3000 பரிவர்த்தனைகள் இலக்கை நோக்கி பயணிக்கும் 'என்கேஷிட்' நிறுவனம்

0

தள்ளுபடி விற்பனை, பேரங்கள் என்றாலே இந்தியர்களுக்கு கொள்ளை பிரியம் தான். ஆன்லைன் வர்த்தகம் வந்த பிறகு இணைய தளத்திலும் தள்ளுபடி விற்பனையை விரும்புகிறோம். கூப்பன் மற்றும் பணம் திரும்பப் பெற வழி வகை செய்யும் சந்தையில் க்ரூபோன், கூப்பன்துனியா, மைதாலா, கூப்பன்நேஷன் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும், என்கேஷிட் போன்ற நிறுவனங்களுக்கும் வாய்புகள் நிறைந்ததாகவே உள்ளன.

விஜய் சூராம் மற்றும் அம்சி மகன்தி ஆகிய இருவரும் இணைந்து நிறுவிய "என்கேஷிட்" (Encashit), கூப்பன் மற்றும் பணம் திரும்பப்பெற வழி வகுக்கும் ஆன்லைன் நிறுவனமாகும். இந்த ஒருமாததிற்குள்ளாகவே எண்ணூறு முதல் ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் இருபதியிரம் பதிவிறக்கங்களும் பெற்றிருக்கிறது.

விஜய், 2011 ஆம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை முடித்தார். அப்பொழுது தான் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஈலேர்னிங் இணையதளங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. அப்பொழுது தொடங்கிய சில கூப்பன் நிறுவனங்களுக்கு, சிசிடி, கோஐபிபோ, எஃப்என்பி போன்ற பெரிய நிறுவனங்களுடன் கூட்டாண்மை புரிந்து கொள்ள உதவினார் விஜய். ஒரு கட்டத்தில் கூப்பன் என்பது அன்றாட செயலாக மாறி விடவே, வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிதாக ஏதேனும் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதுவே 2012 ஆம் ஆண்டு கேஷ்பாக்365,இன் (cashback365.in) என்ற நிறுவனத்தை தோற்றுவிக்க காரணமாக அமைந்தது.

தனது நிறுவனத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்த விஜய், 2011 ஆம் ஆண்டு நடுவில் மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடிய சேவையையும் இணைத்தார். இந்த முயற்சி பெரும் நஷ்டத்தை கொடுத்தது. வேறு வழியில்லாமல், வேலைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை உருவாக்கியது. விஜய் காக்னிசன்ட் நிறுவனத்தில் இரண்டரை வருடம் பணி புரிந்தார். இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகம் மொபைல் வர்த்தகத்தை நோக்கி செல்ல தொடங்கியது. இந்த நிகழ்வு விஜய்க்கு மறுபடியும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

"மறுபடியும் நாங்கள் இணைந்து மொபைல் மூலமாக கூப்பன் மற்றும் பணம் திருப் பெற கூடிய வர்த்தகத்தை மேற்கொண்டோம். இம்முறை என்கேஷிட் என்ற பெயரில் இந்த வருடம் ஜூன் மாதம் இந்நிறுவனத்தை தொடங்கினோம்" என்கிறார் விஜய்.

வளர்ச்சி ..

மொபைல் ஆப் அறிமுகம் செய்த பின் தற்பொழுது சுமார் ஐநூறு பரிவர்த்தனைகளை ஒரு நாளில் காண்பதாக கூறும் விஜய், ஒரு வாரத்தில் முன்னூறு சதவிகித அளவுக்கு மொபைல் பயன்பாட்டாளர்கள் இணைவதாகவும் அவர்களது வலைதளத்தின் பயன்பாட்டாளர்கள், அறுவது சதவிகிதம் வரை குறைந்துள்ளதாகவும் கூறுகிறார்.

தற்பொழுது ஃப்ளிப்கார்ட் மற்றும் ஷாப்க்லூஸ் இணையதளத்திலிருந்து பணம் திரும்பப் பெரும் app to app redirection சேவையை என்கேஷிட் வழங்குகிறது. ஜபோங், மின்த்ரா, ச்னாப்டீல், பெப்பர்ஃப்ரை போன்ற நிறுவன ஆப் களையும் இணைக்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

தான் சந்தித்த சவால்களை பற்றி கூறும் விஜய் "பணம் திரும்பப் பெரும் புதிய திட்டத்தை பற்றிய புரிதலை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமப்பட்டோம். ஏனெனில் இந்த முறை புதிதாகவும் அதே சமயம் அறுபது முதல் தொண்ணூறு நாட்கள் வரை பணம் திரும்பப் பெற காத்திருக்க வேண்டியதாகவும் இருந்தது. மக்கள் என்றுமே உடனடி தள்ளுபடியயே எதிர்பார்கின்றனர்"

புதிய பெயர்க் காரணம்

இதற்க்கு பெரிதாக காரணம் எதுவும் இல்லை. Cashback365.in என்ற முந்தைய பெயரை வேறொரு நாட்டில் பயன்பாட்டில் இருந்தது. ஆகவே புதிய பெயர் தேர்ந்தெடுத்தோம்.

எதிர்கால திட்டங்கள்

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தின பரிவர்த்தனை மற்றும் மார்ச் 2016 க்குள் கூகிள் ஸ்டோரில் ஐந்து லட்சம் பதிவிறக்கங்கள் - இதுவே எங்கள் தற்போதைய இலக்கு. அடுத்த காலாண்டிர்க்குள் விண்டோஸ் மற்றும் iOs இவை இரண்டிற்கும் ஏற்ற செயலியை பயன்பாட்டில் கொண்டு வருவோம். எங்களின் அடுத்த பதிப்பில் பணம் திரும்பப் பெற கூடிய அம்சத்துடன் விலை ஒப்பீடு செய்யும் அம்சமும் கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறோம்.

யுவர் ஸ்டோரியின் கருத்து

இந்தியாவில் கூப்பன் மற்றும் பணம் திரும்பப் பெற கூடிய வர்த்தகத்திற்கு அவ்வளவாக எதிர்காலமில்லை என்ற கருத்துகள் நிலவி வந்தாலும், கூப்பன்துனியா, மைதாலா, காஷ்கரோ, பென்னிபுல் மற்றும் என்கேஷிட் போன்ற நிறுவனங்கள் இதை முறியடிக்கும் நிலையில் தான் செயல்படுகின்றன.

தொழில் மதிப்பீட்டின் புள்ளி விவரத்தின் படி, இணைப்பு மற்றும் செயல்திறன் சந்தைப்படுத்தல் ஆகியவை அடுத்த ஐந்தாண்டுகளில் ஐநூறு சதவிகித வளர்ச்சி காணும் என்று நம்பப்படுகிறது. தற்பொழுது வெவ்வேறு வடிவத்தில் இருக்கும் கூப்பன், பணம் திரும்பப் பெரும் வசதி மற்றும் விலை ஒப்பீடு ஆகியவைகளில் பிற்காலத்தில் இந்த தொழில் முனை நிறுவனங்கள் எவ்வாறு தங்களின் யுக்தியை மேற்கொள்கின்றன என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இணையதள முகவரி: Encashit