இவ்வளவு நீண்ட இடைவேளையை எதிர்பார்க்கவில்லை: அர்விந்த் சுவாமி! 

0

தொன்னூறுகளின் தொடக்கத்தில் , “ரோஜா” , “பாம்பே” போன்ற வெற்றிப் படங்களால், ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்பட்ட பேராய் இருந்தவர், அர்விந்த் சுவாமி. ஆனால், இருபது வருடம் கழித்து, மிக நீண்ட இடைவேளைக்குப் பின் வந்துள்ள என்னை, மக்கள் அடையாளம் காண முடியாவிட்டால் பரவாயில்லை, தான் எப்பொழுதுமே நட்சத்திர அந்தஸ்திற்காய் ஏங்கியதில்லை என்கிறார் அவர்.

1991 ல் ‘தளபதி’ படத்தில், இயக்குனர் மணிரத்னத்தால் நடிகராய் அறிமுகப்படுத்தப்பட்டவர் அர்விந்த் சுவாமி. “ரோஜா” (1992) மற்றும் “பாம்பே” (1995) ஆகிய படங்களின் வெற்றியின் வழியே புகழுக்கு உயர்ந்தவர், இந்த 45 வயது நடிகர். 2000 ல் “ராஜா கோ ராணி சே ப்யார் ஹோ கயா” என்ற ஹிந்திப் படத்தில் கடைசியாய் தோன்றிய அர்விந்த், விடுப்பு எடுத்துக் கொண்டு, பத்து வருடங்களாய் தன் வணிகத்தை கவனித்து வந்தார்.

2013 ல் மணிரத்தினத்தின் 'கடல்' படம் வழியே மீண்டும் முழு நேர நடிப்பிற்கு வந்த அர்விந்த், அடுத்ததாய், 'டியர் டாட்' (Dear Dad) என்னும் பாலிவுட் படத்திலும் காணப்படுவார். 

“நட்சத்திர அந்தஸ்து என்னை எப்போதும் கவர்ந்ததில்லை. மக்களுக்கு என் வேலை பிடிக்க வேண்டும் என நினைப்பேன், ஆனால் மனதளவில் மிகத் தெளிவாய் என்னை ஒரு நட்சத்திரமாய் நினைக்கக் கூடாதென முடிவெடுத்திருக்கிறேன். மக்களுக்கு என் பெயர் தெரிய வேண்டுமென நான் எதிர்பார்ப்பதில்லை. மக்களுக்கு என்னைத் தெரியாவிட்டாலும் நான் அவமானப்படுவதில்லை,” 

என அர்விந்த பி.டி.ஐயிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“நான் நானாக இருக்க வேண்டுகிறேன். எனக்கு படங்களில் நடிக்க மட்டுமே ஆசை, மற்ற சிறப்பு கவனிப்பு எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. படப்பிடிப்புத் தளத்தில் என் பைகளை எல்லாம் நானே எடுத்துச் செல்வேன், என்னை சுற்றி உதவியாளர்கள் யாரும் இல்லை. இது தான் எனக்கு வசதியாக இருக்கிறது”, என்றார். 

தமிழ் திரையுலகில் வியப்பளிக்கும் வெற்றிப் பெற்ற பிறகு, அர்விந்த், 1998 ல் அமிதாப் பச்சனால் தயாரிக்கப்பட்ட “சாத் ரங் கே சப்னே” படத்தில் நடித்தார், அது தவிர ‘மௌனம்’ மற்றும் ‘தேவராகம்’ போன்ற தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்தார்.

பரவலான கவனத்தை பெற்றிருந்தாலுமே, அர்விந்த் நட்சத்திர அந்தஸ்தை சமாளிக்க முடியாமல், அதிலிருந்து ஓடி விட நினைத்தார். “ நான் அறிமுகமானபோது எனக்கு மிக இளம் வயது, ஏறத்தாழ ஒரு குழந்தை இத்தனை வெற்றியையும், பாரட்டையும் பெற்று அதை சமாளிக்க முடியாதது போலத் தான் இருந்தது. அதிலிருந்து தப்பியோடத் தான் நினைத்தேன். தற்போது அதற்கு நான் தயாராய் இருக்கிறேன், அதாவது எதை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன் என எனக்குத் தெரியும். அதை மக்களின் அன்பாய் பார்த்திருக்கலாம், ஆனால், அப்போது அதை வெறும் அழுத்தமாகத் தான் பார்த்தேன்.”

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் அர்விந்த் சுவாமி, இந்த இடைவேளை இவ்வளவு நீண்டதாய் இருக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் தனது வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

“உண்மையில், இது இவ்வளவு பெரிய ஓய்வாக இருக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. சில வருடங்களுக்கு, எதாவது செய்யலாம் என நினைத்தேன், பின் என் குழந்தைகளை தனியாக வளர்க்கலாம் என முடிவெடுத்தேன், அதற்குப் பிறகு, ஒரு விபத்தை சந்தித்தேன். உடல் ரீதியாக, ஒரு கடினமான காலத்தை கடந்தேன்; குணமாக சில காலம் ஆனது”, என மேலும் அப்பேட்டியில் கூறியுள்ளார். 

(ptinews.com செய்தி தளத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள கட்டுரை இது.)

தமிழில் : ஸ்னேகா  

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்