பயோனிக் காளானில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் விஞ்ஞானிகள்!

0

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் உட்பட ஒரு விஞ்ஞானி அடங்கிய குழு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஸ்டீவன்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வெள்ளை பட்டன் காளானில் இருந்து வெற்றிகரமாக சிறிதளவு மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளனர்.

செல்லின் உயிரியல் இயந்திரத்தை புரிந்துகொள்ளும் முயற்சியாக இந்த ஆராய்ச்சியின் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் இந்த ஆய்வின் பலனைக் கொண்டு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி பாதுகாப்பு, ஹெல்த்கேர், சுற்றுச்சூழல் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படலாம்.

சைனோபாக்டீரியா என்கிற பாக்டீரியா வகை அதன் ஆற்றலை சூரியனில் இருந்து பெறுகிறது. இந்த சைனோபாக்டீரியா தொகுப்புகளை 3டி ப்ரிண்டிங் வாயிலாக பட்டன் காளான் மீது பயன்படுத்தி இக்குழுவினர் வெற்றியடைந்துள்ளனர். இதன்மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்க கிராபெனின் நானோரிப்பன்கள் வைக்கப்படுவதாக ’ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.

துணை பேராசிரியர் மனு மன்னூர் கூறுகையில்,

“மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சைனோபாக்டீரியாவை மின்சாரத்தை சேகரிக்கும் திறன் கொண்ட நானோஸ்கேல் பொருட்களுடன் ஒன்றிணைத்ததால் இரண்டு பொருட்களின் தனித்துவமான பண்புகளை சிறப்பாக அணுகி அவற்றை அதிகப்படுத்தி முற்றிலும் புதிய பயோனிக் அமைப்பை உருவாக்க முடிந்தது,” என்றார்.

இந்த ஆய்வின் பலனாக சுமார் 65 நானோஆம்ப்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

நீண்ட நேரம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய காளான் சரியான சூழலில் வைக்கப்படுவது அவசியம். காளானில் இயற்கையாகவே அதிக மைக்ரோபயோடா உள்ளது. இதுவே ஊட்டச்சத்து, ஈரப்பதம், pH, வெப்பநிலை என சரியான சூற்றுச்சூழலை வழங்கும். இதை மன்னூர் மற்றும் ஜோஷி உணர்ந்தனர். இவர் டாக்டர் ஆராய்ச்சிக்கு பிறகு ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஃபெலோ ஆவார்.

இது குறித்து ஜோஷி விவரிக்கையில்,

”ஆற்றலை உற்பத்தி செய்யும் சைனோபாக்டீரியாவை பேணுவதற்கு உகந்த சூழலை காளான் வழங்குகிறது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இரண்டு வெவ்வேறு நுண்ணுயிரியல் இனங்களுக்கிடையே கலப்பின அமைப்பால் செயற்கை இணைப்பு அல்லது பொறியியல் இணைவாழ்வினை ஏற்படுத்தமுடியும் என்பதை முதல் முறையாக காட்டியுள்ளோம்,” என குறிப்பிட்டதாக நியூஸ்வீக் தெரிவிக்கிறது.

கிராபெனின் நானோரிப்பன்கள் கொண்ட எலக்ட்ரானிக் இன்க்கினை பிரிண்ட் செய்ய ஒரு ரோபோடிக் கை கொண்ட 3டி ப்ரிண்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நெட்வொர்க் மின்சாரத்தை சேகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. இந்தப் பணியானது சைனோபாக்டீரியல் செல்களை உற்பத்தி செய்யும் பயோஎலக்ட்ரானிக்ஸை அணுகுவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

நியூஸ்வீக் உடனான நேர்காணலில் ஜோஷி கூறுகையில்,

காளான் மீது ஒளி பாய்ச்சப்படும்போது சைனோபாக்டீரியல் ஒளிசேர்க்கை இயக்கமுறை செயல்படுத்தப்படுகிறது. இது பயோ எலக்ட்ரான்ஸை உருவாக்குகிறது. மின்வேதியியல் அமைப்பில் சாருகை மின்னழுத்தப் பயன்பாட்டின்கீழ் இந்த எலக்ட்ரான்ஸ் இயக்கப்படும்.

ஒரு சிறிய மின் சாதனத்திற்குக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகக்குறைவான மின்சாரமே உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார் ஜோஷி.

”ஹைபிரிட் கட்டமைப்பின் பயன்பாட்டின் வாயிலாக ஒளிமின்னோட்டம் தயாரிக்கமுடியும் என்பது இதன் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். காளான்களை வரிசைப்படுத்துவதன் மூலம் குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படும் எல்ஈடி விளக்கை எரியவைக்கமுடியும். வருங்காலத்தில் இதைக் கொண்டு அதிக மின்சாரம் தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளோம்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL