7 லட்சத்தில் துவங்கி 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி தொட்ட நிறுவனத்தின் வெற்றிக்கதை!  

2

உல்ஹான்ஸ்நகரைச் சேர்ந்த ’செல்பெல்’ 3 ஆண்டுகளில் இ-காமர்ஸ் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

ஸ்டார்ட் அப்: CellBell | நிறுவனர்கள்: சிரக் டெம்லா, பவன் டெம்லா

தீர்வு காணும் பிரச்சனை: மொபைல் துணைப்பொருட்களுக்கான குறைந்த விலை மாற்று மற்றும் உத்திரவாதமான வாடிக்கையாளர் சேவை. 

இந்தியா வளரும் பொருளாதாரமாக இருந்தாலும் எந்த பிரிவிலும் பல்வேறு விலை பிரிவுகளுக்கான சந்தையை பெற்றுள்ளது. டாக்ஸி உண்டென்றால் ஆட்டோ சேவையும் உண்டு. பெரிய மால் கடைகள் இருந்தாலும், டி.நகர் வீதிக்கடைகளும் இருக்கும்.

அதே போலவே ஒவ்வொரு பிலிப்ஸ் அல்லது ஜேபிஎல் இயர்போனுக்கு ஈடாக குறைந்த விலை வாய்ப்புகளும் உள்ளன. அதற்கேற்ப மொபைல் துணைப்பொருட்கள் சந்தையில் மும்பை அருகே உள்ள சிறிய நகரைச்சேர்ந்த பெல்பெல் பிராண்ட் முத்திரை பதித்து வருகிறது.

உல்ஹான்ஸ்நகரைச் சேர்ந்த சிர்க் டெம்லா (23) மற்றும் பவன் டெம்லா (28), ஆகியோரது தந்தை போக்குவரத்து சேவை நடத்தி வந்ததால் சிறு வயது முதல் உள்ளூர் வர்த்தைகத்தை அறிந்திருந்தனர். பின்னர் பவன் ஐடி பொறியாளரானார். சிரக் நிதி பட்டதாரியானார். ஆனால் தொழில்முனைவில் தான் இருவருக்கும் ஆர்வம் இருந்தது. 2014 ல் இந்த சகோதரர்கள் பகுதிநேரத்தில் பைகள் விற்கத்துவங்கினர்.

அது மட்டும் அல்லாமல், சிரக் இன்ஸ்டாகிராமில் செல்பெல் எனும் கைப்பிடி மூலம் பொழுதுபோக்காக, உள்ளூர் மக்களுக்கு மொபைல் துணைப்பொருட்களை வழங்கத் துவங்கினார். இரண்டு மாதங்களுக்குள் 40,000 ரூபாய் மொத்த லாபம் கிடைக்கவே அவருக்கு மிகுந்த நம்பிக்கை உண்டானது.

2015 துவக்கத்தில் 7 லட்சம் ஆர்ம்ப முதலீட்டில் செல்போன் ஸ்டிக், ஹெட்போன், ஸ்கிரின் கண்ணாடி மற்றும் கவர்கள் கொண்ட மொபைல் துணைப்பொருட்களுக்கான மேடையை உருவாக்கி ஸ்னேப்டீலின் விற்கத்துவங்கினர். முதல் வாரத்தில் 110 ஆடர்களை பூர்த்தி செய்தனர்.

“நீடித்த வர்த்தகத்தை பெற மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்க, எங்கள் கேஷ்புளோ, கேடலாக் மற்றும் விநியோகத்தை மறுசிந்தனை செய்ய வேண்டியிருந்தது. மார்ச் மாதத்தில் எங்கள் பொருட்களை செல்பி ஸ்டிக், ஸ்கிரின் கிளாஸ், மற்றும் டிரான்ஸ்பரண்ட் கேஸ் ஆகியவையாக குறைத்து அமேசானிலும் விற்கத்துவங்கினோம்,”என்கிறார் பவன். 

