குடிகார கணவர்களை அடிக்க, திருமண நிகழ்வில் மர பேட்களை பரிசாக கொடுத்த அமைச்சர்!

0

தினசரி வருத்தமளிக்கக்கூடிய செய்திகளையும், பாலியல் பலாத்காரம், விபத்து செய்திகளையும் கேட்டு அலுத்துப்போன நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல் ஒன்றை பகிரப்போகிறோம். அதுவும் அது இந்தியாவில் நடந்தது என்றால் உங்களால் நம்ப முடியாது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இலவச திருமண நிகழ்ச்சி ஒன்றில் அதில் கலந்துகொண்ட மணப்பெண்களுக்கு மர பேட்களை பரிசாக வழங்கியுள்ளார். அதை அவர்கள் கணவர்கள் அடித்து துன்புறுத்தினால் பயன்படுத்த பரிசளித்ததாக கூறினார். குடித்துவிட்டு கணவர் மனைவியை அடிக்கும் போது இந்த பேட்டை பயன்படுத்த மணப்பெண்களுக்கு அறிவுறித்தினார் அமைச்சர்.  

கோபால் பார்கவா, எனும் சிவ்ராஜ் செளஹான் அரசின் மத்திய பிரதேச அமைச்சர் பல ஜோடிகளுக்கு கூட்டாக திருமண நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது, 

‘குடிகாரர்களை அடிக்க உதவும் பரிசு, போலீஸ் இதில் தலையிடாது’ என்று பொறிக்கப்பட்ட பேட்களை பரிசுகளாக அளித்தார். அரசும், காவல்துறை மட்டுமே மனைவியை தாக்கும் குடிகார கணவர்கள் பிரச்சனையை தீர்த்துவிடமுடியாது என்றார் மேலும். 

ஒரு பெண்மணி என்னை அவரின் குடிகார கணவரை அடிக்க மரக்கட்டையை பயன்படுத்தவா என்று என்னை கேட்டப்போது உண்டான ஐடியா இது என்றார் அமைச்சர். குடிப்பழக்கத்தில் உள்ளவர்களை கையாள இது போன்ற வழிகளை பின்பற்றி சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். 

“அரசு, காவல்துறை தவிர மக்களும் பிரச்சனையை தீர்க்க முன்வரவேண்டும். மக்கள் சக்தியால் வரலாற்றில் இடம்பெற்ற மாற்றங்கள் பல உள்ளன.” 

மணமக்களிடம் பேசிய அமைச்சர், மணப்பெண்களை அவரவரின் கணவர்களிடம் பேசி குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்ய அறிவுறித்தினார். குடிப்பழக்கத்தின் கேடுகள் பற்றி அவர்களிடம் விளக்க கேட்டுக்கொண்டார். இதில் அவர்கள் மாறவில்லை என்றால் மரக்கட்டைகளை பயன்படுத்த சொன்னார். 

மணப்பெண்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அதை நடச்சொன்னார். பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பையும் வழங்க வலியுறுத்தினார் அமைச்சர்.