கையை பட்டு அலங்காரப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் தொடங்கினார். ஆனால் அவர் அதில் தோல்வியைக் கண்டார். பின்னர் அவர் தொழில்நுட்பத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ரிமோட் ஹேக்கராகப் பணியைத் தொடங்கினார். அவருடைய வாழ்க்கையை மாற்றிய அந்த நாளை ஷில்பி நினைவுகூர்கிறார்:

நான் எனது வழிக்காட்டியை தேடுவதற்கு முன்பு ஹேக்கரை கண்டேன் (அவர் அமெரிக்காவில் இருந்து பணியாற்றினார்) ஆனால் அவரை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். வழக்கத்திற்கு மாறான தாமதத்திற்கு காரணம் கேட்டபோதுதான், அவர் கழுத்துக்கு கீழ் செயல்படமுடியாது, சிப் அன்ட் பஃப் கருவியின் மூலம் இயங்குபவர் என அறிந்து கொண்டேன். அதுவரை மாற்றுத்திறனாளிகள் பற்றி நான் வைத்திருந்த கருத்தை அந்த சம்பவம் மாற்றியமைத்தது.

அவருடைய வழிகாட்டியின் ஆலோசனைப்படி, மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன் அளிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க ஷில்பிக்கு உத்வேகமாக அமைந்தது. முதலில் அவர் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கான பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார். அதன் மூலம் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதுவொரு லாப நோக்கமற்றதாக இருந்தது. அதைத்தொடர்ந்து அவர் தன் பழைய அனுபவத்தைக் கொண்டு இறுதியில் 'பேரியர் ப்ரேக்' நிறுவனம் பிறந்தது.

இதுவொரு லாபம் நோக்கமுள்ள தொழில் முயற்சி, இந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்பம் தொடர்பான வாய்ப்புகளையும், பயன்பாட்டையும் எளிமைப்படுத்தி புதிய கதவுகளை வெற்றிகரமாக திறந்துவிட்டது. மேலும் நிறுவனங்களுக்கும் அது உதவியாக இருந்தது.

ஷில்பி விவரிக்கிறார்,

ஒரு நாட்டில் யாரும் அவ்வளவு எளிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாது. அது தொழில்நுட்பத்தை நம்பிய சுகாதாரம் ஆகட்டும், உள்ளூர் போக்குவரத்து ஆகட்டும் மாறாது என்பது இயற்கையானது. பேரியர்ப்ரேக் மூன்று முக்கிய கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், மாற்றுத்திறனாளிகளை வேலையில் அமர்த்துவது (75 சதவீதம் பேரியர்ப்ரேக் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள்), இதுவொரு வெளிப்படையான நிறுவனம். இது எதையும் விலக்காமல், லாபத்தை இலக்காகக் கொண்ட நம்பிக்கையான தொழில் மாதிரி.

கடந்த 2004 முதல், இந்த நிறுவனம் வேறுபட்ட 200 வகையான நிறுவனங்களுடன் பணியாற்றியிருக்கிறது. அதாவது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், பதிப்புத்துறை அத்துடன் 12 நாடுகளின் அரசுகளுடன் பணிபுரிந்துள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சன்சர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளை வேலையில் அமர்த்தியிருக்கின்றன. பேரியர் ப்ரேக்குக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் நிலை

கடந்த 2011ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, குறைந்தபட்சம் 2.21 சதவீதம் அல்லது 26.8 மில்லியன் மக்கள் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். அவர்களில், 5.4 மில்லியன் பேர் உடல்ரீதியாக மாற்றுத்திறனாளிகள், 5.07 மில்லியன் பேர் காது கேளாதவர்கள், 5.05 மில்லியன் பேர் பார்வைக்குறைபாடு உடையவர்கள். அதற்கும் கீழே பேசமுடியாதவர்கள் 2 மில்லியன் பேர் உள்ளார்கள். மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த 2 மில்லியன் பேர் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த எண்ணிக்கையில், 54.51 சதவீதம் பேர் படித்தவர்கள் மற்றும் 63.66 சதவீதம் பேர் வேலையில்லாதவர்கள்.

எனினும், திட்டக் குழு மேற்கண்ட புள்ளிவிவரங்களை தள்ளுபடி செய்துவிட்டது. உண்மையான புள்ளிவிவரங்கள் 5 முதல் 6 சதவீதத்திற்கு இடையில் மட்டுமே.

பேரியர் ப்ரேக் வழங்கும் சலுகைகள்

பேரியர் ப்ரேக் முழுமையான மாதிரியாக எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிறுவனமாக இருக்கிறது.

துணை தொழில்நுட்ப தயாரிப்புகள் - மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பொழதுபோக்கவும் வேடிக்கைகளில் ஈடுபடவும், வேறுபட்ட மோட்டார் திறன்கள் உடைய மவுஸ் மாற்றுகளை வழங்குகிறது. எல்லாவகையான மாற்றுத்திறனாளிகளுக்கான 50 தயாரிப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது. கேட்புக் கருவிகள், பிரெய்லி காட்சிகள், நூலகங்கள், வடிவக் கருவிகள் மற்றும் டெஸ்க் டாப் சிறுகருவிகள்… என இவையெல்லாம் சிறு உதாரணங்கள்.