இரண்டு மாதங்களுக்குள் மாதத்திற்கு 250 ஆர்டர்களுக்கு மேல் கிடைத்தன. 10 சதவீத லாபம் கிடைத்தது. (இ-காமர்சில் சராசரி லாபம் 25 சதவீதம்). மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸ்கிரின் டாம்பர்ட் கிலாசில் (ஐபோன் மற்றும் ஆண்டிராய்ட்) கவனம் செலுத்தியதன் மூலம் 2016 வரை 20 சதவீத லாபம் உண்டானது. இன்று செல்பெல் போன் கேஸ், கவர்கள், சார்ஜர்கள், போட்டோ பிரேம்களை விற்பனை செய்கிறது. அதன் விற்பனை எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

• மொத்த விற்பனை (ஜிஎம்வி) : ரூ10.6 கோடி

• சராசரியாக ரூ 275 மதிப்பு ஆர்டர்கள் (2 பொருட்கள்)

• தினசரி 500 ஆர்டர்கள்

வெற்றிக்கதை

அண்மையில் செல்பெல் அமேசான் நிறுவனத்தால் அதன் தொடர்ச்சியான விற்பனைக்காக முக்கிய கணக்காக தேர்வு செய்யப்பட்டது. 2018 ல் ரூ12 கோடி விற்பனை இலக்கை எட்டிய கணக்காகவும் விளங்குகிறது. அமேசான் இந்தியாவில் மட்டும் மாதம் 20,000 பொருட்கள் விற்பனை செய்வதாக பவன் கூறுகிறார். 

“கடந்த 3 ஆண்டுகளில் அமேசானில் மாதம் ரூ 5 லட்சம் விற்பனையில் இருந்து ரூ.60 லட்சமாக அதிகரித்துள்ளதாக பவன் சொல்கிறார். செல்பெல்; ஃபிளிப்கார்ட், பேடிஎம், ஸ்னேப்டீல் மற்றும் செல்பெல்.இன் மூலமும் விற்பனை செய்கிறது.

வாடிக்கையாளர் சேவை, செயல்பாடு, விற்பனை, கொள்முதல், வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் கணக்கு ஆகிய பிரிவுகளுக்காக 15 பேர் கொண்ட குழுவை பெற்றுள்ளது. 

“வர்த்தகம் துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு பொருளிலும் 5 முதல் 10 சதவீத லாபம் உள்ளது. லாபத்தை பொருட்களை விரிவாக்கம் செய்வதில் மறு முதலீடு செய்கிறோம்,’ என்கிறார் பவன்.

இருப்பினும் செல்பெல் நிறுவனம் கேனான் போன்றவை அல்ல என்கிறார். “இந்தியாவில் வாடிக்கையாளர் சேவை சார்ந்த பிரிவில் அதிக சேவைகள் இல்லை என்பதால் துணைப்பொருட்கள் பிரிவில் பிராண்ட்களிடம் இருந்து போட்டியை எதிர்பார்க்கவில்லை. போட், மிவி, அமேசான் பேசிக்ஸ், ஆம்பிலிம் போன்ற பிராண்ட்களிடம் இருந்து ஊக்கம் பெறுவதாக பவன் கூறுகிறார்.

சிறிய நகரில் இருந்து...

சிறிய நகரில் இருந்து செயல்படுவது எந்த ஸ்டார்ட் அப்புக்கும் கடினமானது. உதாரணத்திற்கு உல்ஹான்ஸ்நகரில் குறிப்பிட்ட ஸ்டார்ட் அப் ஆதரவுக்குழு அல்லது முதலீட்டாளர்கள் இல்லை. எப்போது முதலீடு தேவை என்றாலும் சுயமாக அல்லது உறவினர் கடன் மூலம் பெற வேண்டும் எனிகிறார் பவன். 

