இந்தியாவின் துணை ராணுவப் படையின் முதல் பெண் இயக்குனர்- அர்ச்சனா ராமசுந்தரம்

0

மூத்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், சஷாஸ்த்ர சீமா பல் (Sashastra Seema Bal) இன் முதன்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது,தேசிய குற்றப்பதிவுத் துறையின் சிறப்பு இயக்குனர் பணியில் இருப்பவர் அர்ச்சனா. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கையின் மூலம், அடுத்த வருடம், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின், வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெற்று விடும் 58 வயதான அர்ச்சனா ராமசுந்தரம், துணை ராணுவப்படையின், தலைமை பதவியை ஏற்கும் முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள், பூட்டான் அருகிலிருக்கும் நம் நாட்டு எல்லைகளை காக்கும் பணி, சஷாஸ்த்ர சீமா பலினுடையது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ டிபெத்திய எல்லைக் காவல், சஷாஸ்த்ர சீமா பல் என எந்த ஐந்து துணை ராணுவப் படைகளிலும், இதுவரை எதற்குமே ஒரு பெண் தலைவர் இருந்ததில்லை என்கிறது, பிடிஐ செய்தி.

2014 ல், மத்தியப் புலனாய்வுச் செயலகத்தில், கூடுதல் இயக்குனராக பதவியேற்றபோது வெளிச்சத்திற்கு வந்த அர்ச்சனா, தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஆவார். அந்த பதவி நியமனம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாய், தேசியக் குற்றப் பதிவுச் செயலகத்திற்கு மாற்றப்பட்டார். அவரைத் தவிர்த்து, ஐபிஏஸ் அதிகாரிகள் கே.துர்கா பிரசாத், கே.கே ஷர்மா, முறையே, சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப்-ற்கு முதன்மை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படைகளில், தற்போது பதவியில் இருக்கும் தலைவர்கள், இம்மாத இறுதியில் ஓய்வுப் பெற்றப் பிறகு இவர்கள் பதவியேற்பார்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த, 1981 பேட்ச் , ஐ.பி.எஸ் அதிகாரி பிரசாத், 2014ல் அறிவிப்பு இன்றி சிறப்பு பாதுகாப்பு குழுவிலிருந்து நீக்கப்பட்டார். சிறப்புப் பாதுகாப்புக் குழு, பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களுடையக் குடும்பத்தினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி சார்க் மாநாட்டில் பங்கேற்க நேபாள் சென்றபோது பாதுகாப்புப் அளிக்கக் கூடியது. பின்னர், பிரசாத், கடந்த வருடம் ஜனவரி மாதம், சிஆர்பிஎஃப்-ன் சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். சிஆர்பிஎஃப், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கும் படை ஆகும்.

தமிழில் : Sneha