இணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்!

0

ச்சும்மா அதிர வைக்கும் கபாலி டீசர்...

அந்த நிமிடம் வந்தே விட்டது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் டீசர் சரியாக காலை பதினோரு மணிக்கு இணையத்தில் வெளியானது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டீசரை பார்த்து ரசித்துவிட்டு ட்வீட்டியும், ஃபேஸ்புக்கில் தெறி ஸ்டேடஸ்களையும் பதிவிட்டும் வருகின்றனர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, கிஷோர் தினேஷ், கலையரசன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இதோ அந்த டீசர்...

 

யூட்யூபில் கபாலி டீசர் வெளிவந்த சில நிமிடங்களில் 50000 பார்வையாளர்களை தொட்டு தற்போது, 16 லட்சம் பார்வையாளர்களுடனும், 1லட்சத்து 70 ஆயிரம் லைக்குகளுடன் வேகமாக இணையத்தில் பரவிவருகிறது.

டீசரில் வரும் கேங்கஸ்டர் ரஜினி கெட்டப்பிற்கும், மற்றொரு காட்சியில் இளமையாகத் தோன்றும் 70 களின் தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் கெட்டப்பிற்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதை பார்க்கமுடிகிறது. 

டீசர் வெளியானதும், பல பிரபலங்கள் #kabaliTeaser, #kabali போன்ற ஹேஷ்டேக் மூலம் ட்வீட்கள் செய்தனர். அதில் சில...

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ- " அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த குரல்... அந்த நடை!!! அய்யோ தலைவா... 

நடிகர் தனுஷ்- நெருப்புடா... நெருப்புடா... தலைவா... 

மலையாள நடிகர் துல்கர் சல்மான் - பூம்! சூப்பர்ஸ்டாரை போல் எவரும் இல்லை. தெறிக்கவைக்கும் டீசர் இது... இதில் சிறப்பே சூப்பர்ஸ்டாரின் 70கள் கெட்டப்தான்...

கபாலி பட நாயகி ராதிகா ஆப்தேவின் ட்வீட்
கபாலி பட நாயகி ராதிகா ஆப்தேவின் ட்வீட்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்