2017-ல் மக்கள் சேவை மூலம் நம்மை ஈர்த்த ஐஏஎஸ் அதிகாரிகள்...

3

மக்களுக்கு முன் மாதிரியாக அல்லது அவர்களை ஈர்க்கும் அரசு அதிகாரிகளை விரல் விட்டு எண்ண முடியும். அது போல் 2017-ல் நம் கண்ணில் பட்டு நம்மை ஈர்த்த மாவட்ட ஆட்சியர் அல்லது ஐஏஎஸ் அதிகாரிகள் இவர்கள்.

சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலக்டர் ரோஹிணி பாஜிபக்ரே

சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியுள்ள முதல் பெண்மணி இவர். கலெக்டர் பொறுப்பு ஏற்ற தருணத்தில் இருந்து ஒரு வினாடியையும் விட்டுவைக்காமல் தன் பணிகளில் தீவிரமாக செயல்படுகிறார் ரோஹிணி. வாரம் ஒருமுறை குறைக்கேட்கும் சந்திப்பு, மாற்றுத் திறனாளிகளுக்காக தனியாக நேரம் ஒதுக்கி குறைகளை கேட்கிறார். பொறுப்பு ஏற்ற சில தருணத்திலே தண்ணீர் டேன்க் மற்றும் இதர வசதிகளையும் பார்வையிட்டார். தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள மாவட்ட அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்..

கலக்டர் ரோஹிணி பாஜிபக்ரே
கலக்டர் ரோஹிணி பாஜிபக்ரே

இவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள, இங்கு படியுங்கள்...

'சகலகலா' ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் திவ்யா ஐயர்

ஐ.எ.எஸ். அதிகாரி டாக்டர் திவ்யா ஐயர்
ஐ.எ.எஸ். அதிகாரி டாக்டர் திவ்யா ஐயர்

கேரளாவில் கோட்டயம் மாவட்ட துணை ஆட்சியராக பணியில் இருக்கிறார் திவ்யா ஐயர். திவ்யா ஒரு சகலகலா வல்லவர். இசை, நடனம், நாடகம், மோனோ ஆக்ட், என்று அத்தனை கலைகளிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். மருத்துவ படிப்பை முடித்துவிட்டு அதன் பின் தன் சிறு வயது கனவான ஐ ஏ எஸ் பொறுப்பை நிறைவேற்றியவர் இவர். மாவட்ட ஆட்சியர் தேர்வுக்கு தயாராகும்போதே ஐ.ஏ.எஸ். படிப்புக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வது எப்படி என்று 'பாத் பைண்டர்' (PATHFINDER - For Civil Service Main Examination) என்கிற புத்தகத்தை எழுதி எழுத்தாளர் அவதாரத்தையும் அதன் மூலம் பெற்றிருக்கிறார்.

இவரின் மற்ற அவதாரங்களையும் இங்கு படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்...

பெண்களுக்கு குரல் கொடுக்கும் அமுதா ஐ ஏ எஸ்

அமுதா ஐ எ எஸ்
அமுதா ஐ எ எஸ்

பார்க்க சாதாரண பெண்மணியைப்போல் காட்சியளிக்கும் அமுதா ஐ.ஏ.எஸ் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். தனிப்பட்ட திறனால் சட்ட மீறல்கள்களைத் தடுத்து, சமூக நலனில் அக்கரையுள்ள அதிகாரியாகவும் வலம்வரும் அவரின் செயல்பாடுகள் இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு முன்மாதிரி. சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் துணிச்சலாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது சுயஉதவிக் குழுக்களை அமைத்து பெண்களுக்கு பயிற்சி அளித்து வங்கிக் கடன் பெற்று அவர்களை சுய வருமானம் ஈட்டுபவர்களாக உருவாக்கினார். இதனால் அவர்கள் பெண் குழந்தைகளின் கல்வி நிலை முன்னேற்றம் அடைந்தது.