”பெரிய டிரக்குகளுக்கான இடம் இல்லை. சில சந்தையிடங்களுக்கு பின் கோடு கிடையாது. இது எங்களுக்கான வாய்ப்பை குறைகிறது, “என்கிறார்.

இந்த சிறிய நகரம் 13 கிமி சுற்றளவை மட்டும் பெற்றிருந்தாலும் 3 ரெயில் நிலையங்கள், மற்றும் கூரியர் நிறுவன அலுவலகங்களை பெற்றுள்ளது. நாடு முழுவதும் அனைத்து சந்தைகளுக்கும் பொருட்கள் செல்லும் வேர்ஹவுஸ்கள் கொண்ட பிவாந்தி அருகே உள்ளது.

“எங்கள்தொடர்புகள் காரணமாக குஜராத், மும்பை மற்றும் சீனாவிடம் இருந்து உடனடியாக பொருட்கள் கொள்முதல் செய்ய முடிகிறது. பேக்கேஜிங், போக்குவரத்து என எல்லாவற்றையும் ஒரு வார காலத்திற்குள் ஏற்பாடு செய்ய முடியும். இதற்குக் காரணம் குடும்ப தொடர்புகள் மூலம் வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டிருப்பது தான். உறவுகள் காரணமாக சப்ளை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க மாட்டார்கள்,” என அவர் மேலும் கூறுகிறார்.

வாடிக்கையாளர் கருத்து

செல்பெல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் மீண்டும் வாங்கும் விகிதம், விற்பனை, வருவாய் வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் கருத்து முக்கியமாக இருக்கிறது.

“2015 ல் துவங்கிய போது வாடிக்கையாளர்கள் டெலிவரியில் சேதம் பற்றி புகார் தெரிவித்தனர். எனவே கிளாஸ் மற்றும் கவர்களில் பல பரிசோதனைகளை மேற்கொண்டோம். பேக்கில் அதிக போம் வைத்தோம். அமேசான் எப்சி டைரக்ட் மூலம் வலுவான பெட்டியில் நேரடியாக அனுப்பினோம். இன்ஸ்டலேஷன் கிட்களும் அளித்தோம்,” என்கிறார் பவன்.

தங்கள் இணையதளம் மற்றும் சந்தை மேடைக்கான மையமான வாடிக்கையாளர் சேவையை செல்பெல் வழங்குகிறது. ஒரு மாத பணம் திரும்பி அளிக்கும் உத்திரவாதம் மற்றும் 12 மாத வாரண்டி அளிக்கப்படுகிறது. மேலும் 24 மாத குறைந்த செலவு வாரண்டியும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் செல்பெல் பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி கூப்பன் அளிக்கப்படுகிறது.

“இதன் காரணமாக பயனாளிகள் எண்ணிக்கை மற்றும் ஆர்டர்கள் அதிகரித்தன. 12 மாத கால வாரண்டி திட்டம்கீழ் எந்த விற்பனை சேனலிலும் 100 சதவீத ரிபண்ட் கொண்டதாக இது மேம்படுத்தப்பட்டுள்ளது,” என்கிறார் பவன்.

கார் சார்ஜர்ஸ், சூப்பர்பாஸ்ட் சார்ஜர்ஸ், டேட்டா கேபிள், புளூடூத் ஸ்பீக்கர்கள், பிரிமியம் கேஸ்கள் ஆகியவற்றை செல்பெல் அறிமுகம் செய்ய உள்ளது.

“2018ல், கஸ்டமர் பரிந்துரை மூலம் பிராண்ட் ஆற்றலை மேம்படுத்த உள்ளோம். 2019 ல் ஆஃப்லைன் விற்பனையிலும் கவனம் செலுத்த உள்ளோம்,”என்கிறார் பவன்.

இணையதளம்:

ஆங்கிலத்தில்: ஆதிரா ஏ நாயர் | தமிழில்: சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL