நரேந்திர மோடியிடம் தொழில் முனைவோர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? 

1

இந்தியாவின் 69 வது சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி. 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் பற்றி அறிவித்தார். உற்சாகமும், துடிப்பும் நிறைந்திருந்த விக்யான் பவன் அரங்கில், மோடி ஜனவரி 16 ம் தேதி ஸ்டார்ட் அப்களுக்கான செயல்திட்டத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்திய அரசும் பிரதமரும் ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

'ஸ்டார்ட் அப் இந்தியா,' 'ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டத்தை அறிவித்த "நரேந்திர மோடியிடம் தொழில்முனைவோர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? என்பதை இந்தியா முழுவதிலும் உள்ள பிரபல தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிதி ஆலோசகர்களிடன் யுவர்ஸ்டோரி சார்பில் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு இதோ...

தமிழ்நாடு :

"நீங்கள் எதையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்தால் மாயாஜாலங்கள் சாத்தியமே..." 

 - சி கே ரங்கனாதன், கவின்கேர் நிறுவனர்- தலைவர்

மோடி சிறந்த தொலைநோக்காளர்! பன்முகத்தன்மையுடையவர்! சிறந்த தலைவர்! உறவுகளை கட்டமைப்பவர்! சிறந்த தொடர்பாற்றல் உடையவர்! அவரது நன்மதிப்பைக் கொண்டு நாட்டின் மதிப்பை உயர்த்துபவர்." 

- ஃபுட் கிங் நிறுவனர் சரத்பாபு

கேரளா :

தொழில்முனைவை பெரிய அளவில் கொண்டுசென்ற உயர்ந்த மனிதர் மோடி! அரசியலே அவரது தொழில்முனைவு..." 

 - ஜே.ராஜ்மோஹன் பிள்ளை, தொழிலதிபர்

'ஸ்டார்ட் அப் இந்தியா', 'ஸ்டாண்ட் அப் இந்தியா': 'ஸ்டார்ட் அப் மோடி', 'ஸ்டாண்ட் அப் மோடி...'
தொழில்முனைவை இந்தியாவின் முதுகெலும்பாக மாற்றிய மனிதர். இந்திய தொழில்முனைவோர்களின் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடி... 

 - தெளபீக் அஹமத், தொழிலதிபர்

குஜராத்

'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.' விதியை எண்ணி புலம்பாதே... சவாலை எதிர்கொள், அதை எதிர்த்து கடினமாக உழை... 99% வியர்வை, 1% உத்வேகம் முக்கியம்." 
- ஜக்தீஷ் தக்கர், நிதி ஆலோசகர் 
பெரிதே பிரதானம், பெரிதாய் யோசி, பெரிதாய் செய், நம்பிக்கையுடன் பொறுத்திரு!
விரிவான சிந்தனை கொள்! உங்கள் பலம், பலவீனத்தை நன்கு அறிந்து. மாற்றுத்திட்டத்தை வகுத்துக்கொண்டு செயலில் இறங்கு... 
- ஜயதேவ்சின்ஹ் சுதசாமா, நிதி ஆலோசகர்

கர்நாடகா

'ஸ்டார்ட் அப்' மற்றும் 'யங் இந்தியா' திட்டங்கள்; முதலீடுகளையும், நிதிகளையும் ஈர்க்கும். விரைவில் இந்தியா தொழிலில் சிறந்த நாடாக உருவெடுக்கும். இந்திய அரசு என்னை போன்ற தொழில்முனைவோருக்கு நிறுவனத்தை தொடக்க போதிய பின்புலத்தை அளித்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது... 

- ப்ரஷாந்த் சாகர், இளம் தொழில்முனைவர்

பிரதமர் மோடியின் திட்டங்கள் சரிவர அமல்படுத்தப்பட்டால், இந்தியா; அமெரிக்கா, ரஷ்யா போல் வளர்ச்சி அடையும். புதுயுக தொழில் திட்டங்கள் மற்றும் அரசின் உத்வேகம் மாற்றத்தை ஏற்படுத்தி நல்ல பலனை விரைவில் தரும்...      

     - ஜெயபிரகாஷ், தொழிலதிபர்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் பற்றிய தொடர்பு கட்டுரைகள்:

பிரதமர் மோடியின் 'ஸ்டார்ட் அப் இந்தியா' செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்!

இந்தியா அடுத்த சிறந்த தொழில்முனை நாடு என்பதற்கான 16 காரணிகள்!

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan