'விலங்குகளுக்கும் நம்மைப் போல் உரிமை இருக்கிறது'- விலங்கு ஆர்வலர் அருண் பிரசன்னா

1

முதுகலை பட்டதாரியான அருண் பிரசன்னா, சிறு வயதிலிருந்தே விலங்கு நல ஆர்வலராக இருந்து வந்தார். ப்ளூ க்ராஸ் என்னும் சமூக விலங்கு நல அமைப்பில் பெரும் பங்கு வகித்து வந்தார். விலங்குகளை காத்தல், பராமரித்தல், மேன்மைப்படுத்துதல் மற்றும் உதவுதல் போன்றவற்றை செய்து வந்தார்.

அருணின் தன்னார்வ தொண்டு நிறுவன மலர்ச்சி

ப்ளூ க்ராஸ் நடத்தி வரும் நிகழ்ச்சிகளில், ஒரு முறை ஆவணப்படம் ஒன்றை காண்பித்தனர். அதில் காட்டப்பட்ட விலங்குகளின் உணர்வுகளும், வாழ்க்கை நிலையையும் கண்டு நெகிழ்ந்து போன அருண் பிரசன்னா, ஒரு தன்னார்வ தொகண்டு நிறுவனத்தை 2012-ல் தொடங்க முடிவெடுத்தார்.

தன் தாயாருடன் பயணித்த போது, மாடுகளைத் தவறான முறையில் வேறு இடத்திற்கு கொண்டு செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருண், சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தார். இந்த நிகழ்வே இவர் "People for Cattle in India" (PFCI) அமைப்பை தொடங்குவதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது.

அமைப்பின் விரிவாக்கம்

இரண்டு பேர் கூட்டணியில் தொடங்கிய இந்த நிறுவனம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. விலங்குகளின் காப்பாளராக அருண் திகழ்ந்தார். சொந்த முதலீட்டில் இதைத் தொடங்கி, விலங்குகளை பாதுகாத்து வந்தார்.

தமிழ்நாட்டில் பெருகி வரும் விலங்குகள் மீதான கொடூரங்களைத் தகர்க்கும் வகையில், பல விலங்கு நல ஆர்வலர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார். பசுமாடு, எருது போன்ற விலங்குகளில் தொடங்கி பன்றி, குதிரை, ஒட்டகம் போன்ற அனைத்து வகையான விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை எதிர்த்து குரல் எழுப்பியிருக்கின்றனர்.

விலங்குகளைப் பாதுகாக்கும் அணுகுமுறை 

அருணின் ஆர்வத்திற்கேற்ப அவருடைய கூட்டணியும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர். இதனால் தொடர் சாதனைகளை அவரால் செய்ய முடிந்தது.

"சரியான முறையில் விலங்குகள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றாலோ, விலங்குகளுக்கு தீங்கிழைக்கும் வகையில் செயல்கள் நடந்தாலோ அல்லது கேட்பாரற்று விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டாலோ, நாங்கள் உடனடியாக களத்தில் இறங்கி உதவிகள் புரிவோம்," என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அருண்.

கடந்த 4 வருடங்களில், சுமார் 1260 விலங்குகளைத் தவறான முறையில் இடமாற்றம் செய்வதிலிருந்தும், உயிர்பலி கொடுப்பதிலிருந்தும் காப்பாற்றி, விலங்குகள் வதைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். இவர்கள் முன்நின்று விலங்குகளுக்கு உதவி செய்த பட்டியல் இதோ :

  • * ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைரவர்களைக் காத்து, சரியான நபரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்
  • நரிகுறவர்களிடமிருந்து 45 பூனைகளையும், 26 குரங்குகளையும் காத்திருக்கின்றனர்
  • * உரிமம் பெறாத நிறுவனங்கள், விலங்குகளை துன்புறுத்துவதிலிருந்து தடுத்திருக்கின்றனர்
  • * பல ஆயிர விலங்குகளை அண்மையில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்திலிருந்து (சென்னை மற்றும் கடலூர்) காத்திருக்கின்றனர்
  • * விலங்கு நலத்துறை அமைப்பு நிறுவனங்களில் ஐ.எஸ்.ஒ (ISO) முத்திரைப்பெற்ற ஒரே நிறுவனம் PFCI

* பொங்கள் தினத்தன்று PFCI செய்த தொண்டுகளைக் கெளரவிக்கம் வகையில், சுகல் குழுமம் விலங்குகளைப் பாதுகாப்பதற்காக நண்கொடை அளித்திருக்கிறார்கள்                           * அகரம் நிறுவனம், தி இந்து பற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து PFCI-விற்கு "சிறந்த விலங்டு பாதுகாவலர்" விருது வழங்கியுள்ளனர்

எதிர்கால திட்டங்கள்

"அன்றாடம் பணத்திற்காக பணிபுரிந்து உழைப்பதைத் தாண்டி, நம்மைப் போன்று மற்றொரு உயிருக்கு உதவி செய்து, காப்பாற்றும் போது கிடைக்கும் மன நிறைவு வேறு எதிலும் இல்லை", என்று அருண் பெருமிதப்படுகிறார்.

விலங்கு நல மேம்பாட்டிற்காக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு விடுதியைத் தொடங்கி இருக்கிறார். 24-மணி நேரமும் இயங்கும் இந்த விடுதியில், விலங்களுக்கான மருத்துவ வசதியும் உண்டு.

'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்ற பழமொழிக்கேற்ப இவ்வுலகில் மானிடராய் பிறந்த ஒவ்வெருவரும் பிற ஜீவராசிகளைக் காப்பதும் அவசியம். அதிலும், இதை வெறும் செயலாகச் செய்யாமல் முழு மனதுடன் ஒரு சேவையாகச் செய்வதன் மூலம் வாழ்க்கை முழுமையடையும்", என்று கூறி அருண் விடைபெறுகிறார்...

இணையதள முகவரி: PFCI

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'உயிரில் பேதமில்லை'- சென்னை வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை காப்பாற்றிய ப்ளூ கிராஸ்!

விலங்குகளின் மொழி அறிந்த தோழி!


Stories by Sowmya Sankaran