போலியோ, தசை, நரம்புக் கோளாறால் நடக்க முடியாதவர்களை நடக்க வைக்கும் ’Cybolimb’

0

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினாலே அதுவே சிறந்த கண்டுபிடிப்பு எனலாம்.

அது போலவே மாற்றுத்திறனாளிகளுக்கான அற்புத கண்டுப்பிடிப்புகள் எப்பொழுதும் பாராட்டப்படவேண்டியவை. சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ’சைபர்நாய்ட் ஹெல்த் கேர் நிறுவனம்’ Cybernoid Healthcare Pvt Ltd இதைத்தான் செய்கிறது. 

இந்நிறுவனம் சைபோலிம்ப் (Cybolimb) என்னும் ரோபோடிக் தொழில்நுட்பத் தயாரிப்பில் நரம்பு தசை கோளாறுகள் மற்றும் முதுகு தண்டு பிரச்சனைகள் உள்ளோருக்கு உதவ, சாதனம் ஒன்றை தயாரித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அணியக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த தயாரிப்பு, அவர்கள் மற்றவர் உதவியின்றி எழுந்து உட்கார, நடக்க, மற்றும் இதர செயல்களை செய்ய உதவும்.

“இந்தத் தயாரிப்பு நரம்பு கோளாறுகள் உள்ள மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் இருந்து விடுப்பட்டு சுயமாக எழுந்து நடமாட உதவும்,” என்கிறார் நிர்வாக இயக்குனர் வீரபாபு.

ரிச்சார்ஜபிள் பேட்டரி மூலம் இயக்கப்படும் ’சைபோலிம்ப்’ ஒருவர் நடப்பதற்குத் தேவையான முறைமைகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு வினாடிக்கு ஒரு அடியென நியமித்திற்கும் இந்த கருவி மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்படலாம். இலேசான எடை மற்றும் அணியக்கூடிய வகையில் தோல்வார் கொண்டதால் பயனாளிகள் இதை சுலபமாக அணிந்துக் கொள்ளலாம்.

இந்த தயாரிப்பு மெட்ராஸ் பல்கலைகழகத்தின் கீழ் வரும் தொழிநுட்ப வணிக அடைக்காக்கும் அமைப்பின் உதவியோடு உருவானதாகும். இதற்கான ஆராய்ச்சி 2010-ல் துவங்கி படிப்படியாக முன்னேறி இன்று சந்தைக்கு வந்துள்ளது. 2013ல் இந்த தயாரிப்புக்கான நிதி உதவியை திரட்டி இன்று 2 கோடி வரை கிடைத்துள்ளது, இன்னும் தங்களது தயாரிப்பை விரிவுப்படுத்த முதலீடுகளை நாடி வருகின்றனர் இவர்கள்.

“இதுபோன்ற தானியங்கி கருவிகள் மற்ற நாடுகளில் 75 லட்ச ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை விற்கப்படுகிறது. ஆனால் சைபோலிம்பின் விலை ஒன்றில் ஏழு பகுதியாக குறையும்,” என்கிறார்.

தற்பொழுது மறுவாழ்வு மையம் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து இக்கருவிக்கான முன்பதிவகளை எடுத்து வருகிறது இந்நிறுவனம். கூடியவிரைவில் சர்வதேச அளவில் இக்கருவி சந்தைப்படுத்தப்படும் என்கிறார் வீரபாபு.

இடது: தலைமை நிர்வாகி வீரபாபு 
இடது: தலைமை நிர்வாகி வீரபாபு 
“முதலில் தன்னார்வலர் ஒருவரை மீண்டும் நடக்க வைக்க வேண்டும் என்று தொடங்கிய முயற்சி இது. பின் அதுவே ஸ்டார்ட் அப் அமைக்கவும், சைபோலிம்பை தயாரிக்கவும் காரணமாய் அமைந்தது.”

2010ல் சுய நிதி மூலம் உருவான Cybernoid Healthcare Pvt Ltd 2011ல் மெட்ராஸ் பல்கலைகழகத்தின் கீழ் வந்து தங்களின் தயாரிப்பின் முன் மாதிரியை உருவாக்கத் துவங்கி இன்று சிறந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளது.

வலைதள முகவரி: Cybernoid Healthcare Pvt Ltd

Related Stories

Stories by Mahmoodha Nowshin