இதயத்தை வென்ற குரோசியா அணி; தங்கக் கால்பந்து விருது பெற்ற லுகா மொட்ரிக்!

அகதி டு தங்கக் கால்பந்து விருது: குரோசியா ஆட்ட நாயகர் லுகா மொட்ரிக்கின் எழுச்சிமிகு வெற்றி!

0

பல எதிர்பார்ப்புடன் பரபரப்பாக நடந்து வந்த கால்பந்து உலக கோப்பை முடிவடைந்தது. யாரும் எதிர்பாராத இரண்டு அணிகள் ஃபிரான்ஸ் மற்றும் குரோசியா சந்தித்த இந்த இறுதி சுற்றில் 20 வருடங்களாக பெறாத இந்த கோப்பையை ஃபிரான்ஸ் தட்டிச் சென்றது. குரோசியா கோப்பையை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடத்தில் பெரும் மதிப்பையும் அன்பையும் பெற்றுவிட்டது.

பட உதவி: டெலிகிராப் 
பட உதவி: டெலிகிராப் 

2018 ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் குரோசியாவின் பயணம் பலர் பிரமிக்கத்தக்கதாக அமைந்தது. முதல் போட்டியில் நைஜீரியா அணியிலிருந்து அர்ஜென்டினா அணியை வென்றத்தில் தொடங்கி இன்று இறுதி சுற்றுக்கு தகுதி பெரும் வரை தங்களது அபார ஆட்டத்தில் பலரின் மனதை கவர்ந்துள்ளனர்.

ஒரு சிறு அணி பல ஃபுட்பால் ஜாம்பவான்களை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற முக்கியக் காரணம் லுகா மொட்ரிக். தனது திறமையை சந்தேகித்து பேசிய அனைவருக்கும் பெரும் பதிலடி கொடுத்து பல ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார் லுகா மொட்ரிக். ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையில் இந்த வருடத்திற்கான தங்கக் கால்பந்து விருதையும் பெற்றுள்ளார் லுகா.

லுகா மொட்ரிக் பயணம்

மொட்ரிக் ஆறு வயது இருக்கும் பொழுது செர்பியன் எழுச்சியாளர்களால் அவரின் தாத்தா சுட்டுக்கொல்லப்பட்டார், போரில் அவரது வீடும் எறிந்து விட தன் குடும்பத்துடன் அகதியாக தனது சிறு வயதை கழித்தார் மொட்ரிக்.

லுகா மொட்ரிக், பட உதவி: இந்தியாடைம்ஸ்
லுகா மொட்ரிக், பட உதவி: இந்தியாடைம்ஸ்

அகதிகளாக குரோசிய விடுதியில் 7 வருடம் தங்கி வளர்ந்த மொட்ரிக், விடுதியின் பார்கிங்கில் கால்பந்து விளையாடி பழகினார். தன்னைச் சுற்றி இருக்கும் கவலையை மறக்க கால்பந்து விளையாடத் துவங்கினார்.

குண்டுகள் தாக்கியதை விட அவர் பந்தால் ஹோட்டல் ஜன்னல்களை உடைத்ததே அதிகம் என்றார் அவ்விடுதியின் மேலாளர்.

“நிதி நிலமையில் நாங்கள் பின் தங்கி இருந்தாலும் ஃபுட்பால் மீது எனக்கு ஒரு மோகம் இருந்து கொண்டுதான் இருந்தது,”

என்றார் தி சண் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில். 1992ல் கால்பந்து விளையாட தொடங்கிய மொட்ரிக், ஒரு சிறந்த விளையாட்டு வீரராக தகுதி இல்லை என பல பயிற்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டார். இருப்பினும் தனது முயற்சியை விடாமல் 19 வயதில் போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினியன் லீக் பிளேயராக முன்னேறி இன்று உலகக் கோப்பை இறுதி சுற்று வரை தகுதி பெற்றுள்ளார்.

“குண்டு சத்ததிற்கிடையில் வளர்ந்ததால்தான் எதையும் சந்திக்கும் தைரியம் என்னுள் உள்ளது. பழயதை என்னுடன் வைத்துகொள்ள விரும்பவில்லை என்றாலும் அதை நான் மறக்கவும் விரும்பவில்லை,” என்றார்.

கடந்த 5 வருடமாக ரியல் மாட்ரிட்டில் விளையாடி வரும் அவர் சிறந்த மிட் பிளேயர் என பெயரையும் பெற்றுள்ளார். தற்போது அவர் தனது குரோஷிய அணியை இறுதி ஆட்டத்துக்கு வழிநடத்தி சென்று தங்க கால்பந்து விருது பெறும் வீரராக மொட்ரிக் மாறியுள்ளார்.

“லீக் விளையாட்டை என்னால் சமாளிக்க முடியாது என்று பலர் சொன்னபோது அது எனக்கு கூடுதல் ஊக்கம்தான் அளித்தது. நான் அவர்களை தவறாக நிரூபிக்க விரும்பினேன், இப்போது அவர்கள் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்,” என்றார் டெய்லிமெயில் பேட்டியில்.

32 வயதில் சற்றும் வீழாமல் நம்பிக்கையுடன் விளையாடி தனி வீரராய் ஜொலிப்பது மட்டுமின்றி தனது அணியை இறுதி சுற்றுக்கு வழி நடத்தி பலரின் மனதில் ஒரு சிறந்த அணியாக குரோசிய அணியை இடம்பிடிக்க செய்துள்ளார். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin