ஸ்டார்ட் அப் தொடங்குபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 படிகள்  

2

ஸ்டார்ட் அப் தொடங்குவது மகிழ்ச்சியின் உச்ச்ததிற்கே கொண்டு செல்லும் காரியங்களில் ஒன்று. நான் கடந்த மூன்று வருடங்களாக தொழில்முனைவராகும் பாதையில் பயணித்து வருகிறேன். இது ஸ்டார்ட் அப் தொடங்குவது தொடர்பான போதுமான அறிவினை பெற உதவியுள்ளது. முதன்முதலாக ஸ்டார்ட் அப் தொடங்குபவர்களுக்கு உதவும் ஐந்து படிகளை இங்கு பார்க்கலாம்.

படி 1: யோசனைகளை சிந்தித்து தெளிவுறல்

உங்கள் யோசனையை நீங்கள் உங்களுக்குள்ளேயே விளக்கமாக விவரித்துப் பாருங்கள். இந்த மூன்று கேள்விகளுக்கு விடைகிடைத்தால் உங்களுக்கு சிறந்த பாதையை தொடங்க வழி தெரியும்.

• நீங்கள் தீர்க்க நினைக்கும் பிரச்னை என்ன?

• யாரெல்லாம் அந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்?

• அந்தப்பிரச்னையை எப்படி தீர்க்கப்போகிறீர்கள்?

உதாரணத்திற்கு: 

“வளர்ந்து வரும் நாடுகளில் நிலவி வரும் உணவுப்பொருட்கள் சேமிப்பில் உள்ள பிரச்னையை தீர்க்கவேண்டும்; கிட்டத்தட்ட 40 சதவீதமான அறுவடை வீணாகிறது. அதிலும் குறிப்பாக போதுமான உணவுப்பொருட்கள் சேமிப்பு வசதிகள் இல்லாத கிராமவாசிகள் இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்கள். கிராம அளவிலான உணவுப்பொருட்களை சேமிக்கும் கூடங்களை கட்டமைத்தால், அவர்களது அறுவடையை மழை மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கமுடியும்.”

படி 2: உங்கள் வாடிக்கையாளர் யாரென்று கண்டறியுங்கள்?

உங்கள் ஸ்டார்ட் அப் யாரை மையப்படுத்தி தொடங்கப்படுகிறது என்பதை கண்டறியுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களை புரிந்துகொள்வதன் மூலமே அவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை கண்டறிய முடியும். கீழ்காண்பவர்களே உங்கள் வாடிக்கையாளராக இருக்கக்கூடும்.

• ஒரே மாதிரியான தேவை கொண்டவர்கள்

• உங்களின் தீர்வை அதே விலையில் ஏற்றுக்கொள்பவர்கள்

• அதே விலையில் வாங்கக்கூடியவர்கள்

உங்கள் வாடிக்கையாளர்களைப்பற்றி அறிந்துகொள்ளுதல்

சேகரித்த வாடிக்கையாளர்களின் கதாபாத்திரங்களைக்கொண்டே உங்கள் வாடிக்கையாளர் யார் என்பதை ஊகிக்கமுடியும். உங்கள் வாடிக்கையாளர்களை அடையாளம் காண கீழ்காணும் கேள்விகள் உதவும்.

• அவர்களின் வயது என்ன?

• அவர்களின் பாலினம்?

• அவர்களின் தொழில்?

• அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னை என்ன?

• அவர்களின் வசிப்பிடம்? (நகரம், புறநகர், கிராமம்)

• அவர்களின் வருவாய் பின்புலம் என்ன?

படி 3: போட்டியை தவிருங்கள்

ஸ்டார்ட் அப்பை முழுமையாக தொடங்கிவிட்ட பிறகு நிறுவத்துவது இறப்பதற்கு சமமானது. ஃபிளிப்காட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்டவைகளுடன் போட்டிபோடும் ஏராளமான ஈ-காமர்ஸ் ஸ்டார்ட் அப்புகள் தோல்வியைச் சந்திப்பது ஏன் என்பது குறித்து யோசியுங்கள். இருந்தாலும், அவர்களுடன் போட்டியிடுவதாக இருந்தால், உங்களது தயாரிப்பு அவர்களைவிட 10 மடங்கு சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஆப்பிள் ஐபாட் Vs மற்ற பொதுவான MP3 பிளேயர்கள். எதனால் ஆப்பிள் வெற்றியடைந்துள்ளது?