பல பொறுப்புகளில் பெண் முன்னேற்றத்திற்காக உழைத்த அமுதா அவர்களை பற்றி மேலும் படிக்க...

மிகுந்த ஏழ்மையிலும் சாதித்த ஐ. ஏ .எஸ் அதிகாரி ரமேஷ் கோலாப்.

ஐ. ஏ .எஸ் அதிகாரி ரமேஷ் கோலாப்.
ஐ. ஏ .எஸ் அதிகாரி ரமேஷ் கோலாப்.

ஏழ்மை ஒருபக்கம் தந்தையின் குடிப்பழக்கம் மற்றொரு பக்கம், அதோடு பசி. இவைதான் சிறு வயதிலேயே ஒரு கனவை உருவாக்கி, தற்பொழுது மாவட்ட ஆட்சியராக முன்னேறத் தூண்டியது. ரமேஷின் குழந்தை பருவம் தன் தாயுடன் வளையல் விற்று தான் கழிந்தது. சிலநாட்களில் சில பருக்கை சோறு கூட பார்க்க முடியாத இவர் தனது அயராத உழைப்பினால் இன்று அனைவருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறார். முதலில் அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று தாசில்தார் ஆனார் ஆனால் அதோடு நின்று விடாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகிவிட வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் உருவாக்கி சாதித்துள்ளார்.

இவருடைய வாழ்க்கையின் போராட்டம் நிறைந்த வெற்றிக் கதையை இங்கு படியுங்கள்...

ஊழலை எதிர்த்து போராடும்  துக்காராம் ஐ ஏ எஸ்

துக்காராம் ஐ எ எஸ்
துக்காராம் ஐ எ எஸ்

துக்காராம் ஐ ஏ எஸ்,  மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டதற்காக கொலை மிரட்டல், அரசியல் சார்ந்த முதலாளிகளுக்கு இணங்கி நடக்காததால் பதிவியிறக்கம், பணியிட மாற்றம் என 12 வருட பணி அனுபவத்தில் பலவற்றை எதிர்கொண்டு கடந்து வந்துள்ளார். பின்விளைவுகளை நினைத்து கலங்காமல் எங்கும் துணிச்சலாக முடிவெடுக்கும் தைரியசாலி. அதிகாரியாக பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலே பல துணிச்சலான காரியங்களில் ஈடுப்பட்டவர் இவர். அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளைத் தாண்டி கட்டப்பட்ட பகுதிகளை ஒரு மாத அவகாசமளித்த பிறகு இடித்தார். அங்கீகரிக்கப்படாத மதுக்கடையை இடிக்கும்பணி நடக்கும்போது ஒருவர் தீக்குளிக்கப் போவதாக மிரட்டினார். ஒரு அதிகாரியை அந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்யச் செய்து தற்கொலை முயற்சிக்காக கைது செய்ய வைத்தார் துக்காராம்.

12 வருடங்களில் 9 பணியிட மாற்றம்; நேர்மையாக பணியாற்றியதால்அவர் சந்தித்த சவால்களை இங்கு படியுங்கள்....

அன்புச்சுவர் அமைத்த நெல்லை கலக்டர் சந்தீப் நந்தூரி

கலக்டர் சந்தீப் நந்தூரி
கலக்டர் சந்தீப் நந்தூரி

இந்த வருடம் நெல்லை மாவட்ட ஆட்சியராக பதவியேற்று இரண்டே மாதங்களில் தாமிரபரணி ஆற்றை தூய்மை படுத்தும் திட்டம், விளம்பரம் இல்லாச் சுவர் போன்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார் இவர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அன்புச்சுவர் ஒன்றை நிறுவி பலரின் பார்வையை அவர் பக்கம் திரும்ப செய்தவர்.

அன்புச்சுவரை பற்றி தெரிந்துக்கொள்ள...

இவர்களே நம்மை கவர்ந்த 2017-ன் சிறந்த ஐ ஏ எஸ் அதிகாரிகள்!