வாய்ப்புக்கான சோதனை – நிகழ்த்தும் இணையதளம் மற்றும் நகரும் வாய்ப்புக்கான சோதனை மூலம், பேரியர்ப்ரேக் ஒவ்வொரு நிறுவனத்தின் முக்கியமான ஆவணங்கள் மற்றும் தயாரிப்புகளை சர்வதேச தரத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவாக வழங்குகிறது.

வாய்ப்புக்கான ஆவணங்கள் மற்றும் ஊடகம் -  இந்தப் பிரிவு ஏகப்பட்ட தகவல்களை பயனர்களுக்கு வழங்குகிறது. பிடிஎப் வடிவில் சிறு தலைப்புகள், ஒளி விளக்கங்கள் மற்றும் செய்திகளுக்கான சைகை மொழி விவரங்கள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு காணொலிக்காட்சிகள் அடங்கியது.

வெறும் தீர்வுகளை மட்டும் சொல்வதல்ல வாய்ப்புகள் என்பதை ஷில்பி உணர்ந்தார். இது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான ஒவ்வொரு வெளியையும் அளித்தது. முக்கியமான பிரிவு என்பது பயிற்சிப் பட்டறைகள். பேரியர்ப்ரேக், திருத்தியமைக்கப்பட்ட அமர்வுகளை அமைப்புகள் மற்றும் லாபநோக்கமற்ற அமைப்புகளுக்கு நடத்துகிறது. விழிப்புணர்வையும் உள்ளடக்கிய சமூகத்தில் சாத்தியப்படுத்துகிறது.

எல்லாவற்றையும் தவிர, பேரியர்ப்ரேக் நிறைய சாதித்துள்ளது. இன்னும் நிறைய தூரம் செல்லவேண்டியிருக்கிறது என்றும் கூறுகிறார் ஷில்பி.

இந்தத் தொழில் ஏதுவான சூழலை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் அதுவொரு ஆணையாக இருக்கும்போதுதான், தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. ஆனால் அதுமட்டும் போதுமானதல்ல. ஒவ்வொரு மனிதரும் எல்லாவற்றையும் எளிதாக பெறுவது மாதிரியான உலகை உருவாக்கவேண்டும்.

காதுகேளாதவர்களுக்கான தேசிய சங்கத்தின் செயலர் ஏ.எஸ்.நாராயணன் கூறுகிறார்,

காதுகேளாதவர்களுக்கான தகவல் தொடர்பை ஏற்படுத்துவது அவர்கள் கேட்பதற்கு ஒப்பானது. அடிப்படையில், காதுகேளாதோர்க்கு தகவல்தொடர்பு ஒரு தடையாக இருக்கும், ஆனால் தலைப்புகள் மற்றும் குறிப்புகள் அந்த ஊனத்தை நீக்க உதவுகிறது. 

ஒவ்வொரு நிறுவனம் மற்றும் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான சூழலை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். ஆனால் ஷில்பி, தன்னுடைய புதுமைகளை நோக்கிச் செல்லும் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

அவர் கூறுகிறார்,

ஒரு நேரத்தில், மலிவான செல்போன் விலை சந்தையில் 20,000 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று, ஒருவர் அதையே 1500 ரூபாய்க்கு வாங்கமுடிகிறது. 2 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ள நாட்டில், அதுபோன்ற ஒரு சந்தையை உருவாக்கமுடியவில்லை. அதற்குச் சான்றாக இன்றும் நாங்கள் பெரும்பாலான தயாரிப்புகளை இறக்குமதி செய்கிறோம்.

உடல் ஊனத்தை நேர்மறையாக பார்க்கும் தேசத்தை உருவாக்கவேண்டும் மற்றும் சந்தையை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏதுவாக மாற்றவேண்டும் என்பதை இலக்காக வைத்து, ஷில்பி 'டெக்ஷேரை' ஆரம்பித்திருக்கிறார். இந்த கருத்தரங்கம் தேசிய அளவில் டிஜிட்டல் நுட்பம் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. நிதி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் சில துறைகள் தொடர்பான புதுமைகளை அறியும் வாய்ப்பை தொழில்முனைவோர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் அளிக்கிறது.

“நான், இதை ஆரம்பிக்கும்போது உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. என்னுடைய சொந்த தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டேன். டெக்ஷேர் தடைகளை லேசாக்குவதற்கு உதவும் ஒரு தளம். அது மாற்றுத்திறனாளிகளை வாடிக்கையாளர்களாக பார்ப்பதை பயிற்றுவிக்கிறது. நாம் உலகம் முழுவதும் 100 மில்லியன் மக்களுக்கான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அதை அவ்வளவு எளிதாக புறந்தள்ளமுடியாது” என்று சொல்கிறார் ஷில்பி.

ஆக்கம்: SHWETA VITTA |   தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்: 

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறப்புத் தேவைகளை நிறைவேற்றும் 'தமஹர்'

'மாற்றுத்திறன் வாழ்க்கை முறை, பகுதி நேர பணி அல்ல': பூனம் நடராஜன்