படி 4: ஏகபோகமாக நீங்களே சந்தையை ஆளுங்கள்

நமது சமூகத்தில் ஏகபோக சந்தையாளர்கள் மதிக்கப்படுவதில்லை. பொருட்களின் விலை மற்றும் எப்போது பொருள் கிடைக்கும் என்பதை அவர்கள் முடிவு செய்வதால் அவர்கள் கெட்டவர்கள் போல் பாவிக்கப்படுகிறார்கள். அப்படியிருந்தாலும், ஸ்டார்ட் அப் உலகத்தில் ஏகபோகமாக நீடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. சில ஏகபோக சந்தையாளர்களை சுட்டிக்காட்டுகிறேன், ஏன் அவர்கள் இன்னும் ஏகபோகமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.

• இந்தியன் ரயில்வே

• கூகுல் தேடல்

• மைக்ரோசாப்ட் விண்டோஸ்

• யுனிலீவர்

• வாட்ஸ்அப்

• ஃபேஸ்புக்

படி 5: உங்களது மாதிரியை கட்டமையுங்கள்

வாழ்த்துக்கள், நீங்கள் வெற்றிகரமாக படி ஒன்றிலிருந்து நான்குவரை முடித்துள்ளீர்கள். தற்போது வியாபார மாதிரியை கட்டமைக்க வேண்டிய தருணம்.

(அ) சிந்தனையுடன் தொடங்குங்கள். எல்லா யோசனைகளையும் எழுதி, சுவற்றில் ஊக்கிடுங்கள். இந்த நிலையில் உங்களின் மனக்கதவை முழுவதுமான திறந்துவையுங்கள்.

உங்களது யோசனையால் பயன்பெறப்போவது யார் என்பதை பட்டியலிடுங்கள். உங்களது யோசனையை கூர்படுத்தி, யாருக்காக ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கபோகிறீர்கள் என்பதை கண்டறியுங்கள்.

யாருக்காக, எதற்காக என்பதை ஒருவழியாக கண்டறிந்துவிட்டீர்கள். தற்போது கட்டமையுங்கள், சோதனை செய்யுங்கள் மேலும், உங்களது குறைந்தபட்ச மதிப்புள்ள பொருளை மேம்படுத்துங்கள். இதையே பின்பற்றி தொடர்ந்து முயற்சித்தால் உங்கள் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை சரியாக கண்டுகொள்ள முடியும்.

1. நீங்கள் முழுமையாக நம்புவதிலிருந்து ஆரம்பியுங்கள். அது கைதுடைக்கும் காகிதமாகக்கூட இருக்கலாம்.

2. மனதில் தோன்றுவதை வரைந்துபாருங்கள். அது உங்கள் இணையத்தின் முதல் பார்வையாகக்கூட இருக்கலாம். எதிர்காலத்தைப்பற்றி அச்சம் கொள்ளாமல், தொடக்க காலத்தில் உங்கள் தயாரிப்பில் உள்ள குறைகளை மனதில் கொள்ளாமல், உங்கள் பொருள் எப்படி வடிவமைக்கப்படவேண்டும் என்பதில் குறியாக இருங்கள். உங்கள் தயாரிப்பு வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை தீர்க்கும் என்பதில் கவனமாக இருங்கள்.

3. உங்களின் தயாரிப்பை ஏற்றுக்கொள்ளும் சிலரை அலுவலகத்திற்கு அழைந்துவந்து அவர்களிடம் உங்களின் தயாரிப்புகளை கொடுத்து பயன்படுத்தி பார்க்கச்சொல்லுங்கள்

4. அவர்கள் எப்படி உங்களது தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள். சின்ன வார்த்தைகளைக்கூட கவனியுங்கள். அவர்கள் குழம்பிபோகிறார்களா? வெறுப்படைகிறார்களா? அல்லது அவர்கள் முகத்தில் புன்னகையை பார்க்கமுடிகிறதா? இந்த நிலையில் அவர்களிடம் கேள்வி கேட்க எந்த தயக்கமும் வேண்டாம். அவர்களின் கருத்து தங்கச்சுரங்கம் உங்களுக்கு.

5. அவர்களின் கருத்துக்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் குழப்பமடைவதற்கும் அல்லது ’வாவ்’ என்று ஆச்சர்யப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை கண்டறியுங்கள். இதிலிருந்து உங்களது தயாரிப்பை மேம்படுத்தமுடியும். அல்லது மீண்டும் படி 1-இருந்து தொடங்கலாம்.

ஐந்து நட்சத்திர மதிப்புகள் பெரும்வரை இது போன்ற சாதாரண விதிமுறைகளை தொடர்ந்து செய்தால் வெற்றி பெறலாம்.

கட்டுரை : செளரப் சிங் | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்