இயற்கை வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் 'நேச்சுரலி யுவர்ஸ்'

0

இந்தியாவில் ஆர்கானிக் தயாரிப்புகளின் சந்தை தனிப்பட்ட மற்றும் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், கூட்டமாக பல தொழில்முன்முயற்சி நிறுவனங்கள் இந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தன. தங்களுடைய தொழிலின் தொடக்கமாகக் கொண்டன. இந்த சந்தையின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 30 சதவிகிதத்துடன் விரைவாக வளர்ந்துகொண்டிந்தது. 2015ம் ஆண்டில் அதனுடைய டாலர் மதிப்பு ஒரு பில்லியனாக இருந்தது.

24 மந்த்ரா, பலாடா, கான்சியஸ் புட் அண்ட் ஆர்கானிக் தத்வா (24 Mantra, Phalada, Conscious Food and Organic Tattva) ஆகிய புதிய தொழில் முயற்சிகள் ஆர்கானிக் தயாரிப்புத் தொழிலுக்கு புதிய அடையாளத்தைத் தந்தன.

"நேச்சுரலி யுவர்ஸ்" (Naturally Yours) இன் சிஇஓ வினோத்குமார் பேசும்போது, ”வாடிக்கையாளர்களின் பிரச்சனை குறித்த கருத்துகளை புரிந்துகொண்டு நிறைவேற்றினோம். இந்தியாவில் முழுவதும் இருக்கும் விவசாயிகள் மற்றும் பிராசஸிங் நிறுவனங்களின் உதவியுடன் 100 தயாரிப்புகளை நாங்கள் வைத்திருக்கிறோம்“ என்று குறிப்பிடுகிறார்.

வினோத்குமார் மற்றும் பிரியா பிரகாஷ் ஆகிய இருவரால் பிப்ரவரி 2010ம் ஆண்டில் நேச்சுரலி யுவர்ஸ் தொடங்கப்பட்டது. ஒரே இடத்தில் அனைத்துவகையான ஆர்கானிக் மற்றும் இயற்கை தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வசதியை ஏற்படுத்தினார்கள். தொடக்கத்தில் மெல்ல வளர்ந்து, இ-காமர்ஸ் நிறுவனமாக அரிசி, பருப்பு, எண்ணெய், சிறுதானியங்கள், கீர் மிக்ஸ் மற்றும் பல பொருட்கள் உள்பட 100 வகையான தயாரிப்புகளுடன் உயர்ந்து வந்தது.

பிரிட்டனில் எம்.பிஏ முடித்துவிட்டு இந்தியா திரும்பிய வினோத், ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான சில்லறை விற்பனை நிலையங்கள் அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தார். இதுதான் நேச்சுரலி யுவர்ஸ் பிராண்ட்டை தொடங்குவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தது. ஒரே இடத்தில் 360 டிகிரி அளவுக்கான அனைத்து ஆர்கானிக் பொருள்களும் கிடைப்பதாக இருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வுடன் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், ஒவ்வொரு அடியாக வளர நினைத்த நேச்சுரலி யுவர்ஸ் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் மும்பையில் 150 சதுர அடி இடத்தில் உருவானது.

படிப்படியாக, நேச்சுரலி யுவர்ஸ் மும்பையில் மூன்று ஸ்டோர்களாக விரிவடைந்தது. ஆனால் சூழல் அவருக்கு ஏற்ப அமையவில்லை. ஸ்டோர்களில் விற்பனை தேக்க நிலையில் இருந்தது. சரக்கு விலையும் நடத்துவதற்கான செலவும் கம்பெனிக்கு பாரமாக அமைந்தது. அதனால், ஏப்ரல் 2014ல் நேச்சுரலி யுவர்ஸ் இணையதளம் (www.naturallyyours.in) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் நேச்சுரலி யுவர்ஸ் சென்றடைந்தது.

வேலைவாய்ப்பை உருவாக்குதல்

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் நேச்சுரலி யுவர்ஸ் கைகோர்த்து அவர்களுக்கு சந்தையுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது. அவர்களிடம் இருந்து விவசாய விளைபொருட்களை வாங்கி, அதனை நேச்சுரலி யுவர்ஸ் பிராண்ட் பெயரில் விற்பனை செய்தது.

வினோத் ஒரு உதாரணம் காட்டுகிறார். அனந்தபூரில் விவசாயிகள் குழுவினர் கம்பு தானியத்தை உற்பத்தி செய்தனர். அவர்களிடம் அணுகிய நேச்சுரலி யுவர்ஸ் நியாயமான விலை கொடுத்து தானியத்தை வாங்கியது. படிப்படியாக அவர்களுடைய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றன. அது விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைக்க வழிவகுத்தது.

தரமான பொருள்களை தயாரிப்பின் நம்பகத்தன்மையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நிறைய சவால்களை வினோத்தும் பிரியாவும் சந்தித்தார்கள். ஒரு புது நிறுவனத்திற்கு, வாடிக்கையாளர்களின் நடத்தைகளை புரிந்துகொண்டும், தரவுகளை இணைத்தும் மாறிவரும் வாழ்க்கையை இணைப்பது கட்டாயமாகிறது. வர்த்தக உத்திகளை ஒருங்கிணைத்து பிராண்ட்டை மேம்படுத்துவதும் முக்கியமான பணி.

கையடக்க அனுபவம்

தன்னுடைய 26 வயதில் வெவ்வேறான வணிக நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது பற்றிய அனுபவங்களைப் பெற்றதாகக் கூறுகிறார். நேச்சுரலி யுவர்ஸ் தொடங்குவதற்கு முன்பு, குளோபல் குரூப்பில் வினோத் பணியாற்றினார். அங்கு முக்கியமான பொறுப்புகளில் இருந்து மூன்று துறைகளில் 300 பணியாளர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார். இணை நிறுவனரான பிரியா, ஆந்தம் பயோ சயின்சஸ் (Anthem Biosciences) நிறுவனத்தில் புதிய மருந்துகளை கண்டறியும் குழுவில் பணியாற்றியிருக்கிறார்.

அமைப்புரீதியான வடிவம்

இணை நிறுவனர்களையும் சேர்த்து நேச்சுரலி யுவர்ஸ் சிறு குழுவில் எட்டு பேர் இருக்கிறார்கள். புதிய தயாரிப்புகள், விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் நட்புறவு ஆகியவற்றை பிரியா கவனித்துக்கொள்கிறார். வணிக யுத்திகள், விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் நிதித்துறையை பொறுப்புகளை வினோத் கவனிக்கிறார்.

“நேச்சுரலி யுவர்ஸ் குழுவின் முக்கியமான பகுதி என்பது உரிமையாளர்களின் தரம். கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் எந்த தேய்வையும் பார்க்காமல் இருப்பதற்கு அதுவே காரணம்” என்கிறார் வினோத்.

விற்பனை பரிமாற்றம்

கடந்த நிதியாண்டில் தயாரிப்புகளின் விற்பனை 1.4 கோடி ரூபாயாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் வினோத். நடப்பாண்டில் 5 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இலக்கு வைத்திருக்கிறார்கள். அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் மற்ற இ- காமர்ஸ் இணையதளங்களின் வழியாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ஆர்டர்களை பெறுகிறார்கள். அடுத்த நான்கைந்து மாதங்களில் மாதத்தில் 10 ஆயிரம் ஆர்டர்களைப் பெறும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

ஆன்லைன் வர்த்தகத்தில் வெற்றிகண்ட அனுபவத்திற்குப் பிறகு நேச்சுரலி யுவர்ஸ், தற்போது இந்தியா முழுவதும் நான்கில் இருந்து ஆறு முக்கிய நகரங்களில் அதிநவீன நேரடியான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

“இரண்டு மூன்று ஆண்டுகளில் வருமானத்தை 100 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தும் திட்டத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். மேலும், தயாரிப்புகளின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்துவோம்” என்று எதிர்காலத்தை நம்பிக்கையுடன் விவரிக்கிறார் வினோத்”.